Sunday, December 12, 2010

பிளாஸ்டிக் ஒழிப்பு

  மதுரையில் வருகின்ற புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் . அதற்க்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.
    உலகம் முழுவதும் பரவி உள்ள பிளாஸ்டிக் உடனடியாக ஒழிக்க முடியுமா....? பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஷ்டிக் அரக்கானை , நரகாஸ்வரனை அழித்தது தீபாவளி கொண்டாடுவது போன்ற எளிமை அல்ல , ஆனால் அது போல ஒரு கொண்டாட்டம் தான் . மக்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது அல்லது முற்றிலும்  புறக்கணிப்பது என்று நினைத்து உள்ளார்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஸ்டிக்கை முறையாக பயன்படுத்துவதாகும். சமிபத்தில் எக்ஸ்ரோனா அமைப்பு இதில் மதுரை கே.கே.நகர் பகுதில் குப்பைகளை தரம் பிரித்து காசாக்கி உள்ளது . இதனால் மக்களுக்கும் பயன் தான் . ஆகாவே நாம் எப்படி பிளாசிடிக் பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும். டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக நாம் காகித கப்புகளை பயன் படுத்தலாம். டீ கப்புகள் முறையாக பயன்படுத்தாததால் அவைகள் மண்ணுக்குள் சென்று மண் துளைகளை அடைத்து நிலத்தடி நீர் தேங்குவதை குறைகிறது. இதனால் மண் வளம் குறைகிறது.

  அதுபோல் கடைகளுக்கு சென்று பொருள் வாங்கும் போது , துணிப்பைகளை கொண்டு செல்லலாம், உணவகங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கலாம். வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து ,மறுசுழலர்ச்சிக்கு அனுப்பலாம். அதனை நமக்கும் பயனுள்ள வழியில் காசாக்கலாம். பள்ளிகளில் குழந்தைகளுக்கு முறைப்படி பிளாஸ்டிக் உபயோகத்தை கற்றுத்தரலாம்.

     பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்ப்பது ஆகாது , அது பிளாஸ்டிக் முறையாக பயன்படுத்துவது ஆகும்.

14 comments:

Mohan said...

சரியாக சொன்னீர்கள்....

vasu balaji said...

/பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்ப்பது ஆகாது , அது பிளாஸ்டிக் முறையாக பயன்படுத்துவது ஆகும்/

இதான் சரி. நல்ல பகிர்வு

சென்னை பித்தன் said...

பயனுள்ள இடுகை.எல்லோரும் உணர்ந்து செயல் பட வேண்டும்.

arasan said...

இன்றைய நிலையில் மிக தேவையான பதிவு .. வாழ்த்துக்கள் ஆசிரியரே..

ஆமினா said...

தேவையான பதிவு

பகிர்வுக்கு மிக்க நன்றி

ADMIN said...

வணக்கம் சரவணன் சார்..! நீண்ட நாட்கள் ஆயிற்று தங்கள் வலைப்பதிவுக்கு வருகை தந்து..! அனுபவ ரீதியாக மிகவும் பயனுள்ள பதிவுகளை தருகிறீர்கள்..! எளிமையான வார்த்தைகள்..! தொடருங்கள்..!வணக்கங்களுடன், தங்கம்பழனி!

நீச்சல்காரன் said...

நல்ல செய்தி அண்ணே

சுவாமிநாதன் said...

பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஸ்டிக்கை முறையாக பயன்படுத்துவதாகும். அருமயான வார்த்தை கண்டிப்பாக கைகொடுப்போம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.எழுத்துப் பிழைகளை கவனிங்க ஆசிரியரே.

மாதேவி said...

நற்செய்தி.

Thenammai Lakshmanan said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு சரவணன்

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

சென்னை பித்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Anonymous said...

எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com

Post a Comment