Thursday, April 29, 2010

ஆறு கேள்விகளுக்கு பதில் ....!

 ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் இரண்டாயிரத்து இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆசிரியர்களை தேர்வு செய்தனர். தற்சமயம் , வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்கின்றோம். அவர்களின் சான்றிதழ் மட்டும் சரிபார்க்கப் படுகின்றன. சான்றிதழின் கல்வி தகுதியின் அடிப்படையில் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு, அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு பெற்றிருந்தால் போதுமானது.

      நீங்கள் கேட்பது புரிகிறது . அவர்களின் கற்பித்தல் அறிவு திறன் சோதிக்கப்படுவதில்லையா...?பொது அறிவு திறன் சோதிக்கப் படுவதில்லையா  ...?  பாவம் ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வானவர்கள் மட்டும் , நன்கு படித்து, தகுதி மேம்படுத்தியவர்கள் ஆகவே தான் அவர்கள் மட்டும் திறமையின் அடிப்படியில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படியில்  தேர்வாக முடிந்தது.

      அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் , மாநில முதல் மதிப்பெண்ணை தரும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் திறமை பெற்ற ஆசிரியர்கள் ஆவர். அவர்களால் மட்டுமே மாணவர்களை மாநில முதல் மதிப்பெண் பெறச்செய்ய முடியும் திறமை உள்ளது என்று நம்பும் நிர்வாகத்தின் மதிப்பு பெற்ற ஆசிரியர்கள்.அவர்களை அரசு பணிக்கு  செல்லாமல் பணம் கொட்டி கொடுத்து  தங்களிடமே தக்க வைக்க ரெடியாக இருந்த நிர்வாகம். இருப்பினும், பல ஆசிரியர்கள் , மெட்ரிக் பணியை விட்டு அரசு பணிக்கு வந்தனர்.

        என்னுடைய கேள்வியெல்லாம்
1.  இப்படி திறமையும் தகுதியும் படைத்த ஆசிரியர்களால் ஏன் நம் அரசு பள்ளி மாணவர்களை மாநில தரத்தில் பயிற்றுவிக்க முடிய வில்லை.?

2. ஏன் இதுவரை அதாவது கடந்த நான்கு வருடம் பணியாற்றி இருக்கும் இவர்களால் , இது மாதிரி மாநில மதிப்பெண் கொடுக்க இயலவில்லை  என்பது குறித்து கல்வி அதிகாரிகள் சிந்திப்பார்களா..?

3.அதுவும் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே மாறுதல் பெற்றும் அவர்களால் தங்கள் திறமையை வெளிபடுத்தாதற்கு காரணம் என்ன..?அவர்களுக்கு என்ன இடர்பாடு உள்ளது இது பற்றி கல்வி அதிகாரிகள் ஏன் இதுவரை சிந்திக்கவில்லை.?

4. அவர்கள் திறமை குன்றிவிட்டதா  ...? இல்லை அவை முறையாக பயன் படுத்தப்படவில்லையா...?இதை ஆசிரியர்கள் தான் கூற  வேண்டும்.

5.நம் அரசு பள்ளி மாணவர்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதா....? அதனை சரிசெய்ய அவர்களுக்கு தெரிய வில்லையா..?

6.வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா...?

தயவு செய்து இதற்கான காரணங்களை கல்வி அதிகாரிகள் சிந்திக்கவும்.
 
பிளாகர்களே...என் அருமை வாசக நண்பர்களே தயவு செய்து உங்களால் இந்த ஆறு கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரிந்தால் கருத்திடவும்.

    என் சக நண்பர் கல்யாணம்  சொல்லும் போது...."மாணவர்கள் தான் மாநில மதிப்பெண் எடுக்க தம் சூழ்நிலையை மாற்ற வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு படிக்கும் சுழல் மெட்ரிக் பள்ளிகளில் அதிகம். எனவே , ஆசிரியர்கள் தங்கள் திறமையை கொண்டு எளிதில் அனைவரையும் அதாதவது நூறு  சதவீதம் தேர்ச்சி பெற செய்வது எளிது. மேலும் ஏதாவது ஒரு மாணவனை மாநில முதல் மதிப்பெண் பெறச்செய்வதும்  எளிது " என்றார்.
 அவரிடம் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிய வில்லை .

"ஏன் நம் பள்ளி  மாணவர் மனநிலையை மாநில முதல் மதிப்பெண் பெறக் கூடியதாக அல்லது போட்டி மனப்பான்மை உடையாதாக மாற்ற முடியவில்லை. ஏன் இந்த ஆசிரியர்கள் தம் திறமையை அவர்களிடம் கொண்டு செலுத்த இயலவில்லை....? அல்லது இவர்கள் தேங்கி விட்டார்களா...? " என்றேன்.அதற்கு  அவர்
    "அரசு அதிகாரிகளின் மெத்தன போக்காக இருக்கலாம்....?அல்லது ஆசிரியர்கள் தேங்கி விட்டமாதிரி காட்டிக் கொண்டு இருக்கலாம்...அரசு அதிகாரிகள் முறையாக அவர்களை வேலை வாங்கினால் அரசு பள்ளிகள் என்றும் மாநில முதல் மதிப்பெண் பெறும்" என்றார்.

2 comments:

ரோகிணிசிவா said...

//அரசு அதிகாரிகளின் மெத்தன போக்காக இருக்கலாம்....?அல்லது ஆசிரியர்கள் தேங்கி விட்டமாதிரி காட்டிக் கொண்டு இருக்கலாம்...அரசு அதிகாரிகள் முறையாக அவர்களை வேலை வாங்கினால் அரசு பள்ளிகள் என்றும் மாநில முதல் மதிப்பெண் பெறும்" என்றார்//
-JUST LACK OF PROFESSIONALISM,NOTHING ELSE ,
EVERYONE THINKS IF U GET QUALIFIED TO GET GOVT POSTING THEN U CAN RELAX,
BUT I CANT BLAME IN GENERAL ,THERE ARE SOME GOVT SCHOOLS WHO GIVE BEST OR ATLEAST GOOD RESULTS.

AkashSankar said...

உண்மையில் நல்ல கருது தேர்வாணையம் சிந்திக்குமா ?

Post a Comment