Wednesday, April 28, 2010

கிராமம் முன்னேற வழி ....?

       இந்தியா விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். நம் நாட்டின்  பொருளாதார வளர்ச்சி , விவசாயத்தை சார்ந்தே உள்ளது. இவை யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால், நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து , இன்று வரை விவசாயத்தில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் ? இன்று நம் பொருளாதாரம் நிச்சயமாக விவசாயத்தை சார்ந்து உள்ளதா? என்பதை போன்ற கோள்விகளுக்கு பதில் அளிக்கும் முன் கீழ் கண்ட கவிதையை படிக்கவும்.

 
        நெல் போட்டேன்
         லாபம் இல்லை...
       சோளம் போட்டேன்
          எதுவும் கிடைக்கவில்லை...
       பருத்தி போட்டேன்
         அதுவும் விலங்கவில்லை...
     பிளாட் போட்டேன்
        ஆஹா ..ஓஹோ...
     என பணம் கொட்டியது....!

      விவசாயம் இப்படி இருக்கும் போது ,  நாம் எதற்கு எதற்கோ புதிது புதிதாக பாடத்திட்டங்களை ஆரம்பக் கல்வியில்   ஏற்படுத்துகிறோம். சாலைவிதிகள் சம்பந்தாமாக இன்று மூன்றாம் வகுப்பிலிருந்து கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், விவசாயம் சார்ந்த படிப்பை நாம் என்றாவது சிந்தித்துள்ளோமா! அதற்காக நாம் முயற்சிகளாவது எடுத்துள்ளோமா?

      எனக்கு விவரம் தெரிந்து , தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மட்டும் தான் விவசாயக் கல்லூரி உள்ளது. வேறு எந்த கல்லூரியும் உள்ளதாகத் தெரியவில்லை. வேறு எந்த பல்கலைக்கல்லூரியிலும் விவசாயம் சார்ந்த படிப்பு இருப்பதாக தெரியவில்லை. தொலைதொடர் கல்வியிலும் விவசாயம் சார்ந்த படிப்பு இருப்பதாகத் தெரிவதில்லை.ஆனால் நாம் விவசாயம் சார்ந்த நாடு.

     நகர ஈட்டுப்படி இன்று நகரங்களுக்கு வழங்கப் படுவது போல் , கிராம ஈட்டுப் படி வழ்ங்க ஏற்பாடு செய்யலாமே..?
    அன்று வெள்ளைக்காரன் தன் நகர வாழ்வை வசதிமிக்கதாக மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்தது தான் , நகர ஈட்டுப்படி . நாம் ஏன் கிராமங்களை வளப்படுத்த கிராமங்களுக்கு ஈட்டுப் படி கொடுக்கலாமே...!
     இன்று ஆசிரியர்கள் கூட கிராமங்களுக்கு சென்று வேலை பார்க்க மறுக்கின்றனர். நகர ஈட்டுப்படி அவர்களை ஈர்க்கிறது. கிராம ஈட்டுப்படி கொடுத்தால், நகரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் இருந்தாலும் , கிராமங்களுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் கிராமங்கள் விழிப்புணர்வு ஏற்படும். விவசாயம் சார்ந்த துறை முன்னேற , அரசு கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு.

      கிராமங்களில் தான் குழந்தைகள் அதிகம் . அதேபோல் , பள்ளிச் செல்லாக் குழந்தைகள் சதவீதமும் அதிகம். அதுசரி , பள்ளிக்கு செல்லவில்லை, விவசாயம் சார்ந்த தொழிலையாவது மேற்கொள்கின்றனர் என்றால் இல்லை.அதுவும் நகரம் சார்ந்த தொழிலையே நம்பி பிழைக்கின்றனர்.

   ஆகவே,நாம் தொடக்கக் கல்வி நிலையிலே விவசாயம் சார்ந்த படிப்பை மாணவர்களுக்கு தருவதன் மூலம் நம் முதுகொழும்பை நிமிர்த்தலாம்.

  விவசாயம் நமக்கு கை கூடாதது ஏன்...? கடல் சார்ந்த ஜப்பான் கூட , மொட்டைமாடியில் விவசாயம் செய்து புரட்சி ஏற்படுத்தி உள்ளது. நம்மால் ஏன் இயலவில்லை...கருத்திடவும்.

9 comments:

Unknown said...

என் எதிர்கால திட்டமே , விவசாயம்தான்

வவ்வால் said...

Ungalukku oru 1947 la ninaivu therinju irukkuma?! Agri colleges list- kovai,madurai,trichy -2,periyakulam,mettupalayam,karaikal all under tnau,chidambaram annamalai and melmaruvathur both pvt. But mostly there is no employment opportunities for them.

வவ்வால் said...

Mbbs correspondancela padikka mudiyuma?athe pola than agrium.but agri related short term distance education course tnau la irukku like mush room cultivation,sericulture,mooligai pannai,aadu valarpu(vet univ)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உங்க கவிதை நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

சிறந்த இடுகை சிந்தனையைத் தூண்டியது சரவணன்

AkashSankar said...

இதற்கு அடிப்படை காரணமே திறந்தவெளி சந்தையே... இன்று அரசாங்கம் முட்டு கொடுத்துகொண்டிருகிறதே பி.டி கத்திரி காய்.. நம் விவசாயிகளின் ரத்தம் உறுஞ்சும் பன்னாட்டு நிறுவனத்தின் வளர்ச்சியே காரணம்...

Unknown said...

hi you are great.namai patri sinthikkave neram illatha soolnilaiyil neengal nattai athuvum gramathai patriya sinthanai varaverkka thakkathu.ungalai valthukiren.

Muthukumar said...

சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

Muthukumar said...

சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

Post a Comment