Monday, April 26, 2010

தமிழில் வார்த்தைகளின் பொருளை நினைவில் வைப்பது எப்படி?

       மாணவர்கள் ஒர் வார்த்தையின் பொருளை நன்கு மனப்பாடம் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து , வாக்கியங்கள் அமைக்க எளிதாக முடியும். வாக்கியங்களின் அமைப்பு , மாணவனின் மொழி வளம் வளமையடைய உதவும்.

         மாணவர்களை மூன்று குழுவாகப் பிரிக்கவும். ஒரு குழுவில் குறைந்தது , ஐந்து அல்லது ஆறு நபர்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு குழுவிற்கும் குறைந்தது எட்டு அல்லது பத்து வார்த்தைகளைக் கொடுக்கவும் . அனைத்து குழுவிலும் அதே வார்த்தைகள் கொடுக்கவும்.

      முதல் குழுவினரை அவ்வார்த்தைகளின் அருஞ்சொற்பொருள் கண்டுபிடித்து , அந்த அருஞ்சொற்பொருளைக் கொண்டு வாக்கியங்கள் அமைக்க சொல்லவும். உ.ம்: மாதா=அம்மா, தாய், அன்னை.

      இரண்டாவது குழுவினரை அவ்வார்த்தைகளின் எதிர்சொல் கண்டுபிடித்து , அந்த எதிர்சொல் கொண்டு , வாக்கியங்கள் அமைக்க சொல்லவும். உ.ம்.: எதிரி x நண்பன், தோழன்,

மூன்றாவது குழுவினரை அருஞ்சொற்பொருள் , எதிர்சொல் தவிர்த்து, அதன் ஆண் பால் அல்லது பொண் பால் ,அல்லது செய்யுளின் வேறு பயன்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாக்கியங்கள் அமைக்கச் செய்யலாம்.உ.ம். அம்மா விற்கு தந்தை, பிதா

   பின்பு அனைத்து குழுவினரையும் ஒன்றாக அமரச்செய்து , ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவனை அமைத்து , அக்குழுத்தலைவனை தங்கள் எழுதிவைத்துள்ள வாக்கியங்களை வாசிக்கச் செய்வதன் மூலம் அனைவருக்கும் ஒரு சொல்லின் பொருளினை நன்கு மனப்பாடம் செய்வதுடன் , அதன் பயன்பாட்டையும் அறியச்செய்யலாம். முயன்று பாருங்கள்.


குறிப்பு: ஆசிரியர்கள் குழுவினை தொடர்ந்து கவனித்து , அனைத்து மாணவரின் பங்கேற்பு உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரின் பங்களிப்பு இருக்கும் வண்ணம் குழுவில் அனைத்து மாணவர்களும் தனித்தனியாக வாக்கியம் அமைக்க ஆசிரியர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

1 comment:

Balakumar Vijayaraman said...

எளிதாக பயிற்றுவிக்கும் முறை.

Post a Comment