Sunday, April 25, 2010

எரிபொருள் நெருக்கடி

    சமீபத்தில் என் சக ஊழியரின் கணவருடன் பேச நேர்ந்தது. அவர் ஈ.பி யில் இஞ்ஞினியராக வேலைப் பார்க்கிறார். அவருடன் தற்சமயம் ஏற்படும் பவர் கட் பற்றி பேசினேன்.அப்போது அவர் நம்மிடம் உள்ள வளங்கள் போதுமானதாக இல்லை. மழை பெய்தால் மட்டும் மின்சார பற்றாக் குறையை தீர்க்க முடியும். அதுவும் ஆறு,ஏரி, குளம், கம்மாய் என அனைத்தும் நிரம்பி வழிய வேண்டும் என்றார்.

  தற்சமயம் விசயத்திற்கு வருவோம் . நம்மிடம் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் மற்றும்
 புதுப்பிக்கப்பட முடியாத வளங்கள் என இரண்டு வளங்கள் உள்ளன. புதுப்பிக்கக் கூடிய வளங்களான மரம் , மழை போன்றவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் , மேலும் , அவற்றை நாம் சேமிக்க வேண்டும். மரங்கள் வளரும் வேகத்தைவிட , வேகமாக மரங்கள் வெட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். அதேபோல் , நீர் நிலைகளை மாசுப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

  
    எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற வளங்கள் ஒருமுறை பயன் படுத்தினால், மீண்டும் பயன்படுத்த முடியாது. நிலக்கரி படிமங்கள் இன்னும் முந்நூறு ஆண்டுகள் வரை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இவை விரைவில் தீர்ந்து போகும்.

   அதுசரி வளங்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது. ...?

மரங்கள் அதிகம் வளர்ப்போம். மழை வளம் பெருக்குவோம். மழை தொடர்ந்து பொழிந்தாலே, காற்று நன்றாக வீசும் . மேலும் , நாம் மழை மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். நீர் நிலைகளை அசுத்த நீர்களால் மாசுபடுத்தும் போது , அங்குள்ள உயிரினங்கள் மடிந்துவிடும். நீர் மாசடைந்து , பயனற்றுப்போகும். நெகிழி
மண்ணில் புதைவதை தடுக்கவும்.

      அதுமட்டுமல்ல நாம் வீட்டை விட்டு வெளிவரும் போது அனைத்து விளக்கும் அணைக்கப்பட்டுள்ளதா எனப்பார்க்கலாம். முடிந்தால் மெயினை அணைத்துவிட்டு வெளியேறலாம். நாம் பாத்திரம் கழுவும் போது , தண்ணீர் குழாயை திறந்து அதிக நீர் வெளியெறுவதை குறைக்கலாம். குளிக்கும் போது, பல் துலக்கும் போது தண்ணீர் அதிகமாக வெளியேறுவதை தடுத்து நீரை சேமிக்கலாம்.   தெருவிளக்குகள் அதிகாலை வெளிச்சம் வந்தபின் எரிவதை தவிர்க்கலாம். மாலைவேளையில் வெளிச்சம் இருக்கும் போதே தெருவிளக்குகளை எரிவதை தடுக்கலாம். விழாக்களில் அதிகமான விளக்குகள் எரிவதை குறைக்கலாம். கோயில் திருவிழாக்களில் மின்சாரம் அதிகம் செலவாவதை தடுக்கலாம். நாம் உள்ள அறையில் மட்டும் விளக்குகள் எரியும் படி பார்த்துக்கொள்ளலாம். பொருள்களை மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தி (காகிதம், மர சாமான்கள்) மரம் வெட்டப்படுவதை தவிர்க்கலாம்.

  இவ்வாறு செய்தாலே நாம் தொடர்ந்து மின்சாரம் பெறலாம்.

3 comments:

AkashSankar said...

பின்பற்றவேண்டியவை...

Balamurugan said...

நன்று.
மேலும், சோலார் மின் உற்பத்தியைப் பெருக்கலாம்.

ரிஷபன் said...

அரசியல்வாதி வருகிறார் என்றால் எத்தனை மின் விளக்குகள்.. மாநாட்டில் எத்தனை மின்சாரம்.. நமது தேவைகள் அதிகரித்துவிட்டது.. ஈடாக உற்பத்தி பற்றி கவலைப் படவில்லை..

Post a Comment