Saturday, April 24, 2010

பொருட்காட்சியில் என் மனைவி....

     நேற்று என் மனைவி மதுரை சித்திரைப் பொருட்காட்சிக்கு சென்றார். என் தங்கை, என் தம்பியின் மனைவி,மற்றும் அனைவரின் குழந்தைகளை அழைத்துச் சென்றார்.அனைவரும் சந்தோசமாக பொருட்காட்சியை கண்டு ரசித்தனர். சிறுவர்கள் விரும்பிய ராட்டினம் ,டோரா டோரா, சிப், போட் அனைத்திலும் எற்றிவிட்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து விட்டு. குழந்தைகள் விரும்பிய விளையாட்டுப் பொருள்கள் மற்றும் திண்பண்டங்கள் வாங்க கடைகளுக்கு சென்றார்.

     அனைத்துக் கடைகளிலும் நெகிழி வேண்டாம் என்று கூறிஇருக்கிறார். அனைத்துக் கடைகளிலும் ”ஏன்..? வாங்கினா தப்பா...? என்ன பெரிசா...தப்பா ஆயிடும்...?” என்று கேள்விகளால் கேலி செய்துள்ளனர்.அனைவருக்கும் பொறுமையாக பதில் கூறியுள்ளார்.
பலர் ..”இவள் ஒருவளால் ஊரே திருந்திவிடுகிற மாதிரி போசுகிறாள் “ என காது பட கூறியுள்ளனர்.
          அனைவருக்கும் அவர் சொன்னக் கதை இதோ...”சமீபத்தில் ஒரு ஆசிரியர் கிராமத்திற்கு மாணவர்களுடன் கேம்ப் சென்றுள்ளார். அப்பகுதி முழுவதும் நெகிழிகளால் மண் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு,நெகிழியின் பாதிப்பை வீடு வீடாக சென்று கூறியுள்ளார். ஆனால் , அனைவரும் நெகிழியை சாதாரண உப்பு வாங்கி வரக்கூட பயன் படுத்தி உள்ளனர். எப்படியாவது கிராமத்தை சுத்தப் படுத்த நினைத்தார். அனைவரும் கேலி செய்துள்ளனர். பின்பு ஒரு முடிவெடுத்து , அப் பகுதியில் உள்ள கடைகளில் எல்லாம் , துணிப்பை ஒன்றைக் கொடுத்து இனி இதில் பொருட்களைக் கொடுங்கள் , பாலித்தீன் பை கொடுக்காதீர்கள். பொருட்களை காகித பையில், அல்லது காகிதத்தில் மடித்துக் கொடுங்கள் என்று அன்புக் கட்டளைக் கொடுத்தார்.  அனைவரும் அப்படியே துணிப்பையில் கொடுத்தார்கள். அனைவரும் துணிப்பையில் கொண்டு சென்றாலும் ,மீண்டும் துணிப்பையை கடைகளில் கொண்டு கொடுக்க வில்லை. ஆகவே, அந்த வீடுகளில் சென்று மீண்டும் துணிப்பை எடுத்து கடைகளில் கொடுத்து , அந்த கிராமமே நெகிழி இல்லாமல் இருக்கிறது...”


   ஒருவர் முயற்சியால் கிராமம் திருந்தியது போல் , நாம் அனைவரும் முயற்சி செய்தால் ...நகரம் திருந்தும் , பின்பு உலகமே..நெகிழி அற்று தூய்மையாக மாறும். கேலி செய்வதை விட்டு ...நம்மை திருத்த முயற்சி செய்யுங்கள் ...அனைவரும் திருந்துவர்.

நெகிழியின் கெடுதிகள் பற்றி என் மனைவி விளக்கியவை ....

1. பிளாஸ்டிக் மண்ணில் மக்குவதில்லை.

2. மழை நீரை மண்ணிற்குள் செல்ல விடுவதில்லை.

3. மரம்,செடி, கொடிகளை அழிக்கிறது.

4. உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் தேங்கும் நீர் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உருவாக்குகிறது.

5. ஆற்றின் நீரோட்டம் தடுக்கிறது.

6. நீர்வாழ் உயிரினங்களின் உணவோடு பிளாஸ்டிக் கலந்து , உயிரிழப்பு ஏற்படுகிறது.

7. பிளாஸ்டிக் எரிப்பதால் ஏற்படும் விஷ வாயு காற்றில் கலந்து, மனிதனுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறாக நீர், நிலம், காற்று என அனைத்தையும் பாதிக்கும் பிளாஸ்டிக்கை நாம் முயற்சி செய்து , அதன் பயன்பாட்டை குறைத்து , அவற்றை ஒழிக்க வேண்டும்.

யார் கோலி செய்தாலும் , நாம் நம் கொள்கையை விட்டு விடாமல் , அதனை தொடர்ந்து செயல் படுத்தினால், நிச்சயம் வெற்றிப் பெறலாம்.

பிளாஸ்டிக் தவிர்ப்போம். உலகை காப்போம்.

22 comments:

கவிதன் said...

உங்கள் சமூக அக்கறை நெகிழ்ச்சியடையச் செய்கிறது சரவணன் சார்.... இனைந்து செயலாற்றுவோம்....

Ananya Mahadevan said...

அருமையான கருத்து. ப்ளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்! இங்கே பயோ டிக்ரேடிபிள் ப்ளாஸ்டிக் கவர்கள் தான் தருகிறார்கள். இது சுற்றுப்புறத்தை மாசு படுத்தாத வகையாம், மக்கும் தன்மை கொண்டதாம். எல்லோருக்கும் இந்த விழிப்புணர்வு வரணும்.

Ahamed irshad said...

அருமையான பகிர்வு.

எல் கே said...

arumai thozare

Balamurugan said...

நல்ல கருத்து நண்பரே.

பத்மா said...

சரியாய் சொனீங்க சரவணன்

கனிமொழி said...

நல்ல பகிர்வு.

தருமி said...

நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய ஒன்று.

Unknown said...

//ஒருவர் முயற்சியால் கிராமம் திருந்தியது போல் , நாம் அனைவரும் முயற்சி செய்தால் ...நகரம் திருந்தும் , பின்பு உலகமே..நெகிழி அற்று தூய்மையாக மாறும். கேலி செய்வதை விட்டு ...நம்மை திருத்த முயற்சி செய்யுங்கள் ...அனைவரும் திருந்துவர்.//

எல்லோருக்கும் இந்த விழிப்புணர்வு வரணும்.

மாதேவி said...

நல்ல விழிப்புணர்வு.முயற்சிப்போம்.

சந்தனமுல்லை said...

Gud one!

Sri said...

அருமையான கருத்து....

Srini

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//யார் கோலி செய்தாலும்//

???

துளசி கோபால் said...

//யார் கோலி செய்தாலும் ,...//

கோலி? கேலி என்றிருக்கணும்.

அது இருக்கட்டும். நான் தற்போது வசிக்கும் நகரில் கடைக்கார்கள் எந்தப் பையுமே கொடுப்பது இல்லை. நாம்தான் வீட்டில் இருந்து பை எடுத்துக்கொண்டு கடைக்குப் போகணும். (முந்தி நாங்க சின்னப்பிள்ளைகளா இருக்கும் காலத்தில் எல்லா ஊர்களிலும் இப்படித்தான் இருந்துச்சு)

இது தெரியாமல் கடைக்குப் பால் வாங்கப்போயிட்டோம். செய்தித்தாளில் சுற்றிக் கொடுத்தாங்க வீடு வருவதற்குள் அது ஈரம் பரவிக் கிழிஞ்சு போயிருச்சு. நல்ல அனுபவம். இப்பெல்லாம் மறக்காமல் பைகள் எடுத்து வச்சுக்கறோம்.


PIN குறிப்பு: பால் மட்டும் அரை லிட்டர் ப்ளாஸ்டிக் பையில் வருது!!!!!

உங்கள் மனைவிக்கு இனிய பாராட்டுகள்.

Anonymous said...

//இவள் ஒருவளால் ஊரே திருந்திவிடுகிற மாதிரி போசுகிறாள் “//
ஒவ்வொருவரும் திருந்தினால் நிச்சயம் மாற்றம் இருக்கும். மாற விரும்பாதவர்க்கள் பேசும் வசனம் இது.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அன்புடன் நான் said...

நெகிழ வைத்தது உங்க நெகிழி பதிவு.

அன்புடன் நான் said...

உங்க சமூக அக்கறைக்கு எனது பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

நெகிழியைத்தவித்த உங்க மனைவிக்கும் ,
நெகிழியை தடைசெய்த அந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எனதினிய பாராட்டுக்கள்.

venkatapathy said...

CARRY BAGS ARE BANNED IN OUR TOWN BODINAYAKANUR BY OUR COMMISSONOR. ITS 100% TRUE

சஞ்சயன் said...

சூழல் பாதுகாப்பு பற்றிய பிரக்ஞை எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
”பலர் ..”இவள் ஒருவளால் ஊரே திருந்திவிடுகிற மாதிரி போசுகிறாள் “ என காது பட கூறியுள்ளனர்””
பலரின் மனோபலத்தை கலங்கடிக்கும் அமில வார்த்தைகள் இவை.

Post a Comment