1. நீங்கள் கொளுத்தும் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும்.
2. நீரை சுடவைத்து ,குளிர்ந்த பின் ,அதிகமாக பருகவும். சுத்தமான நீராக இருந்தால் , மட்டுமே வெளியில் தண்ணீர் அருந்தவும். நீரினால் , கோடையில் அதிகம் நோய் பரவ வாய்ப்புண்டு.
3. மாங்காய் , புளியங்காய் போன்ற புளிப்பான திண்பண்டங்களை அதிகம் உண்டால்,உடம்பு உஷ்னாமாகி ,அஜிரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கு உண்டாகலாம்.
4. காலைவேளையில் நடனம், ஓவியம் வரைதல், மண்பானை ஓவியம் ,டைப் கற்றல் போன்ற கட்டிடத்திற்க்குள் இருக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
5. அதிகாலை அல்லது மாலையில் உடற்பயிற்சி கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட் , புட்பால் போன்ற விளையாட்டுக்களை உச்சி வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும்.
6. வீட்டிற்க்குள்ளேயே விளையாட கடிதம் எழுதுதல், போனா நண்பர்கள் தொடர்பு எற்படுத்துதல், தாயம் , பன்னாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடலாம். வார்த்தை விளையாட்டு , பாடல் விளையாட்டு, வார இதழ்களில் வந்துள்ள படங்களை வெட்டி புதிய மார்டன் படங்களை செய்யலாம்.
7. பள்ளி பாடிப்பு என்பது நமக்கு வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் தரக்கூடியது. நாம் நம் புத்தகத்தில் படித்த இடங்களை தாய் , தந்தையுடன் சென்று பார்வையிட்டு அங்கு காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , அங்குள்ள மக்களின் காலாச்சாரம் , பண்பாடு, மொழி, இனம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ளவும். மேற்கண்ட தகவல்களை செல்லும் இடங்களில் சேகரித்து கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றவும்.
8. வீட்டில் கணிணி இருந்தால் , புதிய மொழியினைக் கற்றுக்கொள்ளலாம். மேலும் புதியவர்கள் பெயிண்ட் பிரஷ் , வோர்ட் கற்றுக்கொள்ளலாம். கணிணி இயக்கத்தெரிந்தவர்கள் கோரல் ட்ரா, அனிமேசன் கற்றுக்கொள்ளலாம்.
9. புத்தகங்கள் படிப்பதன் மூலம் நம் அறிவை விருத்தி செய்யலாம். மேலும் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க , தாங்கள் சென்றுள்ள ஊரிலுள்ள நூலகத்திற்க்கு சென்று புத்தகங்களைப் படித்து கோடையைப் பயனுள்ளதாக மாற்றலாம்.
10௦. தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து , அருகில் உள்ள நர்சரிக்கு சென்று மரக்கன்றுகளை வாங்கி நடலாம். பாலித்தீன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் பகுதியை குப்பையில்லாப் பகுதியாக்க நண்பர்களுடன் முயற்சியில் இறங்கலாம். பெரியவர்களிடம் தேவையான உதவி நாடலாம் .
1 comment:
நல்லா சொல்லியிருக்கீங்க. நீங்க கூறும் கருத்துக்கள் எல்லாம் வரப் போகும் எதிர்கால இளைஞனுக்குத் தேவையான ஒன்று மறுப்பதுக்கு இல்லை. ஆனா சின்ன வயசு பசங்களை இந்த கோடை வெய்யில் ஒன்னும் பண்ணாது. வெய்யிலில் ஆடி ஓடி பேட்டை எடுத்துக் கிட்டு தெரு தெருவாய்த் கிரவுண்டு, கிரவுண்டா சுத்தனும். கன்னம் கருவழிஞ்ச்சு, உஷ்ணம் மண்டை பிளக்க விளையாடி, வேர்த்துப் பூர்த்து விளையாடி, தர்ப்பூஸ், நொங்கு சாப்பிட்டு இளைப்பாறி. சாப்பிட்டு பகலில் தூங்கி கண்ட மேனிக்கு அலைஞ்சு. அடிக்கற வெய்யிலில் ஆத்து மோட்டுக்குப் போயி, கிணத்துக்குப் போயி டைவ் அடிச்சு, 60 அடி கிணத்துல ஜஸ் நம்பர் விளையாடி, கரும்புக் காட்டில் கரும்பு, சோளக்காட்டில் சோளக் கருது, தட்டைக்கா வயலில் பச்சைத் தட்டைக்காய் திருடித் தின்றுதான் நாங்க எல்லாம் சம்மர் ஹாலிடேஸ் செலிபரோட் பண்ணினேம். அதுனாலதான் 42 வயசிலும் கண்ணாடி போடாமல், பிபிக்கு மாத்திரை சாப்பிடாமல் இருக்கோம். நன்றி.
Post a Comment