Monday, April 26, 2010

நம் குடும்பம் எப்போது...?

அவன் குடும்பம் ...
ஒரு எட்டு முன்னேறியது.....
அவன் குழந்தை பள்ளிக்கு சென்றது....!


அவன் குடும்பம்
பெரிய மனம் படைத்ததாக மாறியது....
அம்மா! என்றவனுக்கு
அவன் குழந்தை பசி போக்கியது ....!

அவன் குடும்பம்
பாக்கியம் படைத்ததானது...
கிராமத்து மருத்துவராகி
அவன் குழந்தை சேவை செய்தது ...!.

நம் குடும்பம் எப்போது...?

2 comments:

ஹேமா said...

ம்ம்ம்...ஒரு எதிர்பார்ப்பு,ஆதங்கம் கவிதையாக !

Thenammai Lakshmanan said...

மிக அருமையா ஒரு ஆதங்கத்தை துளியும் பொறாமை இல்லாம சொல்லி இருக்கீங்க சரவணன்

Post a Comment