Saturday, April 17, 2010

வறுமையும் வளமை தரும்

    இன்று நாம் வறுமையின் பிடியில் நம் நிஜத்தை இழந்து, நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.தாழ்வதனால், நம் நம்பிக்கையை இழந்து விடுகிறோம். நம்பிக்கை வாழ்வின் உயர்வுக்கான டானிக் ஆகும். வறுமை என்றும் வளமைக்கு எதிரியாக இருந்தாலும், அந்த வறுமை போக்க நம் உழைப்பின் வழியில் வெறிக் கொண்டு பிழைத்தால், வளமை நம் வசப்படும்.
     இன்று வளமையின் வசந்தத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ,இளமையில் வறுமையின் பிடியில் இருந்தவர்கள்.தம் வெறிக் கொண்ட உழைப்பால் ,வளமையை தம் வசப்படுத்தியவர்கள்.ஆகவே, நாமும் வெறிக் கொண்டு உழைத்து , நெறிக் கொண்டு பிழைத்து ,வாழ்வில் வறுமைப் போக்கி , வளமை பெருக்கி வசதியாக வாழ்வேம்.

    இதோ , வறுமையை வளமாக்கியவர்கள் பட்டியல்.

1.  ஏழை விறகு வெட்டியின் மகனான ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.

2. ஆங்கில அகராதியின் ஆசிரியரான “டாக்டர்.சாமுவேல் ஜான்சன்” ஒரு ஏழை புத்தக வியாபாரியின் மகன்.

3. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் , ஸ்டாலின் தான் சோவியத் நாட்டிற்கு வழிக்காட்டி ஆவார்.

4. படகுத் தொழிலாளியின் மகன் தான் பார் போற்றும் “தாமஸ் ஆல்வா எடிசன்”

5. ஒரு மெழுகு வர்த்தி வியாபாரியின் மகன் தான் உலகம் போற்றும் ஒப்பற்ற விஞ்ஞானி “பெஞ்சமின் பிராங்கிளின்”

6. ஷேக்ஸ் பியரின் தந்தையார் ஒரு குதிரை லாயத்தின் மேற்பார்வையாளராக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்தவர் என்றாலும் இறைவா புகழ் பெற்றவை அவர் எழுத்துக்கள்.

7. கண் இல்லாமல் இன்று நாம் பல படிப்புக்கள் படிக்கிறோம் .தனது மூன்றாவது வயதில் க்ண் இழந்த “லூயிஸ் பிரெய்லி” தான் கைவிரல் தடவிப் பார்த்து படிக்கும் குருடர்களின் கண்ணைத் திறந்தவர் ஆவார். கண் இழந்த லூயிஸ் பிரெய்லி தான் பிரெய்லி முறை கண்டுபிடித்தவர்.

8. ”தி ஸ்டேரி ஆப் மை லைப்” என்ற புகழ் பெற்ற நூலை தன் 22 ம் வயதிலேயே எழுதிய ’ஹெலன் கெல்லர் ’ என்ற எழைப் பெண்மணிக்கு பார்வையும் இல்லை. காதும் கேட்காது.

”வாழ நினைத்தால் வாழலாம் , வழியா இல்லை பூமியில்...”
ஆகவே , உழைப்பை நம்பு, வெறி கொண்டு உழைத்தால், நெறிக் கொண்டு , வளமையாக வாழலாம்.

“போதிக்கும் போது புரியாத கல்வி
பாதிக்கும் போது புரிகிறது”
என்ற ஆட்டோ வசனம் நினைவிற்கு வருகிறது. ஆகவே,நாமும் இது போன்று புலம்பாமல் இருக்க , இளமையில் நன்றாக படித்து, அதில் நன்றாக நம் உழைப்பைக் காட்டி , நம் வாழ்வை வளமாக ஆக்குவோம்.

2 comments:

பத்மா said...

வறுமையை கண்டு பயந்து விடாதே ...ன்னு தலைவர் தெரியாமலா பாடினார் .
in fact வறுமையும் செல்வமும் திருப்தி பெரும் மனதில் தான் உள்ளது

Ramesh said...

நல்ல பதிவு.

Post a Comment