Wednesday, April 7, 2010

இன்பமும் துன்பமும்.....

     மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது இயற்க்கை. தோல்வியை எண்ணி  நாம் சோம்பி போய் வாழ்வையே இழந்ததாகவும் , வெற்றி பெற்றதற்காக வாழ்வில் சாதித்து விட்டதாகவோ எண்ணக்   கூடாது.  கடல் என்றாலே உப்பு அதிகம் தான் . அதை  விட உப்பு அதிகமான கடலான அட்லாண்டிக் என்றால் எப்படி ? கடல் என்றாலே ஆழம் அதிகம் தான் . அதுவும் உலகிலே ஆழம் அதிகமான பசுபிக் கடலாக இருந்தால் எப்படி?  ஆம் !கடல் ஆழம், அதிகம் உப்பு என பயன் படுத்த வில்லையா...? கப்பலை கடலில் செலுத்த வில்லைய ?கடல் வழியில் சென்று அமெரிக்க மற்றும் இந்தியாவை காண்டுபிடிக்க வில்லையா?

      வாழ்வு துன்பக் கடலாய் இருந்தாலும் ,என்றும் இன்பமான  நதி பயணமாகவே இருந்து விடாது . அதற்காக கடல் பயணம் ஆபத்தானது என்று கவலை அடைந்து அப்படியே நதி பயனாமாய் மாறி , தேங்கி விடக் கூடாது. கடலில் பயணம் செய்தால் தான் நாம் நாடு கடந்து , பல இன மொழி கலாச்சரங்களை கற்று , நாம் நம் தகுதியை மேம்படுத்தி கொள்ள முடியும். கவலை மறந்து வாழ்வில்  நீந்த கற்று கொண்டால் வாழ்வு உயரும் . அறிவியல்  ரீதியாக கடலிலுள்ள  உப்புத் தண்ணீரின் ஒப்பு அடர்த்தி அளவு நதியினுடையதை விட அதிகம். கப்பலின் எடையைச் சமன் செய்யக் குறைந்த கன அளவு தண்ணீர் போதுமானது . அதனால் நதியிலிருந்து கடலுக்குச் செல்லும் கப்பல் உயரும். அது போல இன்பமான நம் வாழ்வில் துன்பங்கள் கடல் போல் பெருகி வந்தாலும் , அவை நம்மை உயர்த்தும் . துன்பத்தை கண்டு பயந்து ஒதுங்கி நின்று விடக் கூடாது.

      அரபிக்  கடலில் லட்சதீவுகள் உள்ளன. அது போல் தான் துன்பங்கள் பெருகி கடலாய் வந்து நம்மை பாடு படுத்தும் போது நம் லட்சியங்கள் கூர்மை ஆக்கப்படும். இதியாவின் மிக நீளமான அணைக்கட்டான ஹீரா குட் , அணைப் போல  மிக நீண்ட  காலமாய் கவலையை தேக்கி வைத்தல் , நம் இதயம் பலவீனப் படும். நாம் அதை நினைத்தே நம் வாழ்வை கோட்டை விட்டு விடுவோம்.ஆகவே , நம் கவலைகளை மறந்து , அடுத்த வேலைகளை கவனிப்போம் .

      கவலைகளை உதறித் தள்ளுங்கள்.இதயத்துக்குள் அடக்கி வைக்காதீர்கள். பின்பு, அவை 1919 ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் , நம் இதய அறைகளை அடைத்து கொண்டு நம்மை நாமே படுகொலை செய்வது போல் அமைந்து விடும். ஆகவே ,நம் வாழ்வு கவலைகளால்  புல் இனமான மூங்கில் போல் துளையிடப்பட்டலும், கவலை படாதீர்கள் ,அவை வாழ்வில் இனிய இசை தருவது போல் நம் வாழ்வும் இன்னிசையாய் அமையும்.

      வாழ்வில் தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள் . அது நம்மை தாழ்த்தி விடும்.தாழ்வு மனப்பான்மை என்ற தனிப் பண்பை பற்றி சுயமாக முதன் முதலில் சிந்தித்தவர் ஆல் பிரெட் ஆட்லெர் என்ற வியன்னா உளவியலாளர் ஆவார். மாகபலி புரத்தில் பாறைக் கோவில்களைக் கட்டியதால் பல்லவ அரசர்கள் போற்றப் படுகிறார்கள். அதுபோல் நம் மனதை கல்லாக்கி,பாறை ஆக்கி , தாழ்வு மனப்பான்மை அறவே அகற்றி,வாழ்ந்தால் நாமும் வாழ்வில் முன்னேறலாம்.

(என்னிடம் என் மனைவி நான்கு ஐந்து போது அறிவு வினாக்கள் கொடுத்து இதை வைத்து இடுகை போடமுடியுமா என்ற சவாலில் எழுதியது. ஒரு வரி சினிமாவுக்கு திரை கதை அமைப்பதை போன்று. ரசித்தால் கருத்திடவும். நீங்களும் இப்படி போது அறிவு விஷயம் தந்து ஒரு பதிவு போடச் சொன்னாள் , தயாராக இருக்கிறேன். )

3 comments:

தருமி said...

உங்கள் தங்ஸ் அடிக்கடி உங்களுக்கு இப்படிப்பட்ட 'சவால்'களை அள்ளித் தந்து கொண்டிருக்கட்டும்.

Balakumar Vijayaraman said...

நல்ல முயற்சி.

Balamurugan said...

தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Post a Comment