Thursday, February 10, 2011

முத்தம்

டிங் ... டிங் .. டிங்.. டிங்.. டிங் என சுவற்றுக் கடிகாரம் அடித்தது.. முனியம்மாளின் தலையில் அடித்தது போல இருந்தது. மனம் பதறி ,சாமி மாடத்தின் கீழே நோக்கின கண்கள் .சுரேஷின் புத்தகப் பையை காணவில்லை. மாவு அரைக்கும்  அவசரத்தில் ,மணி ஐந்து ஆனதை கவனிக்கவில்லை.  தவம் இருந்து பெற்ற ஒரே மகனை காணவில்லை எனில் யாருக்குத் தான் பதற்றம் ஒட்டிக்கொள்ளாது. தன் கை அலை பேசியை எடுத்து பள்ளி என்று பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு அழைத்தால்  . வயதான குரல் பள்ளிக் கூடம் முடிஞ்சு போட்சுமா .... இங்கே யாருமில்ல .. வேணுமின்னா பெரிய டீச்சருக்கு கூப்பிட்டுப் பாருங்க என்றது.இந்த கூறு  கெட்ட மனுஷன் வந்திருவானே .. என பதறி ... "மகேஷு கொஞ்சம் மாவ பாத்துக்க .. தம்பி இன்னும் பள்ளி விட்டு வரைலை" என பக்கத்து வீட்டு மகேஸ்வரியிடம் சொல்லிச் சென்றாள். கிரைண்டர் இவளை விட வேகமாக சுற்றியது.

       தெருவை கடக்கும் போது  ...அடுத்தத்  தெரு ராகவன் நினைவில் வரவே ... அடுத்தத்  தெருவான நடுத் தெருவுக்கு நடந்தாள். அவளுக்கு அந்த தெருவென்றாலே பிடிக்காது. தெருவில் நுழைந்ததும் நாலு வீடு தள்ளி திறந்த வெளி கழிப்பறை வந்து விடும் .இது ஆண்களுக்கான பகுதி.அப்புறம் சிறுது தொலைவில் ஒரு மாவு மில். அதற்கு அடுத்து ஐந்தாறு வீடுகள். பின்பு முள் காடு . அதற்கு அடுத்து ஒரு அரசு கழிப்பறை. ஆனால் எப்போதும் பூட்யே  இருக்கும் .  அதன் பின் புறம் பெண்களுக்கான சுதந்திரக் கழிப்பிடம் . மாவு மில் அடுத்தக்  காரை வீடு தான் ராகவனின் வீடு. மூக்கைப் பொத்திக்  கொண்டு நடந்தாள். ஒரு பெண் வருகிறாள் என்று கூட எழுந்திராமல்..தன் மறைவிடத்தை நன்றாகத்  திறந்து காமித்துக்  கொண்டு ஒரு இருபது வயது வாலிபம் நிற்க . முணகிக் கொண்டே நடந்தாள். "  அக்கா , நான் தனிய எங்க அப்பாவோட வந்துட்டேன். அவன் ரயில்வே கேட் அடுத்த தெருவில் உள்ள முருகேசனோட விளையாடிகிட்டு இருந்தான் .."என்ற பதில் முடியும் முன்னே ... மீண்டும் தெரு முனைக்கு நடந்தாள்.

    முனியம்மாள் .... மதுரை விராட்டிபத்திலிருந்து அனுப்பானடி வீரனுக்கு வாக்குப் பட்டு வந்தவள். இவளின் சிவத்த மேனிக்கு ஆசைப்பட்டு .. எந்த பவுனும் பேசாமல் கட்டிக் கொண்டு வந்தவன். ஐந்து வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது. அது வரை வீரனுக்கு குறை இருக்கு அது நாளா தான் பவுனு வேணாம்ன்னு கட்டிக்கிட்டான் என ஒரு சாடைப் பேச்சு முனியம்மாள் பக்கம்  இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தீவிர முயற்சியில் பிறந்தவன் தான் சுரேஷ். வீரன் அப்பளக் கம்பெனி நடத்துபவன் .அவனிடம் ஐந்து பெண்களும் . ஆறு ஆண்களும் வேலை பார்கிறார்கள்.கண்ணியம் தவறாதவன். அனைவரிடத்திலும் மரியாதையாக நடந்துக் கொள்வான். ஆனால் சுரேஷை யாரும் அடித்தல் , திட்டினால் மிருகமாகி அடித்து விடுவான்.
        கால்கள் ரயில்வே கேட்டைத்  தாண்டிக்  கடந்தன. எதிரில் தென்பட்ட மீன்காரி சுசி "...என்ன முனியம்மா .. இவ்வளவு வேகமா போற ? "என்றதும் ," எம் மவன் சுரேச வழியில பார்த்தியா அக்கா ...." என கேட்க , "ஒத்த பிள்ளைய பெத்துருக்க , இவ்வளவு அசால்ட இருக்க... போய் தேடுடி... நானும் போற வழியில பார்த்த சொல்லுறேன் .உன் புருஷன் கொள்ளப் போறான் "என்ற சுசியின் பேச்சை காதில் வாங்கியவுடன், கண்கள் கண்ணீரை சுரக்க ..  எதிரில் வந்த பையனை பார்த்து .. டேய் நீ எந்த பள்ளிக்கூடம் படிக்கிற ..? . "நானா ஓம் சரவணா "என அவன் சொல்ல .. "டேய் சௌராஷ்டிரா ஸ்கூல் uniform போட்ட பையன பார்த்தியா ?என கேட்டாள்.  " தெரியல அக்கா  ." என சொல்லி நகர்ந்தான். எதிரே வரும் காக்கி டவுசர் , வெள்ளை சட்டை போட்டவன் எல்லாம்  தன் மகனாகவே தென்பட .. இதயம் கனத்து நடந்தாள்.

   எப்போதும் அவள் மீது ஒரு கண் வைத்து , அவள் கணவன் வீட்டில் இல்லாத சமயமாக வலம் வரும் ரங்க சாமி , இவள் தனியாக வருவதை பார்த்து , தன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, "என்ன  முனியம்மா ..இப்படி பதறிப் போயி நடக்கிற ..? வண்டியில உட்காரு  .. " என்றான்.  முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு ... "இல்ல என் பையனை காணாம்... அதான் பள்ளிக் கூடம் தேடிப்  போறேன்.. நீ போ எங்கையாவது பார்த்த சொல்லு ..." என அவனின் காமப் பார்வைக்கும் பதிலளித்து சென்றாள் ."நான் போய் பாக்கிறேன்... நீங்க சந்தில தேடிகிட்டு வாங்க "என்று சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டான்.

       சின்னக் கண்மாய் இறக்கத்தில் .. நான்கு சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து .. அவர்களில் தன் பையன் இருக்கக் கூடாதா ...?எனக்  கால்களை எட்ட  வைத்து நடந்தாள். அவர்கள் இல்லை என்பதை அருகில் நெருங்கும் போதே தெரிந்து  கொண்டு , மெய்ன் ரோட்டை நோக்கி நடந்தாள். எதிரில் உள்ள டீக் கடையில் சிறுவர்கள்  கூட்டமாக தண்ணீர்க் குடிப்பதை பார்த்து , டீக் கடையை நோக்கி விரைந்தாள். மனதினுள் இது நம்ம சுரேசா  இருக்கக் கூடாதா..?ஏன் இப்படி செய்யிறான்.. ? யாருடன் சேர்ந்து போயிருப்பான்...? பள்ளியில டீச்சர் யாரும் அடிச்சிருப்பாங்களா ..?இல்ல மார்க் கார்டு எதுவும் கொடுத்து குறைஞ்ச  மார்க் வாங்கினதால பயந்து எங்கேயும் போயிட்டானா...? என கற்பனைகளுடன் மனதை குழப்பிக் கொண்டு நடந்தாள். டீக் கடை கண்கள் இவளின் அழகிய இடுப்பை மேய்ந்தன. சிறுவர்கள் " ..என்னக்கா தண்ணீ வேணுமா ?"என கேட்க, பேசாமல் நடந்தாள்.

    அவனை  பெறுவதற்கு எந்த எந்த சாமிகளை எல்லாம் அழைத்தாலோ அத்தனை சாமிகளையும் அழைத்தால்.. அவர்களுக்கு நேர்த்திக் கடன் தருவதாகவும் வேண்டிக் கொண்டாள். எதிரில் தென்பட்ட ரோட்டுக் காளியம்மனை வேண்டிக் கொண்டாள். ஆத்தக் காலி என்பிள்ள கிடச்சுடனும்பா...உனக்கு நாளைக்கு ரோஜா மாலை சாத்துறேன்..என வேண்டிக் கொண்டாள். ஒரு சைக்கிள் காரின் மீது மோதுவதுப் போல செல்ல...அவளுக்கு பகிர் என்றது . ஒரு வேலை ரோட்டை கடக்கும் போது வண்டி மோதி இருக்குமோ.. ச்சீ அப்படி எல்லாம் நடக்காது.. எம் பிள்ளை அமைதியானவன்.. என தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டு நடந்தாள்.

 அவள்  ரோட்டை கடக்க முயலுகையில் ... ஹீரோ ஹோண்டா பைக் அவள் முன் நின்றது. 
"ஏய். முனியாம்மா .. என்னடி ...இப்படி பேய் அறைஞ்சதுப் போல நிக்கிற..?நம்ம சுரேச  நான் தாண்டி பால் பான் சாப்பிட கூட்டி போனேன் ...அதுக்குள்ளே நீ பதறிப் போய் ஸ்லுக்கு தேடி போயிட்டேன்னு நம்ம மகேசு சொன்னா.. அதான் வந்துட்டேன்..."என்றவனின் பேச்சை கவனிக்காமல் பைக்கில் இருந்த சுரேசை வாரி அணித்து முத்தம் கொடுக்க கொடுக்க , அவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. "அட லூசு...இதுக்கு போய் அழுவாங்களா.. என்கிட்ட ஒரு போன போட்டிருந்தா ....என் கூடத்தான் இருக்கான்னு சொல்லியிருப்பேன்.."என்று வீரன் சொன்னாலும் , அவளின் பசத்திற்கு  ஈடு இணை எதுவம் இல்லை.
    

16 comments:

Romeoboy said...

:) Nice

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் எழுத்து நடை நன்றாகவே உள்ளது. ஒரு அப்பாவித் தாய்க்கான பாசத்தையும், அவளுக்கு ஆங்காங்கே நேரும் ஒரு சில சமூக அவலங்களையும் நன்றாகவே சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இருப்பினும் ஆங்காங்கே சிற்சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. திருத்திக்கொள்ளவும்.

Chittoor Murugesan said...

//அவனின் காமப் பார்வைக்கும்
பதிலளித்து சென்றாள் //

நல்ல சொல்லாடல். அந்த "கும்"லதான் கும்மாங்குத்து.

அவன் கேள்விக்கும் பதில் சொல்லி காமப்பார்வைக்கும் பதிலளித்து சென்றாள்ங்கறதை சிக்கனமா சொல்லியிருக்கிங்க.

நல்ல எதிர்காலம் இருக்கு. மனசை தளரவிடாம தொடர்ந்து எழுதுங்க

வாழ்த்துக்கள்

சுதர்ஷன் said...

//"என்றவனின் பேச்சை கவனிக்காமல் பைக்கில் இருந்த சுரேசை வாரி அணித்து முத்தம் கொடுக்க கொடுக்க , அவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது///.
இது தான் தாய்ப்பாசம் :-)..ஒரு பெண்ணுக்கு,தாய்க்கு இவளவு பிரச்சனையா:(

MANO நாஞ்சில் மனோ said...

//வாரி அணித்து முத்தம் கொடுக்க கொடுக்க , அவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்//

அருமை அருமை...........

இளங்கோ said...

kathai nalla irukkunga.. arumai

அன்புடன் நான் said...

நல்ல உணர்வோடு இருக்குங்க... பிள்ளைத்தேடல்.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

உணர்ந்து எழுதியது போல இருக்குங்க... வாழ்த்துக்கள் !!

குட்டிப்பையா|Kutipaiya said...

தாயுணர்வின் வெளிப்பாடும் தவிப்பும். அருமை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட தாய் பாசம்.

Prasanna said...

Nice :)

Unknown said...

அம்மா மனசு.

ம.தி.சுதா said...

மனதை முத்தமிட வைத்து விட்டீர்கள்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Menaga Sathia said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்!!

Anonymous said...

அருமை நண்பரே ..

குமரன் (Kumaran) said...

நாட்டு நடப்புகளை நன்கு கவனித்து அதனை வார்த்தைகளில் நன்கு விவரித்திருக்கிறீர்கள். நல்ல திறமை இது.

Post a Comment