முள்ளாக இருந்தாலும்
முன்னேச் சென்று
மலர் தூவி
தன் காலில் முள் சுமந்து
சுகம் மட்டும் தரும்
என் நட்பே...
நான் அழும் தருணங்களில்
என் கண்ணீராய்...
என் துயரம் துடைத்தாயே...
பிளாட்பாரக் கார வடைக்கு
ஏங்கியபோது ...
பின்னாலே வந்து
வாங்கித் தந்து
என் தந்தையாகிப்போனாயே...
பள்ளியில் காலடி எடுத்துவைத்த
நாள் முதலாய்
என் அருகில் இருந்து
அன்னையைப்போல
எல்லாத் தருணங்களிலும் காத்தாயே...
நான் எழுதாத பக்கங்களை
நீ எழுதி
முற்றுப்பெறச்செய்தாய்...
போட்டியில் வெற்றிப் பெறச் செய்தாயே
பரிசு மட்டும் என்னுடன்
உன்னைப்போலவே...!
நீ வராத காலைப் பொழுது
எனக்கு விடியாதே...
உன்னுடன் பேசாத இரவும்
எனக்கு கரைந்து போகாதே...
தொடர்புகள் அறுந்த
ஒரு தீவுவாசியாகவே
உன்னைக் காணாப்பொழுதுகளில்....
உன் கரம் பிடித்து
கதைத்து சென்ற கடற்கரையும்
பாலைவனாமாய் மாறியதே
நீ இல்லாமல்...
நீ இல்லா வாழ்வு
கனவாகக் கூட
இருக்கக் கூடாது
என்பதாலே இரவுகளில்
உன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே
கண் திறந்து உறங்குகின்றேன்....
நான் கவிதையானால்
நீ கவி வரிகாளாய் இருக்கிறாய்...
நான் கதையானால்
நீ கதைக் கருவாய் இருக்கிறாய்...
நான் எழுத்தானால்
நீ பேனா மையாய் மாறி
எனக்கு உருக் கொடுக்கிறாய்...
நீ இல்லா உலகம்
எனக்கு ஒரு நரகம்
எனவே உனைத் தேடி வருகின்றேன்...
உன்னைப்பார்த்த மகிழ்ச்சி
பட்டாம்பூச்சியாய் பறக்கிறேன்
நட்புக் கொள்ளுங்கள்
வண்ணமயமான இறக்கை முளைக்கும்
பறந்துச் சொல்லுங்கள்
நட்புன் அருமையை....!
8 comments:
சரி.
அருமையான கவிதை சரவணன்..
நீ இல்லா வாழ்வு
கனவாகக் கூட
இருக்கக் கூடாது
என்பதாலே இரவுகளில்
உன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே
கண் திறந்து உறங்குகின்றேன்....
......அருமையான கவிதைங்க.... வரிகள் ரம்யமாக உள்ளன.
நண்பனாய், நல்லாசிரியனாய்.. ந்ல்ல நண்பன் வாழ்வின் முக்கிய பங்கை வகிக்கிறான். அப்படியான நண்பனைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் வரிகளில் தெரிவது சத்தியமான உணர்வின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.
அருமை.
நெகிழ்வான கவிதை...வாழ்த்துக்கள் நண்பரே...
நட்புக்கு மரியாதை.
அருமையான கவிதை
Post a Comment