Saturday, October 9, 2010

உன் மனதை காட்டி ...

என் கண்கள் உன்னை பார்க்கும்
நீ உன் மனதை காட்டி
என் மனதில் பதிந்து  போகிறாய்
நீ மட்டுமே என் நெஞ்சில் உறங்கினாலும்
என் தூக்கத்திலும் வந்து வசியப்படுத்துகிறாய்...
என் மனைவி இருக்கும் போதும்
என்மீது உறங்கும் உரிமை உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது...
அவள் உன் மீது என்றும் பொறாமை பட்டது கிடையாது ....
நீ அதிகநேரம் என் மீது உறங்கினால்
கசங்கி விடுவாய் என்று ...
அவளே உன்னை பாதுகாப்பாய் பார்த்துக் கொள்கிறாள்  ....
என் குழந்தைகளும் என்னுடன் நீ உறவாடுவதை பார்த்து
உன்னுடன் உறவு கொள்ளத் துடிக்கின்றன...
நான் இல்லாத சமயங்களில் நீ ...
அவர்களுக்கும் துணையாக இருக்கிறாய் .!
என் மனைவி, என் குழந்தைகள்
என் தாய் , தந்தை
என் உற்றார் , உறவினர்
என அனைவரும் உன்னுடன் பேசி சிரிக்கின்றனர்,  வியக்கின்றனர்.
என்னையும் உன்னால் பாராட்டுகின்றனர். ..!
மரங்களை அழித்தது பிறந்தாய் என்பதை தவிர்த்து
வேறு குறை இல்லை ..!

10 comments:

பனித்துளி சங்கர் said...

விழிப்புணர்வு வார்த்தைகளில் தெறிக்கிறது . எப்பொழுதுதான் விழித்துக் கொள்ளப்போகிறோமோ ! அருமையான கவிதை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

புத்தகங்களையா சொல்கிறீர்கள் சரவணன்?எப்பவும்போல சமூக அக்கறை கொண்ட கவிதை !

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎன் குழந்தைகளும் என்னுடன் நீ உறவாடுவதை பார்த்து
உன்னுடன் உறவு கொள்ளத் துடிக்கின்றன...
நான் இல்லாத சமயங்களில் நீ ...
அவர்களுக்கும் துணையாக இருக்கிறாய் .!ஃஃஃஃஃ
மிகவும் ஆழமான வரிகள் வாழ்த்துக்கள்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப யதார்த்தமாய்.....

மோகன்ஜி said...

அற்புதம்! மரங்கள் புத்தகங்களாய் ஜெனனமெடுத்து அறிவுத்தென்றலை நிரந்தரமாய் வீசிக் கொண்டிருக்கிறதோ?

எஸ்.கே said...

அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

Veli said...

நல்ல கவிதை சார், தொடர்க உங்கள் முயற்சி

குட்டிப்பையா|Kutipaiya said...

நல்ல முயற்சி!

அப்பாதுரை said...

சமீப இணையக் கவிதை உலாவல்களில் உங்களின் இந்தக் கவிதை அறிவைத்தொட்டது.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

நல்லதொரு கவிதை - முயற்சி வாழ்க - புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வளர வேண்டும்.

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment