Saturday, May 8, 2010

என்னோடு வரும் நீ ...

நான் வீட்டில் கிளம்புவதில் இருந்து ...
என்னோடு வரும் நீ ...
சிவப்பாய் , கருப்பாய் , வெள்ளையாய் ...
பல நிறங்களில் என்னுடன் பயணித்தாலும் ....
என்னை போன்றே குணம் படைத்தவன் ....!
மழை எனக்கு  பிடிக்காது ...
உன்னை போலவே ..!
மழையில் நனைந்தால்
நான் நொந்து நூலாகி விடுவேன்....!
என் உடல் வாகும் உன்னை போல் தான் ...!
இருந்தாலும் மோசம் நீ ...
மழை காலங்களில் ஆனந்தமாய் நனைந்து
என்னை அல்லவா இம்சிக்கிறாய்....!
என்னை என் அன்னை மட்டும் திட்டுவாள் ...
"ஏன் ஒரு மழைக்கு கூட தங்க மாட்டேன்கிற ...?"
உன்னை ஊரே திட்டுகிறது என்பது மட்டும் வித்தியாசம்...!
மழையில் பெற்ற ஜல தோஷம் நீங்கும் வரை ...
நான் கோபப்பட்டு கிடைத்தை எல்லாம் தூக்கி எறிகிறேன்...
நீ சில சமயம் என்னையும் அல்லவா தூக்கி எறிந்தாய்
இது தான் நீ என்னிடம் வைத்துள்ள உறவா...
உன் மேடு பள்ளங்களை சரி செய்ய
சாலை வரி கட்டினாலும் ....
உன்னை மட்டும் சரி செய்ய நாள் பல ஆகிறது ஏன் ?

10 comments:

ஹேமா said...

யாரு யாரு ?
நிழலா இல்லை இருட்டா ?

Unknown said...

//"ஏன் ஒரு மழைக்கு கூட தங்க மாட்டேன்கிற ...?"//

நல்லாருக்குங்க ...

மதுரை சரவணன் said...

hema its our road. read the last line. v pay tax but not maintained soon.

ஹேமா said...

//உன் மேடு பள்ளங்களை சரி செய்ய
சாலை வரி கட்டினாலும் ....
உன்னை மட்டும் சரி செய்ய நாள் பல
ஆகிறது ஏன் ?//

ஓ...தெருவையா சொல்லியிருக்கீங்க.தெருவைப் பற்றிய ஆதங்கமும் இருக்கு கவிதைல.
ம்ம்ம்...இப்போ திரும்பவும் வாசிக்கிறேன்.சரியா புரிஞ்சுக்கிறேன்.நன்றி சரவணன்.

பத்மா said...

சாலை(பற்றிய) வரிகள்
நல்லா இருக்குங்க சரவணன்

கமலேஷ் said...

நல்லா இருக்கு நண்பரே...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

கவிதை ரொம்பா நல்லா இருக்கு ...எல்லார்க்கும் மழை என்று சொன்னாலே பிடிக்குமே உங்களக்கு ஏன் பிடிக்கலே???

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்பா நல்லா இருக்கு

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்கு சரவணன்.

“சிரிக்காமலே...
குழிவிழுகிறது
எங்க ஊர் சாலைக்கு”

யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது,

Post a Comment