மரணத்தின் விளிம்பில்
நாட்கள் எண்ணுகிறோம் ...
எங்களோடு இருந்த ...
வேம்பும், பிலாவும்
அரசும் , ஆலமரமும்
அல்ப ஆயுளில்
உயிர் விட ....
எஞ்சி இருக்கும் நாங்கள் ...
அடையாளம் காட்டவே
பிளாட் விறபனைக்கு ...!
எதிரே நீங்கள் பார்க்கும்
நீர்...
கண்மாய் நீர் அல்ல ...
நாங்கள் வடித்த கண்ணீர். ..!
மானுடன் திருத்த மாட்டானா
என நித்தம் நாங்கள்
அழும் குரல் ...
வறண்ட கற்றாய்
அவனை வாட்டி
எடுத்தாலும் ...
காட்டை அழித்தது
காசை மட்டும் பார்க்கிறான் ....
இன்றைய சில்லரைகள்
நாளைய கல்லறைகள்
என்பது புரியாமல்...!
இன்று அழிந்த
காடுகள் நாடுகளாகும்
நாடும் நாளைய
பாலைவன சுடுகாடாய்
நீர் இன்றி
நிலத்தடி நீரும் வற்றி
அனல் காற்றில்
வெம்பிய உடலில்
உயிர் போகும் தருவாயில்
எங்களை போலவே
அடையாளம் காட்டப்படுவான்
தனக்கு தானே
சவக் குழியை தோண்டியவன் இவன் என்று...!
5 comments:
உங்கள் கவிதைக் குமுறல் உள்ளத்தைச் சுடுகிறது சரவணன்!
சுற்று சூழல் குறித்து எத்தனை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் அவை உண்டு பண்ணியிருக்கும் தாக்கம் சற்று குறைவே ...
ஹுசைனம்மா வின் சிறுகதை படித்தீர்களா சரவணன் ...
சூழலியல் பாடத்திட்டங்கள் கொண்டிருந்தும் நம் பாடத்திட்டங்கள் போதிய விழிப்புணர்வை மாணாக்கர்களிடையே ஏற்படுத்த தவறிவிட்டதை அருமையாக காட்சி படுத்தி இருக்கிறார் ...
உங்கள் கவிதையில் வடிவது மானுடம் சிந்தும் கண்ணீர் ...
//இன்று அழிந்த
காடுகள் நாடுகளாகும்
நாடும் நாளைய
பாலைவன சுடுகாடாய் //
சபாஷ் சரவணன்
எப்போதும்போல சமூகச் சிந்தனை.
என்றாலும் நாங்களும் அதற்குள்
அகப்பட்டுத்தானே கிடக்கிறோம்.வழி !
அருமை வாழ்த்துக்கள்
Post a Comment