Thursday, May 13, 2010

மதுரை மக்களே உஷார்...!

.
  மத்திய நகர் மேம்பாட்டு வாரியம் மதுரையை சுற்று சூழல் பாதுகாக்கப் பட வேண்டிய நகரமாக அறிவித்துள்ளது .
 
மதுரையில் காற்றில் மிதக்கும் நுண்ணியத்துகள்கள் அளவு 700.மைக்ரோகிராமாக உள்ளது.
நுகரும் நுண்ணிய துகள் அளவு 300.மைக்ரோகிராம் ஆகும்.

மக்களே தூங்கா நகரம் என பெயர் பெற்ற நாம் இந்த விசயத்தில் இவ்வளவு தூங்கி விட்டோமே!

   இனியாவது விழித்து கொண்டு , குப்பைகளை உரிய இடத்தில் ஈட்டு , தரம் பிரித்து , மறுசுழற்சி செய்யவும் , உரமாகவும் பயன்படுத்துவோம். குப்பைகளை தெருவில் விட்டு எறிவதை தவிர்ப்போம்.

   திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம். குறிப்பாக ஆற்று ஓரத்தில் இருக்கும் பொது ஜனங்கள் ஆற்றில் மலம் கழிப்பதை தவிர்த்து , பொது கழிப்பறையை முறையாகப் பயன் படுத்துவோம்.

   ஓப்பலாப்படி ஓரத்தில் உள்ள சில்வர் பட்டறை , மற்றும் ஆட்டிறைச்சி தொழில் நடத்தும் மக்களே, நீங்கள் தொடர்ந்து கழிவுகளை ஆற்றில் வீசுவதால் , ஆறு மாசுபடுவதை மட்டுமல்ல , காற்றும் மாசுப்படுவதை தவிர்க்க முடியாது.

 
  இரசாயன உரம் உள்ள சாக்குகளை மீண்டும் பயன் படுத்த வேண்டும் என்று ஆற்றில் அலசும் வியாபாரிகளே தயவு செய்து தாங்கள் செய்யும் தவறை உணர்ந்து , இனி இப்படி செய்வதை தவிர்க்கவும்.

    ஆற்று ஓரத்தில் வாழும் மக்களே முறையாய் கழிவு நீர் இணைப்பு பெற்று , ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தவிர்க்கவும்.

   தத்தனரி அருகில் உள்ள மக்கள் ஆற்றில் பெட்ரோலியப் பொருட்கள், பாலீஸ் பட்ட்டறை கழிவுகளை எரிப்பதை தவிர்த்தால், ஆறும் , சுவாசக் காற்றும் சுத்தமாக இருக்கும் .


வைகை சாக்கடையாய் இருப்பதை இனியாவது உணர்ந்து , மதரை மக்கள் அனைவரும் முயர்சி செய்து , நம்மை நாமே திருத்திக் கொண்டால் மட்டும் மதுரையை மட்டும் அல்ல , நம்மையும் நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

5 comments:

நேசமித்ரன் said...

பயனுள்ள இடுகை

Balakumar Vijayaraman said...

தேவையான பதிவு. வாழ்த்துகள் சார்.

balakrishna said...

நல்ல செய்தி நண்பா நாம் எல்லோரும் சேர்ந்து நம்ம மதுரையை காப்போம்

உங்கள்
பாலா

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய பயனுள்ள விஷயங்களை சொல்றீங்க.. வாழ்த்துகள் நண்பா

சாமக்கோடங்கி said...

//நம்மை நாமே திருத்திக் கொண்டால் //

இந்த வரிகளை நாம் அனைவரும் நமக்குள் உண்மையாகச் சொல்லிப் பார்க்கணும் நண்பர்களே..

நல்ல கருத்துகள் ஆசிரியரே...

நன்றி..

Post a Comment