Thursday, May 13, 2010

விண்ணை தாண்டி...

வீட்டில் ஏசி
காரில் ஏசி
என பயணிக்கும்
இடமெல்லாம் குளிர் சாதனம்....
குடிக்கும் பானமும்
குளிராய் இருக்க
குளிர் சாதனப் பெட்டி ...
எதிலும் குளிர்ச்சியை
விரும்பும் மனிதா...
பூமி சூட்டை உணராமல்
வசதியாய்  வாழ நினைத்து ...
சாவை அல்லவா தேடி
வசதி என கூலாய் வாழ்கிறாய்..!
  
உன்னால் வெளிப்படும் புகை
விண்ணை தாண்டி சென்றாலும்
உன்னை மண்ணில் அல்லவா
புதைக்க வழி சொல்லுகிறது...!
  

6 comments:

Unknown said...

எனக்கென்ன ... போச்சு ... எல்லாருக்கும் உள்ளது எனக்கும்
எனப் போகும் மனிதன் அறியான் மரணம் ....

அன்புடன் நான் said...

நல்ல சிந்தனை.... பாராட்டுக்கள்

பொன் சிவராசா said...

அருமையான கவிதை. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

புதிய இணையம் www.tamilsworld.net ஐ நாள்தோறும் பாருங்கள்.

நன்றியுடன்
பொன் சிவராசா

நேசமித்ரன் said...

நல்ல சிந்தனை

வாழ்த்துக்கள் வாத்தியார் சார்

ஹேமா said...

சமூக அக்கறை.யார் காதில் கேட்கும்.
சொல்லிச் சொல்லி நாங்களும்தானே
நாகரீக வாழ்வுக்குள் சரவணன்.

தருமி said...

பரவாயில்லை... green house effect பற்றி /உங்க வாத்தியார்' நல்லா சொல்லிக் கொடுத்திருப்பார் போலும் !!

:)

Post a Comment