கல் ....
கல் நெஞ்சம் கொண்டவர்கள்
பூமியில்
விதைத்துள்ளார்கள்..!
இவை நகரமயமாதல் அல்ல
நரகமாதல் ...
நாளை சவக்குழிகளை
இன்றே தோண்டிகிறார்கள் ...!
சூரியகாந்தி போல்
பார்க்கும் இடமெல்லாம்
மஞ்சள் கல் ....
வாழ்வில் மங்களம் உண்டாக்க அல்ல...
சந்ததியின் வாழ்வையே ...
அமங்களம் ஆக்க !
உன் குழந்தை பிறக்கும் முன்
கல்லறை உருவாக்கி தருகிறாய்
சில்லறை தேடி...
பச்சை பயிர் முளைக்கும் இடத்தை
கருப்பை அகற்றுவதை போல்
புல்டோசர் வைத்து தகர்த்துகிறாய் ...
நீ தர்க்கப்படுவது அறியாமலே..!
6 comments:
நல்லாயிருக்குங்க சரவணன்.. அதிலும் கடைசி வரி உண்மை...
//உன் குழந்தை பிறக்கும் முன்
கல்லறை உருவாக்கி தருகிறாய்//
வருங்கால சந்ததியினர் அனைவருக்கும்.
கவிதை நன்று.
ஒவ்வொரு வரிகளும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வரிகள். அனைத்தும் அருமை. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் நண்பரே..!
excellent
//
சூரியகாந்தி போல்
பார்க்கும் இடமெல்லாம்
மஞ்சள் கல் ....//
மிகவும் நன்றாக இருக்கிறது சரவணன்..
உன் குழந்தை பிறக்கும் முன்
கல்லறை உருவாக்கி தருகிறாய்....
நல்லாயிருக்குங்க
Post a Comment