Friday, May 21, 2010

தேர்வு முறையில் மாற்றம் தேவை ...!

     தமிழகத்தில் தேர்வு முறையில் மாற்றம் வரவேண்டும் என அனைத்து கல்வியாளர்களும் எதிர்ப்பார்க்கும் இவ்வேளையில் சில ஆலோசனைகள் கல்வியாளன் என்ற முறையில் ...

     தமிழக கல்வித்துறை டாக்டர் கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமச்சீர் கல்வி முறை தமிழகத்தில் மட்டுமே சாத்தியமாகி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இத்தருணத்தில் தமிழகக் கல்வித்துறை தேர்வு முறையில் மாற்றம் தந்து இந்தியாவின் முன்னோடியாக திகழ சில யோசனைகளை முன் வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

       மதிப்பெண் அடிப்படையிலான மதிப்பீடு அல்லது அளவீடுகள் தான் மாணவனுக்கு பிளஸ் டூ முடித்தப் பின் நல்லதொரு உயர்க்கல்வியினை கொடுக்கிறது. மதிப்பீடுகள் மாணவனின் முழுத்திறனை சோதனை செய்வதாக அமையாமல் , அவனின் மனப்பாடம் செய்யும் திறனை பரிசோதிப்பதாகவே அமைந்துள்ளது.

     மாணவன் தான் பெற்ற பாடத்திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள திறன்களை முழுவதும் பெற்றுள்ளான என்பதை சோதிக்க மாணவனின் நினைவாற்றல், கற்பனைத்திறன் , புரிந்து கொள்ளுதல், அதனை பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் வினாக்கள்
தயாரிக்கப்பட்டு அவன் அத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

     இதில் தவறில்லை . ஆனால் மாணவனின் அனைத்து திறன்களும் பயன்படுத்தப்படுகிறதா..?அது தான் நம் தேர்வு முறையில் உள்ள சிக்கல்.ஆம்,நல்ல மான்ப்பாடம் செய்து , அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் விடைத்தாளில் கொட்டி வைக்கும் திறமைசாலிகளுக்கு மட்டுமே புரபெசனல் கோர்ஸ் எனப்படும் மருத்துவம் , பொறியியல் போன்ற பாடங்கள் கிடைக்கும்.

    சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் இராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் திறமையானவர் ,ஆனால் இளம் வயதில் நினைவில் நிறுத்தி , குறிப்பிட்ட நேரத்தில் விடை எழுத தெரியாத்தால் தனக்கு புரபெசனல் கோர்ஸ் கிடைக்கவில்லை என்கிறார். ஆக, திறமைசாலிகள் உண்மையான அறிவாளிகள் நம் தேர்வு முறையில் தகுதிவாய்ந்த அவர்கள் விரும்பும் பாடத்தை உயர்கல்வியில் பெறும் வாய்ப்பு இழக்க நேரிடுகிறது.

    பிளஸ் டூ படித்து முடித்தப்பின் அவன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அதாவது இயற்பியல் , வேதியல் , உயிரியல் அல்லது கணிதம் ஆகியவற்றில் அவன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இருநூறு மதிப்பெண்களாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் அவனுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

   சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஒரு மாணவன் குறைந்த பட்சம் முப்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் பெற்று பாஸ் செய்து இருந்தாலே அவன் தேசிய நுழைவுத்தேர்வினை எழுதி , நுழைவுத்தேர்வில் அவன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேரலாம்.
  
   அது மட்டும் அல்ல சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மாநிலக் கல்லூரிகளில் பதினைந்து சதவீதம் சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் . ஆகவே, மாணவன் தனக்கு தேவையான கல்லூரியில் சேர்வதற்கும் வாய்ப்பு உள்ளது. நாமும் இது போன்று ஒரு தேர்வு முறையினை ஏன் கொண்டு வரக் கூடாது. ..?

   நுழைவுத்தேர்வினை நம் அரசு ரத்து செய்துள்ள நிலையில் நுழைவுத்தேர்வு முறைக்கு மீண்டும் செல்லத்தேவையில்லை . எனவே, பிளஸ் டூ நிலையில் தேர்வு முறையினை மாற்றி உண்மையிலெ திறமையும் , அறிவாண்மையும் உடைய மாணவன் தேர்வு செய்வதற்கு ஒரு தேர்வு முறை என் வசம் உள்ளது . தயவு கூர்ந்து தமிழக கல்வி துறையும் , கல்வி அமைச்சகமும் இதனை கூர்நேக்குமா...!?

1. பிள்ஸ் டூ மாணவனுக்கு அவனின் அந்தந்த பாட ஆசிரியரே ..அவ்வப்போது மாணவனுக்கு வைக்கும் தேர்வின் அடிப்படையிலோ அல்லது வகுப்பறைச் செயல் பாட்டினின் அடிப்படையிலோ இருபது மதிப்பெண் உள்ளீடு மதிப்பெண்ணாக வழங்கலாம்.
மாணவனின் முகதாட்சனைக்கு ஆசிரியர் ம்திப்பெண் வழங்கினாலும் பரவாயில்லை.அதனால் ஒன்றும் பெரிய வித்தியாசம் வர வாய்ப்பு இல்லை.

2.  பிளஸ் டூ மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு . மொத்த மதிப்பெண் ஜம்பது மதிப்பெண் ஆகும். அதுவும் மாணவனின் பார்தல் , கேட்டல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் எழுதும் திறனை சோதிப்பதாக அமைய வேண்டும்.ஆகவே, அதில் மூன்று மார்க் , ஜந்து மார்க் வினாக்கள் மட்டுமே கேட்கப்பட வேண்டும்.  
    குறிப்பாக இந்த தேர்வுத்தாளை அந்த பாடம் நடத்திய ஆசிரியரும் , அரசால் நிர்ணயிக்கப் படும் ஆசிரியரும் இதனை நடத்தலாம். இதனால் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள் நேராது . ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி தங்களுக்கு தேவையான வசதிகளை பெறவும் தேவையில்லை. அரசுக்கு பணம் மிச்சம். கல்வி அலுவலர்களுக்கு தங்களின் ரெகுலர் வேலை பாதிக்காமல் அலுவல்களை செய்யலாம். மாணவர் திறன் மேம்பட கண்காணிப்பை அதிகரிக்கச் செய்யலாம்.

3. மீதி உள்ள 130 மதிப்பெண்கள் அனைத்து மாணவனுக்கும் அவனின் உண்மையான அறிவாண்மையை சோதிப்பதாக , அப்ஜெக்டிவ் டைப் தேர்வாக இருக்க வேண்டும். அதில் மாணவன் படித்துள்ள பாடப் பகுதியில் இருந்து , அவன் பெற்ற அறிவினை
சிந்தித்து எழுதும் விதமாகவும்,பயன்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
வினாக்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் கோடிங்சீட்டாக அமைய வேண்டும். கணினி கொண்டு மட்டுமே திருத்த வேண்டும்.

4. மாணவனுக்கு மதிப்பெண்கள் உள்மதிப்பீடு 20+ஆண்டுத் தேர்வு 50+பொது தகுதி சோதிக்கும் தேர்வு 130= 200 அடிப்படையில் வழங்கப்படவேண்டும் .

5. தற்போது உள்ள கட் ஆப் முறையில் மாணவனுக்கு ஒவ்வெரு பாடத்திலும் அவன் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரம் வரிசை நிர்ணயம் செய்யப்பட்டு ,மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.  

  அன்பான பிளாக்கர்களே , பத்திரிக்கை நண்பர்களே இது அனைத்து வகையிலும் திறமை பெற்ற மாணவன் மட்டுமே செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும். மேலும் எல்லா மாணவனும் பாஸ் செய்து விடும் சூழலும் உண்டு. குறைந்த பட்ச தேர்ச்சி சதவீதமான முப்பத்தைந்து சதவீதம் பெறும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
 
தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதுடன் உண்மையான போட்டியும், நல்ல கற்றல் சூழலும் உருவாகும். அறிவாளிகளும் மட்டுமே புரபெசனல் கோர்ஸ் சென்றடையும் . இதனால் சமுகத்தில் சிறந்த மருத்துவர்களும் , இஞ்ஞினியர்களும் கிடைப்பர்.நாடு வளம் பெறும்.
 
 அப்துல் கலாம் சொல்வது போல் நாடு நல்ல அரசாக மாறும், வல்லராசாகும் .

10 comments:

நீச்சல்காரன் said...

இந்த நடை முறை சிறப்பானது தான். அப்ஜெக்டிவ் டைப் 130 கேள்வியும் ஒவ்வொரு ஆண்டும் புதுமையாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பழைய கேள்விகளிலிருந்து மாணவர்கள் திரும்ப மனப்பாடம் செய்ய தூண்டப்படுவார்கள்.

புலவன் புலிகேசி said...

நான் கல்வி முறையிலேயே மாற்றம் வேணும்னு சொல்றேன்...மனப்பாடம் செய்யும் முறை ஒழிய வேண்டும். மாணவர்கள் புரிந்து படிக்க வகை செய்யும் கல்வி முறை வேண்டும்.

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு சரவணன் !
கண்டிப்பாக தற்போதிருக்கும் நடைமுறையை விட பல மடங்கு சிறப்பான நடைமுறை நீங்கள் சொல்லியிருப்பது . தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதுடன் உண்மையான போட்டியும், நல்ல கற்றல் சூழலும் கண்டிப்பாக உருவாகும்.

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

ம்....இதுவும் ஒரு யோசனைதான்...

G.Ganapathi said...

எல்லாம் சரிங்க திறன் வளர்க்க என்ன திட்டங்கள் இருக்கிறது ?..ஒரு ஆசிரியரிடம் குறுக்கு கேள்வி கேட்டாள் தலையில் குட்டி அமர வைக்கும் கல்வி திட்டம் இப்போதைய சமசீர் கல்வி மட்டும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடுமா தெரியவில்லை . தேசிய அறிவு சார் சொத்துரிமை காப்பகத்தில் பதிவி செய்து வைத்துள்ள கண்டுபிடிப்பாளர்களின் கல்வியரிவுகளை பாருங்களேன் . அவர்களுக்கு சரியான கல்வி கிடைத்திருந்தால் இன்னும் என்ன என சாதனைகளை செய்து இருப்பார்கள் . பாத்து மார்க் கேள்வி அஞ்சு படி அத எழுதி பாரு வரிவிடாம .அப்படியே பரிச்சைல எழுத்து அம்பது மார்க் வாங்கு அப்படின்னு இருக்கற குருட்டு துறையில் திறன் வளர்க எந்த கல்வியாலராவது ஆர்வமுடன் இருக்கிரார்கள ?.. பேராசிரியர் கல்யாணி கூட இதற்க்கான தீர்வுகளை எடுத்து சென்றது போல் தெரியவில்லை .

அமைதி அப்பா said...

//அவன் பெற்ற அறிவினை
சிந்தித்து எழுதும் விதமாகவும்,பயன்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
வினாக்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் கோடிங்சீட்டாக அமைய வேண்டும். கணினி கொண்டு மட்டுமே திருத்த வேண்டும்.//

நல்ல சிந்தனை, வரவேற்கிறேன்.

மதுரை சரவணன் said...

கணபதி அவர்களுக்கு வருகைக்கு நன்றீ.உண்மையான திறமையானர்கள் நமக்கு தெரிய வேண்டும் என்பதற்கு தான் நாம் அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு வைக்கும் போது மனப்பாடம் செய்து எழுதுவதற்கு அவசியமில்லை. அதுவும் அவை மாணவர்கள் பெற்ற அறிவினை சிந்தித்து , பயன் படுத்தும் விதத்தில் அமைக்கச் செய்வதால் மனப்பாட அறிவு பயன் படாது .
மனப்பாட முறையினை அடிப்படையாக கொண்டதேர்வு முறை என்பதால் , ஆசிரியர்களும் மாணவனின் தேர்ச்சியை மட்டும் கவனத்தில் கொண்டு அவனின் ஜயத்தினை போக்காமல், அவனை கொட்டுகிறார்கள். எந்த ஆசிரியரும் மாணவனை கொட்டு போட்டு உட்கார வைப்பது இல்லை . மாணவனின் தேர்ச்சி அடிப்படையில் தேவையில்லாமல் கோள்வி கோட்பதை தவிக்கவே அப்படி செய்யலாம்.

பேராசிரியர் கல்யாணி தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும் என்பதில்லை ,நீங்களும் சொல்லலாம். அது இருக்கட்டும் பேராசிரியர் கல்யாணி பற்றி விவரம் சொல்லவும்.

G.Ganapathi said...

http://www.kalachuvadu.com/issue-120/page60.asp

Priya said...

நல்லதொரு விஷயத்தை எளிமையாக எழுதி இருக்கிங்க, வாழ்த்துக்கள்!

Post a Comment