Monday, May 31, 2010

தவறுக்கு வருந்துகிறேன்....

  மிகவும் வருந்துகிறேன். தேவையில்லாத பிரச்சனையில் தலையிட்டு ஏதோ அதிகபிரசிங்கி மாதிரி நாலு கமண்டு போட்டு , நடுநிலைமை வாதிமாதிரி , பதிவுலகில் சண்டை வேண்டாம் நமக்கு அவர்களின் எழுத்துக்கள் தான் தேவை அவர்கள் திருந்தி அல்லது தவறை உணர்ந்து இனி நல்ல பதிவை தருவார்கள் என்று சொன்னது தப்பா போச்சு .

     ஏதோ நாலு பதிவு போட்டமா ,பத்து கமண்டு வந்துச்சா , ஓட்டு விழுந்துச்சா , சந்தோசமா நாளை என்ன எழுதுவது என்று சிந்தித்தோம , நாளை என்ன பாடம் நடத்த வேண்டும்   என்று யோசனை செய்தோமா என்பதை விடுத்து , ஒன்றும்  தெரியாத விசயத்தில் ஏன் தலையை நுழைக்க வேண்டும் .?

     உனக்கும் பதிவுலக தோழர்களுக்கும்,தோழிகளுக்கும்  என்ன சம்பந்தம் ..? யார் அடித்தால் என்ன ...?கொச்சையாக , விரசமாக திட்டி கொண்டால் என்ன ..? நீ என்ன நாயா
நியாயம் கேட்க ...? நாய் கூட இரண்டு நாய் சண்டை போட்டால் குறைத்து ஊரை கூட்டி  மனிதனை கொண்டு விரட்டி , சண்டையை  விலக்கி விடும்...!

    நாயே உன்னையும் ஏதோ ஒரு கோஷ்டியில் சேர்த்து விட்டு , உன்  பலோவர் லிஸ்ட் இருந்து ஒருவர் விலகி விட்டாரே .... தெரிய வில்லையா...?

      தற்போது புலம்பி என்ன பயன் ....? இங்கு மனித தர்மம் , மனித நேயம் , மனிதாபி மானம் என்பதெல்லாம் செத்து சாம்பலாகிவிட்ட பின் அதன் விபூதியை அள்ளி நெற்றியில் பூசி கொண்டு களத்தில் இறங்கினால் ,இருக்கும் பலோவர்களையும் இழப்பாய் ..!
    இனியாவது தகவல் சொன்னோமா  , தகவல்களை படித்து கமண்டு மட்டும் நன்று , அருமை , வாழ்த்துக்கள், வளர்க, டமிழ் வாழ்க , என கும்மி அடித்து செல்ல பழகிகொள் .

      தவறுக்கு வருந்துகிறேன்....எனக்கு தெரிந்த தோழியோ, தோழனோ என்னை மன்னித்து விடுங்கள் இது போன்ற விசயங்களுக்கு இனி கமண்டு போடமாட்டேன் மாட்டேன்...இனி நான் உங்களை பாலோ பண்றேன்.


     எனக்கு  மட்டும் அல்ல இது எல்லாருக்கும் பாடம் ...பாடம் நடத்தும் எனக்கே பாடம் கற்று  தந்த உங்களுக்கு என்றும் நன்றி கடமை பட்டுள்ளேன் .

      மீண்டும் மனம் வருந்துகிறேன் என்னை நினைத்து. ...!


  
  

.

10 comments:

ஹேமா said...

என்ன சரவணன்...மனசுக்குக் கஸ்டமாயிருக்கு.
வாழ்க்கை வரவும் செலவும்தானே.
சமாளிக்கிறதுதான் சந்தோஷம்.

மதுரை சரவணன் said...

எனக்கு இது வரவு , செலவு கணக்கு அல்ல...மனிதம், மனித நேயம் ...என் எழுத்துக்களுக்கு கொடுக்கும் கொளரவம் . இது எதோ ஒரு பிரச்சனைக்காக அவர்களை புண்படுத்தினால் நானே பொருப்பு, ஆகவே , மன்னிப்பு. மனக்கஷ்டம். உங்கள் அன்புக்கு நன்றி .

Anonymous said...

"நாய் கூட இரண்டு நாய் சண்டை போட்டால் குறைத்து ஊரை கூட்டி மனிதனை கொண்டு விரட்டி , சண்டையை விலக்கி விடும்...!"

சரியாய் சொன்னிங்க சரவணன் .நான் இந்த ப்ளாக் உலகத்தில் வந்து ஒரு மாதம் தான் ஆகுது மனதே நோக்கற மாதிரி நிறையே பதிவுகள் பார்த்தேன் ..பேசாமல் இருப்பது தான் நல்லதென்று என் நண்பன் சொன்னா.இப்போ நீங்களும் அதே தான் சொல்லறிங்க.

நன்றி

அன்புடன் நான் said...

என்னமோ... நடந்திருக்கும்மு மட்டும் தெரியுது.... அது என்னன்னு தெரியல.... போகட்டும்

உங்க இந்த நேர்மை உண்மையாவே பிடிச்சிருக்கு......

அன்புடன் நான் said...

என்னமோ... நடந்திருக்குன்னு மட்டும் தெரியுது.... அது என்னன்னு தெரியல.... போகட்டும்

உங்க இந்த நேர்மை உண்மையாவே பிடிச்சிருக்கு......

dheva said...

அட நீங்க ஏன் பாஸ் வருந்துறீங்க....! உங்களின் கண்ணோட்டமும் கருத்தும் சரிதான்... ஒருத்தர் பாலோயர் ஆக இருந்து போன போகட்டும்... உங்கள் கருத்து நியாயமானதே!

Anonymous said...

நீங்க ஏன் வருந்தனும் பாஸ்...நியாயமான கருத்துகளை ஏற்க துணிவில்லாத கோழைகள் தான் வருந்தனும்.

துரோகி said...

// இனியாவது தகவல் சொன்னோமா , தகவல்களை படித்து கமண்டு மட்டும் நன்று , அருமை , வாழ்த்துக்கள், வளர்க, டமிழ் வாழ்க , என கும்மி அடித்து செல்ல பழகிகொள். //

நீங்க சொல்லறமாதிரி பேசாம இருக்கிறதுதான் நல்லது...

சௌந்தர் said...

தகவல்களை படித்து கமண்டு மட்டும் நன்று , அருமை , வாழ்த்துக்கள், வளர்க, டமிழ் வாழ்க , என கும்மி அடித்து செல்ல பழகிகொள்


என கும்மி அடித்து செல்ல பழகிகொள். இப்படி சொல்வது வருத்தமா இருக்கு

Anonymous said...

That follower would not have gone. He would be following you secretly. Please see my blog for finding out number of secret followers.

Post a Comment