காதலிப்பவர் அனைவரும்
கவிதை எழுதுவதில்லை ...
கவிதை எழுதும் அனைவரும்
காதலிப்பதில்லை ...
எனக்கு
காதலும் , கவிதையும்
கை கூடியுள்ளது...
இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ...
ஒவ்வொரு நிமிடமும் என்னோடு இருக்கிறாள் ..
அவள் என்னை விட்டு பிரிந்ததும் இல்லை ...
நான் அவளை ஒருநாளும் மறந்ததும் இல்லை ...
என் கரம் பிடித்து
வாழ்வை ரசித்து வாழ கற்றுத்தந்தவள் ...
உலகம் உணரச் செய்தவள்...
உலகையும் என்னையும் இணைத்தவள்
அவள் எதிலும் இளைத்தவள் அல்ல ...
என் அன்னை
என்னை பெற்று எடுத்தபோதே..
என்னோடு ஓட்டிக்கொண்டவள் ...
அவள் கொஞ்சும் மொழி அழகு
தொடை அழகு...
நடை அழகு...
என்றும் என்னை ஆசிர்வதிப்பவள் ...
சரஸ்வதி வீட்டில் குடி இருப்பவள் ...
என் காதலி அவளே
தமிழே ...
செம் மொழி தந்தவளே
தாய் மொழியே ...!
தமிழ் என்னோடு இருப்பதால் தான்
காதலும் கவிதையும்
எனக்கு கை கூடுகிறது ..!
4 comments:
அருமையான கவிதை நண்பரே..
இரண்டிலும் வெற்றி.....
நல்லாயிருக்கு
ஒவ்வொரு வரிகளும் அழகோ அழகு..
இப்போதெல்லாம் நான் எழுதுபவைகளைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்வதேயில்லையே....
Post a Comment