Monday, May 17, 2010

மதுரையை காக்க ...

  கன்னியாகுமரி கடந்த சனி அன்று சென்றேன் .   கன்னியாகுமரியின் அழகை சொல்லி மாளாது . பயணக் கட்டுரை எழுதும் முன் ,முக்கியமான ஒரு விசயம் நான் பேசியாக வேண்டும். கன்னியாகுமரி கலெக்டரை பாராட்டியே ஆக வேண்டும்.

    மதுரையும் ஒரு சுற்றுலாத் தலம் தான். கன்னியாகுமரியைப் போன்று சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் தான் . மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலோ , அதனை சுற்றியுள்ள பகுதியிலோ,  எதாவது ஒரு ஹோட்டலிலே இந்த மாதிரி ஒரு நோட்டீஸ் அல்லது விளம்பரப் பலகையையோ நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை.

     அதுவும் வார்டு வார்டாக பிட் நோட்டீஸ் கண்டது தான் எனக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியது. சாதாரண பெட்டிக் கடை முதல் அனைத்து வகை நட்சத்திர ஓட்டல் வரை அனைத்து தரப்பு மக்கள் புழங்கும் இடங்களிலும் இந்த வகை விளம்பரங்களை பார்ப்பது ஆச்சரியத்தையும் அதே நேரம் எனக்குள் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. ஏன் மதுரையில் இந்த மாற்றம் ஏற்படக் கூடாது?

    மதுரையை சுகாதாரமற்ற நகரமாக அறிவித்துள்ள நேரத்தில் , நாமும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால் என்ன? நம் மாவட்டக் கலெக்டரும் இது போன்ற முயற்சி மேற்கொண்டால் பலன் கிடைத்து நம் தூங்கா நகரமும் , தூய்மையான நகரமாக மாறும்!

    நாம் காது குத்து, பால் காய்ச்சு , பூப்புனித நீராட்டு, கல்யாணம் , பிறந்த நாள் வாழ்த்து என எது எதற்கோ பிட் நோட்டீஸ் அடிப்பது போல் பத்திரிக்கை அடித்து , தெரிந்தவன் , தெரியாதவன் , பழகியவன் , அறிமுகம் ஆகியவன் , என பார்த்தவர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் கொடுப்போம். அது போல் மதுரையை தூய்மையுள்ளதாக மாற்ற நாமும் பிட் நோட்டீஸ் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே...!

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் , வார்டு வார்டாக நோட்டீஸ் ஓட்டியுள்ளது. குறிப்பிட்ட வார்டில் உள்ள பொது மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் துப்பரவு பணியாளர்கள் வசம் தங்கள் வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகள் என பிரித்து தனி தனியாக தரவும் எனவும் , நம் மாவட்டத்தை பாலித்தின் இல்லா மாவட்டமாக மாற்றுவோம் என்ற அறிவிப்பும் தடுக்கி விழுகும் இடம் எல்லாம் காண முடிந்தது.

   அது மட்டும் அல்ல ஹோட்டல்களில் சுடுதண்ணீர் தான் கொடுத்தனர். மேலும் ஒவ்வொரு ஹோட்டலிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க அறிவிப்பு ஓட்டப் பட்டு இருந்தது. இங்கு பாலிதீன் பைகள் தரப்பட மாட்டது , மேலும் அதற்கு பதிலாக துணிப்பை தான் கொடுக்கப் படும் அதற்கு என கூடுதல் கட்டணம் பெறப் படும் என அறிவிப்பும் என்னை ஆச்சரியப்படுத்தியது . நாமும் இதை நடைமுறைப் படுத்தினால் என்னா...?!


    மதுரை நிர்வாகம் இதை கவனிக்குமா...! மதுரை மக்கள் பிட் நோட்டீஸ் அடித்து மதுரையை காப்பார்களா..!மக்களே நாம் தயவு செய்து மதுரையை காக்க இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோம். எனக்கு தெரிந்த விசயத்தை நீங்களும் பலருக்கு தெரிவிக்கலாமே...!

4 comments:

Paleo God said...

//ஹோட்டல்களில் சுடுதண்ணீர் தான் கொடுத்தனர். மேலும் ஒவ்வொரு ஹோட்டலிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க அறிவிப்பு ஓட்டப் பட்டு இருந்தது.//

இவை எல்லாமே வெகு நாட்களாகவே கேரளாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுடுதண்ணீர்தான் வைப்பார்கள் வேண்டாமென்றால் நாம்தான் கேட்கவேண்டும். இங்கே 100 ரூபாய்க்கு தோசை விற்கும் ஹோட்டலில் கூட குடிக்கத்தண்ணீர் பாட்டிலில் வாங்கத்தான் கட்டாயப்படுத்துகிறார்கள். அல்லது கொடுக்கும் தண்ணீர் தரம் குறைந்ததாக இருக்கிறது!

யார் கேட்பது??

Paleo God said...

நல்ல இடுகை சரவணன்!!

ஹேமா said...

எல்லோருமே யோசித்து இப்படி முயற்சித்தாலே நன்மைதான்.

Anonymous said...

மதுரை மட்டுமல்ல தமிழ்நாடு முழவதும் இது போல் செயல்பெடலாமே ...

Post a Comment