Wednesday, May 12, 2010

மனித இயல்பு

என் எதிர் வீட்டுக் காரன்
புலி  போல் சீறும்
கோபக்காரனாம் ...!
என் பக்கத்து வீட்டுக்காரன் 
சிங்கம் போல கர்ஜிப்பானம்
எதற்கெடுத்தாலும் ...!
என் முன் வீட்டுக்காரன்
நரி போல் தந்த்திரக்காரனாம் ....!
பார்த்து நட என்றான்
பின் பக்கத்துக்காரன் ...!
அது மட்டுமல்ல ...
இந்த தெருவே ஒருமாதிரி ...
என புதிதாய் வந்த எனக்கு
பாடம் புகுத்தினான் ...
இது எல்லாம் தற்போது
மனித இயல்பு என்று தெரியாமல் !

5 comments:

Rekha raghavan said...

//புதிதாய் வந்த எனக்கு
பாடம் புகுத்தினான் ...
இது எல்லாம் தற்போது
மனித இயல்பு என்று தெரியாமல்//

நல்ல சிந்தனை. அருமையான கவிதை.பாராட்டுகள்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

ஹேமா said...

அழகாய் சொல்லியிருக்கீங்க சரவணன்.மனிதன் மனிதனாய் இல்லை இப்போவெல்லாம் !

அ.முத்து பிரகாஷ் said...

மனித இயல்புதான் சரவணன் ...
நாமளும் மனுசங்க தாங்கறத அவங்க மறந்துடுராங்க்களா...
மாறணும் எல்லோரும் ...

Anonymous said...

மனிதனே பத்தி நல்லா தெரிஞ்சு வெச்சிரிகிங்க....கவிதை ரொம்ப அருமை ..

துரோகி said...

தெளிவான வரிகள், நேரிடையான வெளிப்பாடு....! வாழ்த்துகள்!!

Post a Comment