கல்வி அமைச்சர் கூறுவது போல் , ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் உதவியுடன் நர்சரி பள்ளிகள் , அரசு உதவி பெறாத அங்கிகாரம் பெற்ற தனியார் தமிழ் மீடியம் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவற்றில் தான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் படி இன்று அனைத்து பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . வரவேற்க தக்கது.அக்கட்டனத்தை மீறி வசூல் செய்யும் பள்ளிகள் தண்டிக்கப் படுவர் என கல்வி அமைச்சரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது சாராசரி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். ஆனால் , நடுத்தர நிலையில் உள்ள மக்கள் தங்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனியார் அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெற்ற பள்ளிகளில் சேர்க்க மிகவும் கஷ்ட படுகிறார்கள். சேர்த்தாலும் அப்பள்ளிகளில் தொடர்ந்து படிக்க கடன் வாங்கும் சூழ்நிலையில் உள்ளனர். இதை அரசு கவனம் கொண்டு செயல்பட்டால் ஏழை மக்களின் படிப்பு தொடரும் , கடன் சுமை குறையும் வாய்ப்பு உள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாநகராட்சி பள்ளி , அரசு உயர் நிலை பள்ளி , மேல்நிலை பள்ளி , தனியார் உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு எந்த வித கட்டணமும் வாங்க வாங்க வேண்டாம் என சென்ற வருடமே ஆணை பிறபித்துள்ளது.
ஆனால் காலம் காலமாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் குறிப்பாக நல்ல தேர்ச்சி தரும் பள்ளிகளிலும் , கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களிடம் நோட் புத்தகம் , பேனா பென்சில் என்ற வகையில் கொள்ளை கொள்ளை யாக வசூல் செய்யப் படுகிறது. குறைந்தது ஆயிரம் முதல் முதல் வகுப்பில் வசூல் நடை பெறுகிறது.மீதி வகுப்புகளுக்கு நீங்களே கணக்கீட்டு கொள்ளுங்கள்.
அது சரி , இதை அதிகாரிகள் தட்டி கேட்க கூடாதா...? தற்போது கோவை மாணவன் தாக்குதல் போல் புகார் எதுவும் வரவில்லை , பாதிக்க பட்டவர் தரப்பில் இருந்து புகார் வந்தால் தான் தாக்குதல் நடத்தியவர்களை அரஸ்ட் செய்ய முடியும் என்பது போல் , இங்கும் , யாரும் புகார் தராததால் , அதிகாரிகளும் தங்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் புகார் கொடுத்தால் , தங்கள் குழைந்தையின் கல்வி பாதிக்கப் படுமோ என்று எண்ணி கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்.
அரசு எத்தனை கமிட்டி போட்டு நிபந்தனைகள் கொண்டு வந்தாலும் , மக்கள் ஒத்துழைப்பு இல்லை எனில் எந்த சட்டத்தாலும் தவறுகளை திருத்த முடியாது. மக்களும் பாதிக்கப் படுவர் . தயவு செய்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டும் தான் , கமிட்டிகளாலும் அரசு திட்டங்களாலும் நமக்கு பயன் கிடைக்கும். மக்கள் உணர்ந்து செயல் படுவார்கள..?
3 comments:
அரசின் இந்த திட்டத்தை வரவேற்கிறேன்.
நானும் வரவேற்கிறேன்
அரசின் இந்த திட்டம் வரவேற்கிறோம் ,ஆனா எந்த பள்ளி இதே ஆதரிக்க போறதேன்னது தான் என் கேள்வி.
Post a Comment