எனக்கு புரியும் .
எனக்கு புரியாது ...
எனக்கு பிடிக்கும் ...!
மொழி நமக்கு
பிரச்சனை இல்லை...!
நீ சிரிக்கும் போது ...
எனக்குள் வேகம் ...!
மரணிக்கும் முன் ...
உனக்கு எல்லாம்
நானே
எல்லாம் செய்து...
உன் சிரிப்பில் ...
நானும் மகிழ்ந்திட வேண்டும்..!
நீ அழுவது
சில நேரம் புரியாவிட்டாலும் ...
பல நேரம் புரிந்து
உன்னை சமாதனம் படுத்தி ....
என் சொல்லோடு
செல்லையும் அல்லவா
கொடுத்தேன் ...!
உன் விரல் பட்டு
பேசும் போது ...
ஆனந்தம் சொல்லி மாளாது ...
பலர் கடிந்தாலும் ,
நொந்தாலும் , கோபப்பட்டாலும்
உறவினர் கூடி உதைத்தாலும்
பரவாயில்லை ....
எனக்கு நீ தானடி ...
என் சொத்து ....
சொந்தமே ...
செல்லமே ..
எந்தன் உயிரே ...
தன் பிள்ளை பேசுவது ...
யாருக்கடி பிடிக்காது ...
புரியாது...!
என் வாழ்வு உனக்கேடி ...!
நீ சொல்லும் சங்கதி ...
என்றும் எனக்கு ...
பெயில் ஆனது இல்லை...!
உங்கள் வீட்டு மழலையிடம்
பேசி பாருங்கள் ...
நீங்கள் தொடர்புக்கு அப்பால் இருந்தாலும்
தொடர்பில் இருப்பதாகவே உணர்வீர்கள்...!
என்றும் டவர் பெயிலியர் ஆவதில்லை...
ஆம்...
குடும்பம் பெயில் ஆவதில்லை...!
 
 

 
 Posts
Posts
 
 
8 comments:
:)
சரவணன் சார் நல்ல முயற்சி !
தொடர்க!
உணர்வுகளின் வலியை கவிதையில் காண்கிறேன். அருமையான வரிகள்.
இரு பொருளில் ஒரு கவிதை. அருமையாக உள்ளது.
பின்னிடீங்க...
நல்ல இருக்கு சரவணன் ...நடத்துங்க...
உணர்வுகளின் தாக்கம் கவிதையின் வரிகளில்....
உண்மை நிலை உங்கள் கவிதையில்...
கலக்கிட்டிங்க..
ஒரு தகப்பனின் நிறைவான அன்பும் ஆதங்கமும் அத்தனை வரிகளிலும் சரவணன்.
:)நல்லா இருக்கு தலைவரே....
Post a Comment