அது உழைப்பாளியின்
உயிர் துளி ...!
கைகளில் உள்ள
கடுமை
உள்ளத்தில் இல்லை ...!
மென்மை அதுவே ....
காரணமாய் ...
முதலாளியின்
சுரண்டல் ...
தெரியாமலே சுரண்டப்படுபவன் ...
மே தினம் மட்டுமே ...
அவன் அருமை சொல்லும்
விடுமுறை என்று ....
முதலாளியின் சுரண்டலுக்கு ..!
தொழிலாளி, உழைப்பாளி
அத்தக் கூலி , தினக் கூலி
மாத சம்பளக் காரன் ,
வார சம்பளக்காரன் ,
இப்படி எப்படி அழைத்தாலும்
உன் உழைப்பின் நிறம்
சிவப்பு ....
உன் இரத்தம்
வியர்வையாய் வருவதால் ...!
தினமும் சருகாய்
காய்ந்து...
கிழே விழுந்தாலும்
உன் சம்பளத்தினமே....
உன் மொத்தக் குடும்பமும்
சிரிப்பில் மலரும் தினம்..!
பிறர் வாழ்வுக்கு
தன் வாழ்நாளில் தினமும்
ஒரு நாளை இழப்பவனே...
புகையில் கருகுவது
நீ மட்டும் அல்ல...
உன் வாழ்நாளும் அல்லவா...
இது தெரிந்தே ....
சமைக்கும் சத்துணவு ஆயா ...!
அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.
5 comments:
//தொழிலாளி, உழைப்பாளி
அத்தக் கூலி , தினக் கூலி
மாத சம்பளக் காரன் ,
வார சம்பளக்காரன் ,
இப்படி எப்படி அழைத்தாலும்
உன் உழைப்பின் நிறம்
சிவப்பு ....
உன் இரத்தம்
வியர்வையாய் வருவதால் ...!//
மிகவும் அருமை.வாழ்த்துக்கள் சரவணன்.
எத்தனையோ பேர் பதிவுகள் இட்டாலும்...உங்களின் எல்லா பதிவுகளும் பொழுது போக்குக்காய் இல்லாமலொ நல்ல ஒரு செய்தியினை சொல்லும் வகையில் இருக்கிறது சரவணன்......! வாழ்த்துக்கள்!
ஹேமா’தேவா மற்றும் என் பதிவை தினம் ரசித்து படிக்கும் அனைவருக்கும் நன்றி.
//தொழிலாளி, உழைப்பாளி
அத்தக் கூலி , தினக் கூலி
மாத சம்பளக் காரன் ,
வார சம்பளக்காரன் ,
இப்படி எப்படி அழைத்தாலும்
உன் உழைப்பின் நிறம்
சிவப்பு ....
உன் இரத்தம்
வியர்வையாய் வருவதால் ...!//
அருமை தல...
//தொழிலாளி, உழைப்பாளி
அத்தக் கூலி , தினக் கூலி
மாத சம்பளக் காரன் ,
வார சம்பளக்காரன் ,
இப்படி எப்படி அழைத்தாலும்
உன் உழைப்பின் நிறம்
சிவப்பு ....
உன் இரத்தம்
வியர்வையாய் வருவதால் ...!//
அம்சமான வரிகள்..
Post a Comment