Friday, April 30, 2010

பயம் அறியான்...

       ”எனக்கு தெரியும் ...பக்கத்து பிளாட்டுள வீடு கட்டுறாங்கள ...அங்கிருந்து தான் வந்திருப்பான்...”

”“அது சரி ...எப்படி இவ்வளவு கரெக்டா சொல்லுற....?”

“போன வாரம் , வீடுகட்ட ...செங்கல் இறக்கினப்ப இதே மாதிரி ஒருவன் ஏறி குதித்து .....டான்சு ஆடினத ...பார்த்தேன்...”

“அப்பவே சொல்லிருந்தா....இப்ப இந்த மாதிரி நடந்து இருக்குமா...?”

“அப்ப அவன் ஆடின ஆட்டத்தை படம் புடித்து வைத்திருக்கிறேன்...பாருங்க..”

“ஆ..உன்னா வீடியோ கமிராவை கையில எடுத்துடுவானய்யா...”

“இருந்தாலும் இன்னைக்கு அதுவும் ஒரு ஆதாரம் இல்லையா....”

“இங்க பாருய்யா....இவன் படம் எடுக்கிறத பார்த்து எப்படி வேலியை பிய்த்துக்கொண்டு ஓடுகிறான் பாரு...”

“இவ்வளவு பயந்து ஓடுகிற அவனை அப்பவே மாண்டையில இரண்டு தட்டு தட்டியிருந்தா ...இன்னைக்கு இப்படி நடந்து இருக்குமா...?”


“யோவ் ...வீடியோவில பாரு ....அவன் வேறு இன்னைக்கு வந்தவன் வேறு...”


“அன்னைக்கு ஒரு தட்டு தட்டி இருந்தா....இன்னைக்கு இப்படி வீட்டில வந்து பொம்பளைப்பிள்ளைகளை இப்படி பயமுருத்தி இருக்க முடியுமா...?”


“நல்ல வேளை அந்த பொம்பளைப் பிள்ளை ...தெளிவா இருந்ததால ...கத்திகிட்டு ...உள்ளே போய் கதவை சாத்திகிடுச்சு...நம்ம வீட்டு பொம்பளைகலெல்லாம் ....இந்நேரம் ...கதி என்ன ஆகி இருக்குமோ...”


“வாத்தியாரு பிள்ளைகளை நல்லாதான் ...வளர்த்திருக்கிறார்...”


“அந்த மானிசன் ...போன வாரம் ...இவனை காம்பவுண்டுக்கு வெளியே ...பார்த்திருக்காரு...”


“அப்பவே...ஒரு சாத்து ....சாத்தி ...இருந்தா இன்னைக்கு இந்தநிலைமை வந்திருக்குமா...விவரம் இல்லாத பிள்ளைகளானால் என்னாவாயிருக்கும்...”


“பொட்டப் பிள்ளை சமாச்சாரம் இல்லையா...அப்பவே...ஒரு போடு போட்டிருக்கணும்...”


“நம்ம வீடியோ அப்ப பார்த்திருக்காரு ....ஆனா நம்ம வாத்தியாரு தான்...சார் பாவம் ...பார்த்து அடிக்காதிங்க வழி தெரியாம வந்திருப்பான்...என்று சொல்லி ...விட சொல்லிருக்காரு..”


“எம்பா எது எதில பாவம் பார்க்கிறது...அன்னைக்கே...ஒரு போடு போட்டிருந்தா ...இன்னைக்கு அப்படி கூப்பாடு போட தேவை யில்லையே...”


“அத விடுங்க...பொட்டபுள்ளைக்கு எதாவது ஒண்ணு ஆயிருந்தா...என்ன செய்யிறது...ஒத்த போட்ட...அதுவும் அழகு பொத்த பிள்ளை...இனிமேலாவது சுதானமா...இருப்பா ...எதுவும்னா என்னைக் கூப்பிடு...”என நான்கு வீடு தள்ளிய காமாயி பாட்டி வாயை திறக்க..


“ஆத்தா...இருட்டு நேரம் பார்த்து சுதானம் உன்னை யாரு வர சொன்னது....”


“சாரிடா..பெரிய மனுசா...”என முனங்கிய படி சென்றது.


   அன்று தெருவெல்லாம் இரவு முழுவதும் இதை பற்றியே ஒரே பேச்சு.விடிந்தும் கூட துக்கம் விசாரிக்க வந்தம் இருந்தனர். 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


   ”என்ன கல்யாணம்...நைட் தூக்கம் இல்லையா...?கண் இரண்டும் சிவந்து காணப் படுகிறதே...”


“இல்லை சார்...அது வந்து ...”


“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...பொண்டாட்டி நேற்று தான் ....வந்திருப்பா...தெரியாதா...”


“சார் ...பணி மாறுதலில் அவள் போன மாதமே ...வந்திட்டா...”


”யோவ்...பார்த்தியா...இன்னும் சின்ன வயசுன்னு நினைப்பு...உன் பொண்டாட்டி வந்தது தெரியும் ...அவ அம்மாவுக்கு சீரியஸ் என்று சொன்னீயே ...அதான்...பொண்டாட்டியோட ...ஆஸ்பத்திரிக்கு  சென்றாயான்னு கேட்க வந்தா...”


”சரி அது இருக்கட்டும் ...இன்னைக்கு டி.யி.ஓ. ஆபிஸ்க்கு போய் சம்பளபில்லை வைத்திவிட்டு வா...”


“கொடுங்க சார்....போறேன்...”




கோடை வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் கொடுமை கூட நேற்றைய சம்பவத்திற்கு கொஞ்சம் இதமாக த்தான் தெரிந்தது....மனதிற்குள்ளே..


“யாரு செய்த புண்ணியமே...என் மவள் தப்பித்தாள்...கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்..”


இப்படியாக ஒரே புலம்பலாக ஓடியது...மாலையும் வந்தது.


“டேய்...கல்யாணம் ...நேத்து இரவு ...ஒரு பத்து தடவையாவது போன் செய்திருப்பேன்...ஏன் என்னை தொடர்பு கொள்ள வில்லை...? என்னமும் பிரச்சனையா....?”என்றான் கல்லூரி தோழன் .




“அது எல்லாம் ஒண்ணும் இல்லைடா...மணியாச்சு நாளைக்கு வா...விரிவா போசலாம்..”
என்று சொல்லும் போதே செல்போன் சிணுங்கியது.


“ஹாலே...பாப்பாவா...இந்தா...வந்திட்டேன்...ஆபிஸ்சில இருந்து கிளம்பிட்டேன்...”


“அப்பா...பயமா இருக்குப்பா...அம்மாவும் இன்னும் வரல...சீக்கிரம் வந்திடுப்பா...”


“அதான் தாத்தா...இருக்காருல்ல....அண்ணணுடன் சேர்ந்து படி...நான் ஒரு அரை மணி நேரத்தில விந்திடுகிறேன்...”


“என்னடா...பிரச்சனை ...ஏன் எப்பவும் இல்லாம...உன் பிள்ளை உன்னை தேடுது...”


“இல்லை செந்தில்....வீட்டில எல்லாரும் பயந்து சாகிறாங்க....நேத்து நடந்த விசயத்தை கோள்வி பட்டா...நீயே..பயந்திடுவ...இல்லை நீ வீட்டை விட்டு காலி பண்ணி வந்திடுவே...”


”சரி சொல்லு ...”என கூறிக் கொண்டே....கல்யாணத்தின் லப் டாப்பை எப்பவும் போல் திறந்தான்.


“பக்கத்து பிளாட்டில...வீடு கட்டுறாங்க....”


“மீண்டும் ...இடத்தை அளந்து தொந்தரவா...இல்லை போலீஸ் ஸ்டேசன் வரை இழுத்துட்டானா...”


“ஏன்டா...வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதா...?”


“அப்புறம் பக்கத்து பிளாட்டில ...அப்படி என்ன பிரச்சனை....புதுமாதிரி எதுவுமா...அரசியல் வாதியேட பிளாட்ட வாங்கி வீடு கட்டாதன்னு எத்தனை தடவை சொன்னேன்...”


“தங்கமான மனுசன என்டா ..திட்டுர..அவரு சொன்ன மாதிரி இன்னைக்கு பிளாட் விலை ஆறூ மடங்கு ஏறிடுச்சு ...”


“பொடி போடாம....விவரம் சொல்லு....இது என்னடா...புது விடியோ....”


“அந்த வீடியோவ பாரு....அப்புறம் நான் பயப்படுறதுக்கு காரணம் புரியும்...”


“யாரு அந்த பொழுது போகாத வீடியோ கிராப்பர் எடுத்ததா....”


“எப்படி வேலியை கிழித்து கொண்டு வெளியே போறான்....”


“என்னடா...மரியாதை ..என்னாச்சு....”


அது இருக்கட்டும் ...இது என்ன இந்த வீடியோல எல்லாரும் கத்துகிறீங்க....”


செல் மீண்டும் சிணுங்கியது...


“அப்பா .. பயமா இருக்குப்பா...திரும்பவும் எதாவது ஆயிடுமேன்னு ...அம்மா வந்திட்டா..அவ தான் போன் போட சொன்னா...அவளுக்கும் பயமா..இருக்காம்...”


“ம்ம் இந்தா...கிளம்பிட்டேன்...”


“யாருடா...இந்த பொரிசு....”


“அவரு மட்டும் இல்லாட்டின்னா...நான் தினம் தினம் பயந்து சாகணும் ...அவனை பிடித்து இருக்க முடியாது ...”


“என்னடா...இதுக்கு போய் ...”




“அவரு தான் சொன்னாரு ...அந்த கம்பு பார்த்தியா....பக்கத்து தெருவில இருக்கார்...சத்தம் கேட்டு ஓடி வந்தாரு...அந்த காம்பால உடம்புல ஒரு அடி ....அப்படியே....கம்ப வைச்சு ...திமிராம பிடித்துகிட்டாரு...நான் கொலை வெறியில இருந்தேன்...அதுவும் பொம்பளபிள்ளைக்கு ஓண்ணு கிடக்க ஓண்ணு ஆயிடுந்தா என்னாவாகியிருக்கிறதுன்னு...ஒரே போடு....”


“மண்டையில ஒரே அடி ..உயிர் நாடி அந்து விழுந்து இருக்கும்....அப்புறம் நம்ம பக்கத்து வீட்டு காரர் ...ரேட்டில வருகிறவன் போகிறவன் எல்லாம் ஒரே போடு ...”


“இதை நம்ம வீடியோ...கிராப்பர் படம் வேறு எடுத்துள்ளார்.”


“இது என்னநெட்டில டவுண் லேடு பண்ணி வச்சுருக்க....”


“இதுவா....கண்ணாடி விரியான் பாம்பு ...மிகவும் விஷ்ம்...வாய்ந்தது...இந்தியாவிலும் ஆசியாவிலும் காணப்படும் சமவெளி பரப்புகளில் குட்டை செடி புதர்காடுகளில் வாழும். இதன் தலை முக்கோண வ்டிவில் பெரிதாக காணப்படும். இதன் தலையை வைத்து விசதன்னையை அறியலாம்...மேலும் ..இதன் உடம்பில் உள்ள கட்டங்கள் பிரவுன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் காண்ப்படும்....இதன் கட்ட நெருக்கத்தினை வைத்து விசத்தன்மையை கூற முடியும்....”


“அதன் வால் பகுதி பார்த்தியா...ஒரே சீரா ஒடுங்காமல் ...திடீரென்று ஒடுங்கியுள்ளது, இப்படி ஆல் திடீரென்று ஒடுங்கினால் விசத்தன்மை அதிகம் உடையது என அறியலாம்....”


“நீயும் பாம்பு பத்தி தெரிந்து வைத்திருக்கீயே..... ”


“அது சரி பாம்பு பத்தி தெரிந்த்து வைத்த நீ ...உன் குடும்பம் ஏன் இந்த பயம் பயப்படுது...”




“உனக்கு என்னத் தெரியும் ...என் பொண்ணு ..என் தங்கச்சி பொண்ணு மாடியில படிச்சு முடிச்சு ...கீழே இறங்கி வந்துச்சு ...பார்த்தா...படியில இவன்...ஒரே கத்துல மாடி ஏறி ஒடிபோச்சு ..தெரியாம மிதிச்சு இருந்தா இரண்டு போரையும் பார்த்திருக்க முடியாது...”


“உன் நல்ல மனசுக்கு அப்படி யெல்லாம் நடக்காதுடா...”


“கத்தின கத்தில என் போர்டிகோவுக்கு வந்திடுச்சு...அப்புறம் நான் கம்பு எடுக்க...பக்கத்தில அனைவரும் எடுக்க....எப்படி விரட்டுச்சு தெரியுமா...யாரும் பக்கத்தில போக முடியாது ....தவ்வி தவ்வி சீறுச்சு ...கடைசியில ஒரு செடி மறைவில படுத்து துரத்துகிற எங்கள கொத்த காத்து கிடந்தது...அந்த பொரியவர் ...கம்ப வைச்சு ...உடம்பில ஒரு அடி அப்புறம் ஒரு அமுக்கு அமுக்கினாறு பாரு...அப்படியே...தலையை தூக்கிச்சு ...என் கம்பை வைத்து ஒரு போடு...சுருண்டு விழுந்துச்சு....அப்புறம் ஆளு ஆளுக்கு ...ஒரு அடி ...”


“செத்த பாம்ப யாரு தான் அடிக்க மாட்டாங்க...அது என்ன பாம்புன்னு சொல்லாம...அவன் அவன் ந்னு பிணாத்தின...”


“அந்த பொரியவரும் ...கடைசி வீட்டு கிழவியும் தான் ஆறு மணிக்கு மேல ...பாம்புன்னு சொல்லக்கூடாது....அது காதில கேட்டு படை யெடுத்திடும்...அதுனால ...அவன் இவன்னு சொல்ல சொன்னாங்க ..நேற்று இரவிலிருந்து அனைவரும் அவன் வந்தான்,இவன் அடிப்பட்டான் என்று தான் சொல்லுறாங்க ...உன்னை மாதிரி புதிசா கேட்கிறாவனுக்கு...எது போலவே...சந்தேகமா...தெரியும்...”


“சரி ...அவன் வந்தாலும் வந்திட போறான்...போ...செத்த பாம்பையும் வீடியோ எடுத்த அவருக்கு ஒரு விருது கொடுக்கணும்...”


செல் சிணுங்கியது ..”அப்பா...அவன் வந்திட்டா...என்ன செய்யிறது....”




“அடே...சாமி போதுங்கடா...உங்க மரியாதை ....ஆள விடுங்க...”



3 comments:

Unknown said...

ராத்திரில பாம்புன்னு சொல்லக்கூடாதுன்னு எங்க பாட்டியும் சொல்லும்

புலவன் புலிகேசி said...

மிக நீள மரியாதையா இருக்கு தல..அவன் வந்தா விசாரிச்சி நீயா படம் போட்டுக் காட்டுங்க...

AkashSankar said...

சரவணன் இன்னும் கொஞ்சம் நல்ல எழுதிருக்கலாம்னு தோணுது...ஆனால் நல்ல கற்பனை...கொஞ்சம் வார்த்தைகள்ள கவனம் செலுத்தி இருக்கலாம்

Post a Comment