"பயமா இருக்கு டீச்சர் ..."என தேம்பி அழத்தொடங்கினான்.
"டீச்சர் சொன்னா கரெக்டா இருக்குமில்ல ...நீ எனக்கு இரண்டாம் வகுப்பில ...கல்வி அதிகாரி பாராட்டுகிற மாதிரி வரைந்து கொடுத்த ....அது நீ பள்ளியில் படிக்குமுன் நடந்த சம்பவம் ...ஆனா...அந்த கல்வி அதிகாரியின் முகம் மட்டும் கன கட்சிதமா வரைந்து இருந்தே...அது தான் என்னை ஆச்சரிய படுத்தியது...அது மாதிரி இது நடந்து முடிந்த விசயமா ஏன் இருக்க கூடாது? மனச போட்டு குழப்பாத ...நல்லதாவே நினைக்க கற்றுகொள் ! "
அதற்குள் ஆசிரியர் குரு வந்தார். " என்னவாச்சு ...யாரும் அடிச்சுட்டாங்களா ? " என கெட்ட குருவின் கண்கள் ரேவதியின் கையில் வைத்து இருந்த ஓவியத்தை பார்த்து ..தொடர் கேள்விகளை நிறுத்தி விட்டது.
" டீச்சர் ..அவன் அருமையாய் படம் வரைவான் ...அதுமாதிரி இதுவும் ஒரு படம்.. அதனால இவனை என்னிடம் அனுப்புங்க அவனை சரிபடுத்திகிறேன்.."
" குரு சார் ...இவன் படம் வரைவதில் பிரச்சனை இல்லை ...ஆனா இந்த படம் நிஜமாகி விடக்கூடாது என்று ...."
"உங்களுக்கும் ..இவன் படம் வரைந்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பது தெரியுமா ...?"
" அப்படின்னா ..இவன் உங்களுக்கும் படம் வரைந்து கொடுத்திருக்கிறான் அப்படி தானே..?""ஆமாம் ...ஒருமுறை நான் குற்றாலத்தில் என் மனைவியின் தம்பியுடன் குளிப்பது போல் வரைந்து கொடுத்தான்..அடுத்த வாரமே ...நாங்கள் இருவரும் சென்றோம்.."என்றார் குரு.
"சார்...எனக்கு இது வரை இரண்டு படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறான் இரண்டும் நடந்து முடிந்தவை தான் ....தமிழக முதல்வரிடம் பரிசு வாங்குவது போன்று படம் ... அது என் கல்லூரியில் தமிழ் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு மாநில பரிசு வாங்கிய போது நடந்த நிகழ்வு...."என ரேவதி சொல்ல ," டீச்சர் ...ஒரே குழப்பமாக இருக்கிறது " என்றான் அருண்.
"எனக்கு அப்துல் காலாம் கை குலுக்குவது போன்ற படம் வரைந்து கொடுத்தான்....மறு வாரம் என் பிளாக் படித்து ...என்னை பாராட்டி எனக்கு ஈ.மெயிலில் கடிதம் அனுப்பினார்....அப்ப நடக்க போகிற நிகழ்வாகத்தான் இருக்கும் என அருண் பயப்படுகிறான் "
"டேய் அருண் ...குரு சார் ...சொல்லும்படியாக நடக்காது ....நீ நடந்து முடிந்த சம்பவமாகவும் வரைந்து கொடுத்துள்ளாய் ஆகவே மனச போட்டு குழப்பாம ...படிக்கிற வேலையை மட்டும் பாரு ...நல்லதே நடக்கும்..."
"ஆமாண்டா ...டீச்சர் சொல்லுகிற மாதிரி நடந்து முடிந்த சம்பவமாக இருக்க கூடாது ...நீ வரைந்தது ....நீண்ட நாளுக்கு முன் நடந்ததா இருக்கும்னு நினச்சு படிக்க போ..."
அதற்குள் அருண் தங்கை புஷ்பா அவன் வரைந்த படத்தை பார்த்து விட...
"அண்ணே...அப்பா ...அப்பா..." என அழத்தொடங்கினாள்.
----------------
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அருணை புஷ்பா அவன் தாயிடம் காட்டி கொடுத்தாள்.
அருண் வரைந்த படத்தை பார்த்த அவனின் தாய் கதறி அழத்தொடங்கினாள் . அதை பார்த்த அவனின் தந்தை " ஏய் என்ன எவனும் சரக்கை கொண்டு ஓடிபோயி காசு கொடுக்கலையா ..."
"அட பாவி மனுசா...நடக்கப் போகிறது தெரியாம இப்படி நக்கல் பேச்சு பேசுகிறாயே.."
" அடி போடி என்ன குடி முழ்கி போச்சு ....விவரமா சொல்லு ..."
"உன் மவன் படிக்க சொன்ன ....வரைந்து வந்திருக்கிறான் பாரு...நீ படம் வரைய கூடாது ன்னு படிச்சு படிச்சு சொல்லியும் ...வரைந்து வந்திருக்கிறான் பாரு...."
படத்தை வாங்கி பார்த்தவுடன் ஆச்சரியப் பட்டார்.
"ஏய்..இதுக்கு போய் என் அழுகிற ..."
" ஆமாய்யா ...உனக்கென்ன நான்தான் பயப்படனும்..."
" ச்சீ கழுதை ...அழுகிறதா நிறுத்து ...இது ஏற்கனவே ...நடந்து முடிஞ்சது...உன்னை கல்யாணம் கட்டிகிறத்துக்கு முன்னாடி நடந்தது."
"என்னய்யா சொல்லுகிற ...விவரமா சொல்லு ..."
"இவன் வரைந்திருக்கிற மணிமேகலை பெண்கள் பள்ளி அருகில் ...கல்யாணத்துக்கு முன்னாடி சவாரி அடிக்கிறதுக்கு முன்னால ஒரு லாரி காரன் இடுச்சுட்டு போயிட்டான் ..அருகில் இருந்த பட்டியக்கல்லில் தலை அடித்து ...தலை நிறைய ரத்தம் ...எல்லாரும் நான் செத்துபோயிட்டேன் அப்படின்னு நினச்சு தூக்க வரல ..."
"அப்புறம்..."
" உன் மவன் வரைந்திருக்கிற படத்தில என் ரிக்சா அருகில் இருக்கிறாரே பெரியவர் அவர் தான் என்னை தூக்கி காப்பாத்தினவர் ...அவர் இப்ப உயிருடன் இல்லை.அவர் உயிருடன் இருக்கும் வரைக்கும் அவரை நான் நித்தம் பார்த்து வணங்கிட்டு வருவேன். அவரு மட்டும் என்னை சரியான நேரத்துல காப்பாத்த வில்லை என்றால் என்னை உயிருடன் பார்த்திருக்கிற முடியாது..."
"இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு...இனிமே நீ படம் வரையாதப்பா...."
"அடி போடி ...முட்டாக் கழுதை ...அவன் வரையிறத தடுக்காத..நான் பயப்படுகிறது ...அதுக்கு அல்ல இவன் பெரியவனாகி ..ஏதாவது அரசியல் தலைவர் சாகிறதா வரைந்து ....அதுனால இவனுக்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது ... அப்படின்னு தான் பயப்படுகிறேன் .."
"அதுவும் சரி தான்....எது எப்படியோ...நல்லது நடந்தா....போதும் ..இப்ப தான் எனக்கு உசிரு வந்தது...."
3 comments:
கதை நல்லாயிருக்கு
மிகவும் அருமையான கதை .
வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்.
பாண்டசி .நல்லா இருக்கு .இப்படி எதாவது நடக்க எல்லார் மனதிலும் ஆசை இருக்கும் தானே ?
Post a Comment