குழந்தைகள் தினத்தை
கொண்டாடுங்கள் !வருடம் தோறும்
தினத்தை அல்லவா
கொண்டாடுகிறீர்கள்!
குழந்தைகள் மனதை அல்ல!
என்ற கவிகோ அப்துல்ரஹ்மான் வரிகளின் முக்கியத்தை உணரும் தருணம் வந்துவிட்டது!
சமீபத்தில் கல்லூரி மாணவன் தன்தாயை கொன்ற செய்தி கேட்டு பதறாதவர்கள் யாரும் இல்ல. ஏன் மாணவர்கள் மனம் மாறிவருகிறது? தவறான கருத்துக்கள் முளைத்து மூளை மழுங்கி தவறான முடிவுகளுக்கு அடிமை ஆகிறார்கள்?
குழந்தைகள் அறிவுபூர்வகமாக சிந்திக்கக்கூடியவர்கள். நாம் சிந்திக்காதா விஷயங்களை வெளிப்படுத்துபவர்கள். மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தனிமையாக இனிமையை ரசிப்பவர்கள். நாம் நம் கனவுகளை அவர்கள் மீது திணிப்பதனால் அவர்களின் இயற்கையான புத்திசாலிதனத்தை இழந்து , தன் தனித்தன்மையை இழந்து தவிக்கிறார்கள்.
நம்முடைய வளர்ப்பு அவர்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் பாதிப்பதாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனணம் செய்யும் தன்மையில்லா ,சுதந்திரமான சுவையான கல்விமுறையை நாம் தரவேண்டும்.
இயற்கையோடு இணைந்த கல்வியை நாம் தர முயற்சிக்க வேண்டும். அதே போல நாம் பள்ளிக் கூடங்களையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தற்போது பள்ளிகள் அரசு விரும்பும் படியான மாணவர்களைத்தான் நம் ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள்.
இன்று மாணவர்களுக்கு தண்டனை தருவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க பயப்படுகிறார்கள் ,கண்டிக்கப் பயப்படுகிறார்கள். அரசு மாணவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என்று விளம்பர படுத்திய உடன் மாணவர்கள் அச்சட்டத்தை வைத்து ,ஆசிரியர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளனர். பெற்றோர்களும் ஒரே குழந்தை என்பதால் அதற்கு துணை போகிறார்கள். இத்தவறை அரசும் உணர்ந்து ஆசிரியர்களுக்கு மாணவர்களை பக்குவபடுத்த தண்டிக்கலாம் என்று கூற முன்வரவேண்டும்.
சமிபத்தில் மதுரையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் தொடுக்கப்பட்ட வழக்கில் ,மாணவரின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளது. ஆசிரியர்களுக்கும் இப் பக்குவம் வர வேண்டும். குழந்தைகளை அவர்களின் சுதந்தர உணர்வு பாதிக்காமல் ,மாணவன் தன்னையே உணர்ந்து செயல்படும் விதமாக கல்வி கற்றுத்தர வேண்டும்.
புத்தகம் வாசிக்க கற்றுத்தர வேண்டும் ,பாடபுத்தகம் தவிர்த்து நிறைய வாசித்து பயன் பெறச் செய்ய வேண்டும்.
இன்று செயல்வழிக்கற்றல் முறையில் 'புத்தக பூங்கொத்து 'மூலமாக மாணவர்களுக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்க கொடுத்துள்ளார்கள், ஆசிரியர்கள் முறையாக அவற்றை பயன்படுத்தி மாணவர்கள் எதிகாலம் சிறக்க உதவ வேண்டும் . சமச்சீர் கல்வியில் இதை அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் அமுல்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும என்பதற்காக அவர்களுக்கு தனி டியுசன் , தனி அறை, என தன்னிடம் இருந்து தனிமை படுத்தி , தனித்து நிற்பதால் , அன்பு தவிர்க்கப்படுவதாக தவறாக உணர்ந்து , மன நோயாளியாகி ,முடிவில் மன நோயாளியாகி தவறான செயலில் இறங்கி தாயையே கொல்லும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் .
குழந்தையின் இயல்பு பாதிக்காமல், அன்புடன் அரவணைத்து , திணிக்காத இனிக்கும் கல்வியினை தந்து , அவனின் தன் நிலை உணர்ந்து செயல் பட நாம் உதவ வேண்டும்.
1 comment:
நல்ல கருத்து வாழ்த்துக்கள்....
Post a Comment