Sunday, January 31, 2010

மதுரையில் பிளாக்கர்

  மதுரையில் இன்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற பிளாக்கர் கூட்டத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை   உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .

    தருமி பிளாக்கர் என் அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் சாம் ஜார்ஜ் என்பதில் மகிழ்ச்சி . என்னை பார்த்தபின் அவருக்கு அதைவிட சந்தோசம். எனக்கு  வசை பாட ஆள் கிடைத்து விட்டதாக  கூறினார். ஐயா , நீங்கள் திட்டி , திட்டி தீட்டிய வைரம் இது, இன்னும் தீட்டுங்கள், மிக்க மகிழ்ச்சி.தாயின் அரவணைப்பை உணருகின்றேன். என் கல்லூரி ஆசிரியர் சைலஸ் அவர்களை பார்த்து பழைய நிகழ்வுகளை பகிர்ந்ததில் , வயது குறைந்த ஒரு உணர்வு.
       டாக்டர் ஷாலினி மிகவும் அருமையாக குழந்தைகளின் வளர்ப்பை எடுத்துக் கூறினார்  . செக்ஸ் சம்பந்தமான அனைத்து விசயங்களும் பேசப்பட்டன. ஆண் , பெண் சேர்ந்து இருந்ததால் என்னவோ  நிறைய அவரே பேசவேண்டியது ஆகி விட்டது. சுமார் முன்றரை மணி நேரம் உரையாற்றினார். அவருக்கு பிளாக்கர் சார்பாக மீண்டும் நன்றி.
         
         நம் குழந்தைகளுக்கு நம் உடம்பின் உறுப்புகள் கற்றுத்தரும் போது , நம் பாலியல் குறிகளையும் சேர்த்து கற்றுத்தரவும். அது மட்டுமல்லாது , இவ்வுறுப்புக்கள் பிரைவேட் ஆகும் , இதை நீ பிறருக்கு காட்டக் கூடாது. உன் தாய் மட்டுமே அதை தொட உரிமை  உண்டு.
தந்தை கூட தொடஅனுமதி இல்லை. இவ் உடல் கூறு சம்பந்தமாக சந்தேகங்கள் வந்தால் ,
அம்மாவிடம் கேட்கவேண்டும். டாக்டர் கூட தனியாக எந்த பெண்ணையும் சோதனை செய்யமுடியாது, உடன் தாயோ ,செவிலியரோ இறுக்க வேண்டும்.

                   குழந்தைகள் அதிகமாக உறுப்புகள் சம்பந்தமாக பேசினாலோ , அம்மா அந்த அங்கிள் வீட்டுக்கு போக மாட்டேன் என்று கூறினாலோ, அது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக தான் இருக்கும், ஆரம்பத்திலேயே அதை சரிசெய்து விடுங்கள் , இல்லையெனில் அது மன பிரச்னைக்கு கொண்டுசெல்லும் என நிறைய உதாரணங்களுடன் விளக்கினார்.
                    
                   ஆண் , பெண் எந்த குழந்தையாக இருக்கட்டும் செக்ஸ் விசயங்களை, தாய் மட்டும் குழந்தைகளுடன் பேசி அதை சரிசெய்து விடலாம்.  தந்தைக்கு கூட உரிமை இல்லை. பிறருடன் பழகும் போது , தொடாமல் பழகச் சொல்லித்தரவும். அவ்வாறு தொட்டுபேசினால், உடனே அவர்களை திட்டிவிடவும் , முடிந்தால் அடிக்கவும் . என்ன திமிர் பிடித்தவள் என்று கூறினாலும் பரவாயில்லை என அருமையாக விளக்கினார்.
    
                ஞாயரை பயனுள்ளதாக செலவழித்த பெருமை மதுரை பிளாக்கர் நண்பர்களுக்கு சாரும்.          

1 comment:

தருமி said...

வாங்க'ப்பா .. வாங்க . நம் கருத்தரங்கம் பற்றிய முதல் பதிவு. எத்துணை வேகம் ..!

எம்புட்டு மகிழ்ச்சி ..

அடிக்கடி சந்திப்போம்.

Post a Comment