நாம் குழந்தைகளுக்கு எதிர் மறையான சிந்தனைகளை நம்மை அறியாமலே கற்றுத்தருகிறோம்.
உதாரணத்திற்கு திருடாதே, பொய் பேசாதே , தள்ளாதே ,கிள்ளாதே,டிவி பார்க்காதே....
இவ்வாறு பல எதிர்மறை சிந்தனைகளை நாம் நம் குழந்தைகளுக்கு விதைக்கிறோம்.
நம் மனித மேம்பாட்டுத் துறை அமைச்சர் சமீபத்தில் கூறியதை நினைவு படுத்தக் கடமைப்பட்டுள்ளேன் . ஒரு இலட்சம் குழந்தைகள் இடைநிற்றல் நிலையில் உள்ளனர்.
அதாவது பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதற்கான காரணக்களை நாம் நம் கல்வி முறை சரியில்லை என்று குறை கூறும் முன்னர்
61 வது குடியரசு கொண்டாடும் இவ்வேளையில் நம் அடிப்படை உரிமைகளை தெரிந்து இருப்பது போன்று , நம் அடிப்படை கடமைகளை அவசியம் பின்பற்றவேண்டும்.
2002 ஆம் ஆண்டு ,86 வது சட்டத்திருத்தத்தின் படி 6 வயது முதல் 14 வயது வரை நம் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கவேண்டும். நாம் நம் வீட்டுக்கு அருகே பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை முறை பள்ளிக்கு அனுப்ப சொல்லி எடுத்துக் கூறியுள்ளோம். இக் குடியரசு தினத்திலாவது முயற்சி செய்து பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்போம் .
"ஒரு பொது நல அரசு , ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க வகுக்கும் திட்டங்கள் அனைத்துகே வளர்ச்சித் திட்டங்கள் தான். கல்வி கூட நேரடியாகப் பார்த்தால் வளர்ச்சிப்பணியில் வராது. ஆனால் , மனிதனின் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் , அதுவும் வளர்ச்சத்திட்டமே!....இலவச டிவி த்திட்டமும் ...மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் திட்டம்.. ''தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பதில் .(27 .1.2010 ஆனந்த விகடன் )
அதே இதழில் நம் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் "இன்று கல்வித்துறை பணம் கறக்கும் இயந்திரமாகவோ ,பணம் விழுங்கும் திமிங்கலமாகவோ மாறியிருக்கிறது."
இது தான் நம் கல்வி நிலைமை ,இது இப்படி இருக்கட்டும் இக்குடியரசில் நாம் சபதம் எடுப்போம். நம் குழந்தைகளை கல்வி கற்க முயற்சி மேற்கொள்வோம். இடை நிற்றல் தவிர்த்து அனைத்துக் குழந்தைகளும் பள்ளி செல்ல நம் குறைகளை தவிர்ப்போம்,
நம் குழந்தைகளுக்கு நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்போம். உண்மை பேசு , நம் பொருளை பத்திரப் படுத்துவோம், படித்தபின் டிவி பார்ப்போம், விளையாட்டும் போது கவனமாக இருப்போம் என்பது போன்ற நேர்மறைச் சொற்களை நம் குழந்தைகளுக்கு விதைத்து தன்னம்பிக்கையை வளர்ப்போம். இச் சிந்தனைகள் நம் குழந்தைகளை தானகேவே பள்ளிக்கு அழைத்துச் செல்லும்.
4 comments:
நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் மதுரை சரவணன்.
நல்லபதிவு சரவணன் அண்ணே..!
உங்கள் அறிமுகம் மகிழ்ச்சியை தருகிறது.,பதிவுகள் தரமாக இருக்கிறது.தொடர்வோம்.
Post a Comment