தண்ணி நிறைய குடிக்கச் சொல்லிருக்கரே
இத புரியாம திட்டுறா எம்பொண்டாட்டி
நான் எவ்வள ஸ்டடியா கடைபிடிக்கிறேன்
மரம்
எனக்கு பேய் பிடித்தது என
வெட்டிவிட்டார்கள் மனித பேய்கள்
சுற்றுச் சுழல் மாசுப் பேய் பிடித்து
வீழ்த்துவது புரியாமல் ....
காட்டு மேட்டுல
கம்மாக் கரையில
காணாமே காணாம்
மழைக்கும் வெயிலுக்கும்
சின்ன வயசில
ஒதுங்குன மரத்தக்
காணாமே காணாம்
பாவி மக்க
மரத்த வெட்டி
வயல போக்கி
மனையாக்கி ...
மண்ணா போனாங்க
மாரியாத்தா,காளியாத்தா
கோவிலுமுள்ள காணாம்போச்சு
கடவுளே இவங்கள
யார் கேட்பா ?
1 comment:
சமூக பார்வை கொண்டுள்ள நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
word verification - ஐ நீக்கி விட்டீர்கள் என்றால் கருத்திடுபவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்...
நன்றி ..
Post a Comment