Monday, January 4, 2010

பூஜ்ஜியம்

பூஜ்ஜியத்திற்கும் மதிப்புண்டு
ஆம் ! நான்
உன்னோடு சேர்ந்தபோது!

நான் உன்னையே
வட்டமிட்ட போது
தெரிந்து கொண்டேன்
பூஜ்ஜியம் முக்கியமென்று!

உன் இனிமையில்
சுற்றும்போது அறியவில்லை
தனிமையில் தந்தை 
கொடுத்த பணம் 
பூஜ்ஜியமானதும் புரிந்தது 
காந்தி சிரிப்புகருகிலுள்ள
புஜ்ஜியம் முக்கியமென்று!

கவுண் டவுன்
புஜ்ஜியமானதும் ராக்கெட்
பறந்தது !
என் காதல் 
ராக்கெட் பறந்த
பின் கவுண் டவுன் 
ஆரம்பமானது
புஜ்ஜியமானதும் தான்
என்னையே உணர்ந்தேன்!


வட்டத்துக்குள் பூஜ்ஜியமாய்
என்னை சுருக்கி
கணக்காய்  வாழ்ந்தேன்
வாழ்க்கை வலியின்றி
வசதிமிக்கதாய்
வண்ணமாகியது!
வாழ்வை  புஜ்ஜியமாக்கி
புதுமை படுத்திக்கொள்!
புஜ்ஜியத்தின் அருமை
உணர்வாய் !        

3 comments:

hayyram said...

gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com

கமலேஷ் said...

மிக நன்றாக இருக்கிறது தோழரே.... வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

comments பகுதியில் உள்ள word verification ஐ எடுத்து விடுங்கள்...கருதிடுபவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்...

Post a Comment