Sunday, January 3, 2010

மதுரையிலிருந்து வேலூர் பயணம்

       மதுரையிலிருந்து வேலூர் பயணம் மிகவும் சுவையான அனுபவம்.  1857 ல் முதல் சுதந்திர போர் நடை பெற்ற அதே ஊர் தான் . ஆமாங்க , சிப்பாய் கலகம் நடை பெற்ற ஊர்தான்க!
        வாஜ்பாய்க்கு நன்றி ! தங்க நாற்கரச்  சாலை மிகவும் சொகுசான பஸ் பயணத்திற்கு உதவியது. அரசு பஸ் தான் , இருந்தாலும் ௯ட்டம் அதிகம் இல்லை. தனியார் பஸ் ௯ட்டம் அதிகம் ஏனோ!
           அருகில் இருந்த விழுப்புரம் செல்லும் நபர், "சார், தனியார் பஸ்சில் லக்கேஜ் , கொரியர் வருமானம் அதிகம், மீதி பச்சண்ஜர் லாபம் தான் . அதை வைத்து நன்றாக சர்வீஸ் செய்கிறார்கள் ". அப்படியா !
             சி. எம் . சி. மறுவாழ்வு மையம் சென்றேன் . என் தங்கை வீடுக்காரர் முதுகு தண்டுவட பிரச்சனைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சென்று பர்ர்த்தபோது தான் தெரிந்தது அதை  விட மிகவும் மோசமானவர்கள் இருக்கிறார்கள் ! ஆம் ,அவரால் எழுந்து நடக்க முடியாது . இடுப்புக்கு கீழ் இயக்கம் கிடையாது.ஆனால் அதை விட   தலை முதல் கால் வரை இயக்ககம் இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் .
              தயவு செய்து தலை பின்புறம் , முதுகு பகுதி , கழுத்தும் முதுகும் சேரும்பகுதியில்    அடிபட்டால் உடனே மருத்துவரை பார்க்கவும் . மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! பின்பு நடக்க முடியாமல் போய்விடும்.
              பங்காளதேஷ், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் இருந்து இதே பிரச்சனைக்காக நிறைய போர் இருக்கிறார்கள்.   விழுப்புரம் சேர்ந்த மருத்துவ கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் கார் மரத்தில் மோதி , தண்டுவடம் அடிபட்டதில் இன்று, பேச முடியாமல் , நடக்க முடியாமல் , குழந்தை போல் உள்ளான் .
           வேலூரில் கால் இடறி கிழே விழுந்த ரயில்வே அதிகாரி மிகவும் நடக்க  முடியாமல் பட்டுத்த பட்டுக்கை ஆக உள்ளார். தண்டுவடத்தில் சிறுவயதில் அடிபட்டதாம்.
          பாத் ரூமில் இருந்து கீழே விழுந்த இருபத்து ஆறு வயது , இரு குழந்தைகளின் தகப்பன் , இன்று பேச  மட்டும் முடியும் ,படுத்த படுக்கை , உதவிக்கு தாயும், மாமனாரும் .
         பைக்கில் இருந்து கீழே விழுந்த தற்போதே திருமணம் ஆனா பாங்களதேஷ் நபர் , இன்று செயல் இழந்து , சாப்பிட மனைவி ஊட்டும் நிலை, பேச முடியாத நிலை, சொல்வதை உணரமுடியாத நிலை.
           தயவு செய்து வண்டியில் செல்லும் போது கவனமாக செல்லவும் , தலை கவசம் அணிந்து செல்லவும் . வேகமாக செல்வதை விட விவேகமாக செல்லவும். எத்தருணத்திலும் தலை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளவும் . அப்படி அடிபட்டால் உடனே மருத்துவரை நாடவும் .
           வட நாட்டவர் குழந்தைகள் தனிமையில் படுக்கையில் விட்டு செல்லும் போது , நம்மவர் அவர்களை தம் உடன் பிறப்புக்கள் போல் பாவித்து அவர்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது , இன்னும் மனிதாபிமானம் செத்து விட வில்லை என்பதை காட்டுகிறது.
           கனத்த இதயத்துடன் திரும்பு கிறேன். இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்௯டாது . வாழம் வாழ்க்கை நம் கையில் , அதை கவனமுடன் வாழ கற்றுக்கொள்வோம்! உடம்பை வளர்த்து , உயிரை காக்க , விரைந்து செல்வதை தவிர்ப்போம், தலை கவசமுடனே வண்டில் செல்வோம்!      
                    

1 comment:

Unknown said...

இதனை படிக்கும் பொழுதே மனதும் வலிக்கிறது..
//வாழம் வாழ்க்கை நம் கையில் , அதை கவனமுடன் வாழ கற்றுக்கொள்வோம்! உடம்பை வளர்த்து , உயிரை காக்க , விரைந்து செல்வதை தவிர்ப்போம்// சரியாக சொன்னிங்க

Post a Comment