நாயை நன்றி உள்ள விலங்குன்னு ஏன் அழைக்கின்றோம் தெரியுமா?
*
*
Man Versus Nature என்ற முதல் பாடத்தினை வாசிக்க பயிற்சி அளித்து கொண்டிருந்தேன். bowed என்ற சொல்லை உச்சரிக்க தெரியாமல் முருகேஸ்வரி என்ற மாணவி திணறிக்கொண்டிருந்தாள். bow ,பொவ் என கூற சொன்னேன். அருகில் இருந்த ராகவன், “ யே முருகேஸ்வரி , நாய் மாதிரி குரைக்க தெரியாதா.. இந்த இப்படி தான் என பொவ் பொவ் “ என செய்து காட்ட அனைவரும் சிரித்தனர். அருகில் இருந்த தனசீலன் bow என்றால் வணங்குதல் தானே என்றான். ஆமாம்டா என்றான் அருகில் இருந்த பா. மணிகண்டன். “ bow.. bow.. பொவ், பொவ் என குரைப்பதால், ஓனரை பார்த்து வணங்குறேன்னு வணங்குறேன்னு தானே நாய் சொல்லுது ..அதனால தான் நாம் .. நாய்யை நன்றி உள்ள விலங்குன்னு சொல்றோம்.. சரிதானே சார்” என்றான் தனசீலன்.
2 comments:
அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...
"குழந்தைகளைப் பேச அனுமதித்தால் போதும் அவர்கள் சிந்தனைகளைச் சிறகடித்துப் பறக்கச் செய்து நம்மை வியக்கச் செய்துவிடுகிறார்கள்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.
Post a Comment