Thursday, June 18, 2015

கவிதை கூறும் புகைப்படம்

மீட்டு எடுத்த பால்யம்
*
தெருவில் சிறுவர்கள் விளையாடும்
கிரிக்கெட்டை வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தேன்
ஓங்கி அடித்த பந்து உருண்டு
என்னருகில் வந்தது
எடுத்து கொடுத்த பந்துடன் நானும்
விளையாட்டில் இணைந்து கொண்டேன்
வேகமாக ஓடிச்சென்று வீசியப் பந்தை
மட்டைப்பிடிப்பவன் மட்டையை சுழற்றி அடிக்க
என்னை நோக்கி திரும்பிய பந்து
பால்யத்தையும் திருப்பி கொண்டு வந்திருந்தது!

மதுரை சரவணன்.


3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமை... எப்படியோ பந்து மூலமா பால்யத்துக்கு போயிட்டு வந்துட்டிங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சூப்பருங்கோ...!

”தளிர் சுரேஷ்” said...

பால்யத்தையும் திருப்பிக்கொண்டுவந்தது! அது! அதற்குத்தானே கிரிக்கெட் ஆடுகின்றோம்!

Post a Comment