Wednesday, October 9, 2013

அப்பா


நான் படித்த முதல் புத்தகம்
நான் விரும்பிய முதல் புத்தகம்
நான் முத்தமிட்ட முதல் புத்தகம்
நான் கட்டித்தழுவிய முதல் புத்தகம்
நான் அனுபவித்து படித்த முதல் புத்தகம்
நான் ரசித்துப்படித்த முதல் புத்தகம்
நான் நானாக உதவிய முதல் புத்தகம்
நான் கற்றுக் கொண்டவை அதிகமாக இருக்கும் முதல் புத்தகம்
நான் வாழ்வை தேடிய போது உதவிய புத்தகம்
நான் புரட்டிய போதெல்லாம் புதுப்புது செய்திகளை கொடுத்த முதல் புத்தகம்
நான் என்னோடு வைத்திருக்க விரும்பிய முதல் புத்தகம்
நான் உணர முடியாத முதல் புத்தகம்
நான் படித்து முடித்திராத முதல் புத்தகம்
நான் எப்போதும் விரும்பும் இப்புத்தகம்
இப்போது இல்லை
எந்த நூலகத்தில் தேடுவேன்...!

5 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்பா....
அழகான கவிதை...
இப்போது இல்லை என்றாலும்
உங்களுக்குள் இருப்பார்...

மகேந்திரன் said...

நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன்
அவனியாம் இந்நூலகத்தில் அந்த முதல் புத்தகத்தை...
அருமையான ஆக்கம் நண்பரே...

G.M Balasubramaniam said...

நேரில் இல்லாவிட்டாலும் நினைவில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்தானே அப்பா. ?அவர் உங்களிடம் விரும்பியதைச் செய்யுங்கள்.அதுவே அவருக்குச் செய்யும் அஞ்சலி.

அபயாஅருணா said...

மனதைத் தொட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் நினைவில் என்றும் வாழ்கிறார்...

Post a Comment