Sunday, July 31, 2011

கற்பனை திறன் வளர்ப்பது எப்படி?


      மாணவர்களின் கற்பனை குதிரையை தட்டி விட்டு , அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கவும் , அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் பங்கேற்கவும் செய்யவும் , எந்த வித கருவும் , தலைப்பும் தராமல் ,சுதந்திரமான போக்கில் வாக்கியங்களை அமைத்து கதை சொல்ல வைக்க வேண்டும் . ஆனால் அதற்கு ஆயுத்தப்படுத்துதலாக நாம்(ஆசிரியர்கள்)  சில கதைகளைக் கூற வேண்டும். அதன் பின்பு ,ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனையும்  பெயர் சொல்லி அழைத்து . ஒரு வாக்கியம் கூற செய்யவும். என் வகுப்பில் முதலாவதாக வந்த மாணவன் . "எனக்கு நாய் பிடிக்கும்" என்றான். அதற்கு அடுத்து ஒரு பெண்ணை அழைத்தேன். அவள் அதற்கு அடுத்த வரியாக ”குழந்தை அழுதது” என்றாள்.   நான் முதல் வரிக்கும் , இரண்டாவது வரிக்கும் தொடர்பு இல்லை. ஆகவே, கதை தொடர்ச்சி இல்லாமல் இருக்குமல்லவா என சொல்லி அடுத்த வரி தொடர்புடையதாக கூற தூண்டினேன். ஒரு மாணவன் எழுந்து ,” நாய் குரைக்கும் சத்தமும், குழந்தையின் தொடர் அழுகையையும் கேட்டு , சமையல் அறையில் இருந்து ஓடி வந்து நாயை உள் அறையில் கட்டிப் போட்டு, குழந்தையை சமாதானப் படுத்தினாள்” என்றான். அடுத்து ஒரு பெண்ணை அழைத்தேன். அவள் மீண்டும் ,”நான் அறையில் நாயுடன் விளையாடச் சென்றேன்” என்றாள். அடுத்த மாணவன், ”மழை திடீரென்று பெய்தது” என்றான். அதற்கு அடுத்து வந்த மாணவி,” நான் மழையில் விளையாடச் சென்றேன்”. அதற்கு அடுத்த வந்த மாணவன்,” என் எதிர்வீட்டு கோபி, பக்கத்து வீட்டு குப்பு, பின்புற வீட்டு ரவி என அனைவரும் மழையில் நனைந்து விளையாடினோம்” என்றான். அதற்கு அடுத்து வந்த மாணவி,” அனைவரும் கப்பல் செய்து விளையாடினோம்”என்றான். அடுத்து வந்து மாணவன்,” ரவியின் கப்பல் மழையில் நனைந்து தண்ணீரில் முழ்கியது” என்றான். அடுத்து வந்த மாணவி,”என் கப்பல் அனைவர் கப்பலை விட முழ்காமல் சென்றது” என்றாள். அடுத்து வந்த மாணவி,” ரவி குப்புவின் கப்பலை மிதிக்கவே , இருவரும் சட்டையை பிடித்து சண்டை போட்டனர்” என்றாள். அதற்கு அடுத்து வந்த மாணவன், ”குப்புவையும் ரவியையும் விலக்கி விட நான் முயன்ற போது குப்பு தடுமாறி விழுந்தான்” என்றான். அதற்கு அடுத்து வகுப்பு முழுவதும் கோரசாக, “ குப்புவின் மண்டை உடைந்தது” என்றனர். வியப்பாக இருந்தது. விதிப்படி ஒருவர் மட்டுமே கூற வேண்டும் என்று மீண்டும் நினைவு படுத்தி ஒரு மாணவனை அழைத்து அடுத்த வரியை சொல்ல தூண்டினேன். அதற்கு அவன்,” அனைவரும் அவரவர் வீட்டிற்கு ஓடினோம்” என்றான். அடுத்த பெண் , ”குப்புவின் அப்பா என் அம்மாவுடன் சண்டை போட்டு கொண்டிருந்தார்.” அதற்கு அடுத்த மாணவன். ” குப்புவும் , ரவியும், நானும் தெருவில் இருந்த மழை நீரில் விளையாடினோம்” என்றான். அடுத்த மாணவி , “இதை பார்த்த பெற்றோர்கள் சண்டை யை மறந்து , எங்களைப் பார்த்து சிரித்தனர்”. என கதையை முடித்தாள்.

நீங்களும் முயன்று பாருங்கள். நிச்சயம் அனைத்து மாணவர்களும் கற்பனை குதிரையை தட்டிவிட்டு , ஒரு அற்புதமான கதையை படைப்பார்கள் என்பது உண்மை. அதற்கு அடுத்து அவர்களின் விளையாட்டு முறையும்  அப்படியே மாறி விடும்.  வகுப்பறைகளில் ஆசிரியர்கள் இல்லையென்றால் , அமைதியாக நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு , கதை எழுத ஆரம்பித்து விடுவார்கள். இப்போது என் வகுப்பறையில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி தினமும் ஒரு கதை எழுத ஆரம்பித்துள்ளாள் என்றால் அது எனக்கு கிடைத்த வெற்றியாகும்.              

15 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் கற்பனை குதிரை ஓடியதே.....

கோகுல் said...

மாணவர்களின் கற்பனைக்குதிரையை ஓட வைக்கும் சரியான ஜாக்கி நீங்க தான்!

Unknown said...

நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் சரவணன்....!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Chitra said...

இப்போது என் வகுப்பறையில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி தினமும் ஒரு கதை எழுத ஆரம்பித்துள்ளாள் என்றால் அது எனக்கு கிடைத்த வெற்றியாகும்.

..... super! அருமையான செய்தி. வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

நல்லதொரு முயற்சி.

shanmugavel said...

நல்ல விஷயம்.வாழ்த்துக்கள்.நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருக்கும்.இப்போது இருக்கிறதா?

Dhiyana said...

// இப்போது என் வகுப்பறையில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி தினமும் ஒரு கதை எழுத ஆரம்பித்துள்ளாள் என்றால் அது எனக்கு கிடைத்த வெற்றியாகும்.//

வாழ்த்துக‌ள்!!

சாந்தி மாரியப்பன் said...

//மாணவர்களின் கற்பனை குதிரையை தட்டி விட்டு , அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கவும் , அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் பங்கேற்கவும் செய்யவும் , எந்த வித கருவும் , தலைப்பும் தராமல் ,சுதந்திரமான போக்கில் வாக்கியங்களை அமைத்து கதை சொல்ல வைக்க வேண்டும்//

மாணவர்களின் சுயசிந்தனையை வளர்க்கும் ரொம்ப நல்ல முயற்சி.. அருமை.

Anonymous said...

Dear Saravanan

This pedagogy வெளி நாட்டில் உண்டு in English teaching. கதை எழுதுவதைப்போல கவிதையெழுதவும் ஊக்குவிக்கிறார்கள். However, congrats to u for bringing it to Madurai schools. A few words from me may be in place here.

மாணவர்கள் திறன் எந்த முறையில் வளர்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். எழுதிய கதைகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்படவேண்டும். ஆனால் அவர்களுக்கு அவ்வாராய்ச்சியின் முடிவுகள் பக்குவமாக மறைவாகவும் சொல்லப்படவேண்டும் அவர்களுக்குப் புரிகின்றவகையில். After they submit their products, we shd examine them for quality control.

எ.கா.

உங்கள் முதற்பதிவில் உள்ள முயல் கதை. கொடுக்கப்பட்ட கருப்பொருட்கள் இருவகையாக எழுதப்பட்டன. திரிசா வீட்டில் மீன் தொட்டியிருந்தது என்ற கதையின் முடிவு இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:

"..அதை பார்த்த கிளி ஒரு யோசனை செய்தது. நேராக மீன் தொட்டியில் சென்று திரிஷாவை பார்த்து என் நண்பன் முயலை விடுதலை செய்ய வில்லை எனில் இந்த மீன்களை கொத்தி கொத்தி தின்று விடுவேன் என மிரட்டியது. விலையுயர்ந்த மீன்களுக்காக, முயலை விடுதலை செய்தாள். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் காட்டில் வசித்தனர்."

மிர‌ட்ட‌ல். வ‌ன்முறை ஒன்றே தீர்வு என‌ இங்கு முடிவு க‌ட்ட‌ப்பட்டு விட்ட‌ து. Violence. Threat. Ransom. If u dont release my friend, I will kill ur fishes. The method terrorists adopt to achieve their nefarious ends.

இஃது அதிர்ச்சியைத்தருகிறது. பெருமதிர்ச்சி ஏனென்றால் இதை எழுதியது ஒரு சிறு மாணவன். அப்பிஞ்சும‌ன‌ம் வன்முறையே வாழ்க்கை வசதிகளைப்பெறச் சரியான வழி எனக் க‌ணிக்க‌க்கார‌ண‌ம் என்ன‌ அது வாழும் ச‌மூக‌ச்சூழ‌லா ? இல்லை வேறேதுவமா ? என‌க்குத் தெரியாது.

ஆனால் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ விச‌ய‌ம். "வ‌ன்முறை தீர்வ‌ல்ல" என்ப‌தை ஆசிரிய‌ர் சொல்ல‌வேண்டும். அன்பே தீர்வு. இல்லாவிட்டால் சாத்வீகமுறைப்போராட்டமே.

'திரிசா ந‌ல்ல‌வ‌ர். மீன்க‌ளை க‌வ‌ன‌மாக‌ வ‌ள‌ர்த்து நாளும் அவைக‌ளுக்கு உண‌வ‌ளிக்கும் ந‌ல்லித‌ய‌ம் கொண்ட‌வ‌ர். "என் நண்ப‌ன் முய‌லை விட்டுவிடுங்க‌ள். நானும் அவ‌னும் ஒன்றாக‌ காட்டில் ம‌கிழுந்து வாழ்ந்தோம். இப்போது பிரிந்து வாழ்ந்து க‌வ‌லைகொள்கிறோம்." என‌றால் திரிசா க‌ண்டிப்பாக‌க் கேட்பார். என்று க‌தையின் முடிவை மாண‌வ‌ரிட‌ம் கேட்டு மாற்றிவிடும்போது, மாண‌வ‌ரின் க‌ற்ப‌னைவ‌ள‌ம் மெருகேறும். க‌விதையிலும் அவ்வாறே. Thus, the children’s thinking becomes positive. It will help them lifelong to look at life positively.

க‌ற்ப‌னைச் சிந்த‌னை வ‌ள‌ர்ப்ப‌து ச‌ரி. அதைச் ச‌ரியான‌ வ‌ழியில் கொண்டு போய் மெருகேற்றுவ‌தும் ஆசிரிய‌ர் ப‌ணியே. To encourage them to think on their own; at the same time, since they are immature, we need to guide their thinking positively.

Regards
Simmkkal

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

virutcham said...

நல்ல முயற்சி. அதே மாதிரி சிறுவர் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி, அதை வாசிக்கச் செய்யவும்.

Unknown said...

arumaiyaka irunthathu thangal karpanai kuthiraiyin oottam...

Anonymous said...

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்

Post a Comment