எந்த வொரு மாற்றமும் இல்லை
தெருக்கள் எப்போதும் போலிருந்தது
தெருமுனையின் டீக்கடையில்
கூட்டம் குறைந்த பாடில்லை
பூக்கடைக்காரன்
பேரம் பேசி விற்றுக் கொண்டிருந்தான்
ஆட்டோக்காரன் சவாரி
படியாமல் முனங்கி கொண்டிருந்தான்
புதிதாய் முளைத்த கொட்டுச் சத்தமும்
சங்கு சத்தமும்
எந்த சலனத்தையும்
ஏற்படுத்தவில்லை
கால் நீட்டி படுக்க வைக்கப்பட்ட
பிணம்
நனைகிறது ...
சுற்றி இருப்பவரின்
உப்பு நீரில்...
அவர் அலைந்து திரிந்த தெருக்களில்
அடையாளமாய்
மயானம் வரை
உதிர்ந்த
ரோசா மலர்கள்
இயந்திரத் தனமான மனிதர்களின்
நடமாட்டங்களுக்கு மத்தியில்
15 comments:
மரணம் "மலிந்துவிட்டதா "
இருக்கும்போதே மதிக்க ஆளில்லை.இறந்த பிறகு என்ன கிடக்கிறது? யதார்த்தமான கவிதை.
மனசு கனக்கத்தான் செய்யுது....
இயல்பாகவே இருக்கிறது..
இது தான் நிஜம்.
’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்ற பாடல் போல மிகவும் இயல்பாகவே எழுதியுள்ளீர்கள். நிஜம் தான்.
//கால் நீட்டி படுக்க வைக்கப்பட்ட பிணம்
நனைகிறது ... சுற்றி இருப்பவரின் உப்பு நீரில்...//
அனைவரும் குளிக்க நீர் வேண்டுமே !, குளித்ததும் புசிக்க உணவு வேண்டுமே ! என்ற கவலையால் இருக்குமோ?
நல்லதோர் கவிதை நண்பரே!
இவ்வளவும்தான் வாழ்க்கை !
நல்ல பகிர்வு தலைவரே....
அழகாய் சொல்லியிருக்கிறீங்க மரனத்தின் பயணத்தை!
அவர் அலைந்து திரிந்த தெருக்களில்
அடையாளமாய்
மயானம் வரை
உதிர்ந்த
ரோசா மலர்கள்
இயந்திரத் தனமான மனிதர்களின்
நடமாட்டங்களுக்கு மத்தியில்
.... சிந்திக்க வைக்கும் வரிகள். "இன்று நீ....நாளை நான்...." என்று உணராமல், இயந்தரத்தனமாக நடமாடும் மனிதர்கள்.....
இயந்திரத்தனமான மனிதர்கள் மத்தியில்...
இறந்து கொண்டிருக்கிற மனிதனையே
கவனிக்க நேரம் அற்ற மனைதர்கள் மத்தியில்
இறந்தவனையா கவனிக்க முடியும்
மனிதர்களின் இயல்பை
இயல்பாகச் சொல்லிப்போகும் உங்கள் படைப்பு
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
இறந்தவன் இது பற்றி என்ன நினைக்க முடியும். ?!
இயல்பு என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்.
என் மனம் கவர்ந்த பதிவு
அழகாய் சொல்லியிருக்கிறீங்க
இயல்பு...
இதயம் கணக்கிறது...
தங்கள் பதிவு மனதில் எதையோ பதிவு செய்கிறது.
Post a Comment