Sunday, May 22, 2011

மனிதாபிமானம்


தெருவில் கிரிக்கெட்
சரியாக பதினொரு நபர்கள்
காய்கறி விற்பவள்
சலவை துணி அயன் செய்பவன்
சைக்கிள் காரன்
ரிக்ஷாகாரன்
இவர்களுடன்
ஆட்டத்தின் நடுவே
ஆட்டோ, கார் , லாரி
என கடந்து செல்ல ...
அளவாக வீசப்பட்ட பந்து
சரியாக அடிக்க
சற்றே பயந்து நடுங்கி வந்த
கிழவியின் மண்டையை
பதம் பார்க்க ...
சிதறியது இரத்தம் மட்டுமல்ல
அனைவரும் தான்... 

13 comments:

தினேஷ்குமார் said...

நிறைய இடத்துல இந்த மாதிரி நடக்கு யாரை நாம குற்றம் சொல்ல முடியும் ....

வரிகள் நல்லாருக்கு ...

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா இடமும் இந்த அநியாயம் நடக்குதுய்யா...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நறுக் பதிவு

Anonymous said...

சண்டயண்டால் சட்ட கிழியத்தான் செய்யும் என்பார்களே. தெருவில் விளையாடும் பொது இப்படி பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துவிடும்

///கிழவியின் மண்டையை
பதம் பார்க்க ...
சிதறியது இரத்தம் மட்டுமல்ல
அனைவரும் தான்... //// யதார்த்தம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிதறியது இரத்தம் மட்டுமல்ல
அனைவரும் தான்..//

நச்சென்று முடித்துள்ள வரிகள். பாராட்டுக்கள்.

யாரோ சிலர் இப்படி விளையாடப்போய் அப்பாவி ஒருவர் மண்டை உடைகிறது. தெருவில் விளையாடுவது தடுக்கப்படத்தான் வேண்டும்.

ஹேமா said...

ஊர்ப்பக்கங்களில் சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் மனதில் வந்து போனது.சிரிப்ப்பும் வந்தது இரத்தம் வந்த நேர நிகழ்வை நினைக்க !

அமைதி அப்பா said...

தெருவில் செல்கையில்
இந்த மாதிரி
நடந்துவிடக் கூடாதென்று
நடந்து செல்வேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... கவிதையில சமூக சிந்தனை. அருமை.


எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

கே. பி. ஜனா... said...

கருத்துடன் ஒரு நல்ல கவிதை ...

மாதேவி said...

"சிதறியது அனைவரும்தான்"...நன்றாகச் சொன்னீர்கள். இப்பொழுது இப்படித்தான் ஆகிவிட்டது.

Anonymous said...

உங்க கவிதை சிதறி கிடக்கும் மனிதாபிமானத்தை ஒருங்கினைக்கடும் .அதிக காலத்தின் பின் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன் ...முன்பை விட இப்போது இன்னும் சுருதி கூடி இருக்கிறது உங்கள் சுக பார்வையிலும் சரி கவி வரியிலும் சரி ..உங்கள் வருகையையும் ஆவலுடன் எதி பார்கிறேன்

மாலதி said...

ஊர்ப்பக்கங்களில் சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் மனதில் வந்து போனது.சிரிப்ப்பும் வந்தது...

angel said...

சிதறியது இரத்தம் மட்டுமல்ல
அனைவரும் தான்...
:)
gud lines

Post a Comment