இரவின்
இரயில் சத்தங்கள்
நினைவூட்டுகின்றன
பெயர் தெரியாத அவளின்
முகத்தை ...
எதிர் எதிர் இருக்கையில்
தண்டவாளங்கள் போல்
நானும் அவளும்...
மேல் இருக்கையில்
படுக்கும் முன் ...
அவள் குடித்த நீரின்
ஒரு சொட்டு
என் மீது பட்டு
பருகத்தூண்டியது...
அவள் புரண்டு படுக்கும் போது
மேலிருந்து உதிர்ந்த பூ
என்னையும் புரட்டி எடுத்தது
நானும் இரயிலைப்போலக்
கூவிக் கொண்டு இருந்தேன்
இரவு முழுவதும்....
8 comments:
நிறுத்தம் வந்து
இறங்கிய பின்னும்
துரத்தும் அவள்
நினைவுகள்....
தலைவரே.... எப்படி இப்படியெல்லாம்? ரசனையான கவிதை.
மிகவும் அருமையான உணர்வு பூர்வமானக்கவிதை. நன்கு ரசித்துப்படித்தேன் மீண்டும் மீண்டும்.
திரு. கலாநேசன் அவர்களின் தொடர்ச்சியும் நல்லாவே அமைந்துள்ளது. இருவருக்குமே என் பாராட்டுக்கள்.
எனக்கும் இது போன்ற பல ரயில் பயண அனுபவங்கள் உண்டு என்றாலும் அவற்றை தங்களைப்போல அழகாகக்கவிதையாக்கத் தெரியவில்லையே, என்ன பிரயோசனம் என்று வெட்கப்பட்டேன்.
அன்புடன் vgk
கவிதைகளில் ஏனோ எப்போதுமே மனசு ஒட்டுவதில்லை சரவணன் திட்டாதீர்கள்.
nice!
:-)
நானும் அவளும் மேல் இருக்கையில் ப்டுக்கும் முன்
அவள் குடித்த நீரின் ஒரு சொட்டு என் மீது பட்டு
பருகத்தூண்டியது. --என்ன சொல்ல வருகிறீர்கள் சரவணன்.?நெருடலோ நெருடல்....
கற்பனை நன்றாக இருக்கிறது
Post a Comment