என் இருப்பிடத்திற்கான
பேருந்து இன்னும்
வரவில்லை...
எங்கிருந்தோ வந்தான்
சற்றும் யோசிக்கவில்லை
தாமதிக்கவில்லை
அதே தடம் தான்...
வந்த பேருந்தில் ஏறினான்
சென்று கொண்டே இருந்தான்
ஏறி இறங்கி
இறங்கி ஏறி
இருப்பிடத்தை அடையும் வரை...
தேங்கி நிற்பதை இருப்பதை விட
ஓடுவது தான் உத்தமம்
9 comments:
தேங்கி நிற்பதை விட ஓடுவது உத்தமம்தான்.நல்ல கவிதை சரவணன்.
நண்பர்க்கு வணக்கம் கவிதைக்கான விளக்கம் எனக்குப் புரியவில்லை . சற்று தெளிவுப் படுத்தவும்
எனக்கும் புரியவில்லை! சற்று விளக்கவும்!! தவறாக நினைக்க வேண்டாம்!!!
சண்முக வேலின் கருத்தை பார்க்கவும்...சங்கர், மற்றும் சிங்
விளக்கம் ;- இலக்கை அடைவதற்கான வழி கடினமாகும் போது தேங்கி நிற்ப்பதை விட கிடைக்கும் வழியை பின்பற்றி இலக்கை நோக்கி முன்னேறுவதே சிறந்தது ... சரி தானே பாஸ் ...
தேங்கி நிற்காமல் ஓடுவது முக்கியமானாலும் ஒரு குறிக்கோள் அல்லது நோக்கம் வேணும்தானே !
தேங்கி நிற்பதை இருப்பதை விட
ஓடுவது தான் உத்தமம்>>>>>
தலைவரே...உண்மையான வார்த்தைகள்
இருப்பிடத்தை அடையும் வரை...
தேங்கி நிற்பதை இருப்பதை விட
ஓடுவது தான் உத்தமம்
.... நல்ல மெசேஜ்!
கவிதை அருமை ....!
Post a Comment