தொலையாமல் தான் இருக்கிறாய்...
தொலைந்துப்போன பென்சில்
தொலைவில் உள்ள உன்னை
அதனுடனே மூலை முடுக்குகளிலெல்லாம்
தேட வைத்தது...
கிடைத்தது தேடும் போது ...
நீ கொடுத்த அத்தனையும்
ஆசையுடனே அள்ளிப்பார்த்தேன்
நேற்று வரை நீ எனக்கு கொடுத்த
செண்டு பாட்டில் வரை.....
ஸ்பிரே செய்தேன்
உன் வாசனை வந்தது...
தோழமை வீசியது ...
என்னைப்போல
நீயும் எதை தொலைத்து
என்னைத் தேடுகிறாயே....
நீயும் நானும் ஒண்றாய்
ஒரு தட்டில் உணவருந்தும்
புகைப்படம் ....
வேதம் ஓதும் உன் தந்தை
கருப்பு அணிந்து சொல்லுவாரே
கடவுள் மறுப்பு என் தந்தை
இருவரும் அருகில்
நம் நட்பில்.....
அன்பாய் ஒருங்கிணைந்து இருந்தனரே...
நட்புக் கொள்
வென்று சொல்
என்னைப்போல ....
13 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
/////உன் வாசனை வந்தது...தோழமை வீசியது ...
என்னைப்போல
நீயும் எதை தொலைத்து
என்னைத் தேடுகிறாயே....////
வரிகள் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
இன்ட்லியில் சப்மீட் பண்ணுங்க நாளைக்கு வாறன்...
உன் வாசனை வந்தது...
தோழமை வீசியது ...
.....நட்பின் சிறப்பு! அருமையான கவிதை!
நட்புக்கு நடுவில் எந்த பேதமும் இல்லைங்கிறத ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க! அருமை!!
அருமை சரவணன்!
"...தொலைந்துப்போன பென்சில்
தொலைவில் உள்ள உன்னை
அதனுடனே மூலை முடுக்குகளிலெல்லாம்
தேட வைத்தது..."
நட்பு எப்படியெல்லாம் மனிதர்களை ஏங்க வைக்கிறது. நல்ல கவிதை.
அருமை நண்பரே
ரசித்தேன்
>>>நீயும் எதை தொலைத்து
என்னைத் தேடுகிறாயே....
நல்லா இருக்கு சரவணன். ;-)
//நட்புக் கொள்
வென்று சொல்
என்னைப்போல ...//
நச் வரிகள்
///தொலைவில் இருந்தாலும்
தொலையாமல் தான் இருக்கிறாய்...///
முதல் வரியிலேயே அசத்திட்டீங்க.. :-))
நட்பின் வரிகள் நல்ல இருக்குங்க
//தொலைவில் இருந்தாலும்
தொலையாமல் தான் இருக்கிறாய்//
இன்று எனக்கேற்றவை
நன்றி
Post a Comment