இந்த பகுதியை காட்டி இது தான் சமணர்களை எரித்த இடம் என்கிறார்கள் .
திருஞான சம்பந்தர் கோவில் நாங்கள் சென்ற போது பூட்டி இருந்தது. கோவிலில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். நடக்க முடிய வில்லை. கோவில் பூசாரி வீடு அருகில் தான் என்று கூறி யாரையோ அழைக்க ,ஒருவர் ஓடி வந்து நீங்கள் யார் எந்த பத்திரிகை என விசாரிக்க ,இல்லை நான் பொழுது போகாமல் மதுரையின் வரலாற்றி தோண்டுகின்றேன் என மனசு வந்தாலும் , சாமநத்தம் கிராமம் பற்றி அறிந்து செல்ல வந்திருக்கும் ஒரு பள்ளியின் ஆசிரியர் என்றே சொல்ல ...காரை திருப்புங்க என அழைத்துச் சென்றார்.
எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது. மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம் என வரலாற்றை தமக்கு தெரிந்த மாட்டில் சொன்னார்.
காமராஜர் திறந்து வைத்ததாகச் சொல்லப்படும் குடியிருப்பு பகுதி
கூன் பாண்டியன் சமண மதத்தையும் , ராணி மங்கையர்கரசி சைவ சமயத்தையும் தழுவிய போது , மன்னனின் வெப்பு நோயை திருஞான சம்பந்தர் போக்கினார் என்றும் , அவர்களுக்குள் விவாதம் நடந்தது அப்படி நடக்கும் போது ,ஏடு வைகை ஆற்றில் விடும் போது சைவர்கள் விட்ட ஏடு மேற்கு நோக்கி சென்று அடைந்த இடம் திருவேடகம் எனவும் , அதுபோல சமணர்கள் விட்ட ஏடு கிழக்கு நோக்கி சென்ற இடம் திருப்பவனம் என்றும் கூறுகிறார். இன்றும் திருப்பவனத்தில் சிவன் கோவில் நாயக்கர் காலத்தை சார்ந்தது வரலாற்று சான்றாக உள்ளது என கதை சொல்ல ஆரம்பித்தார்.
திருஞான சம்பந்தர் கோவில் கோபுரம்
மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் சாம்பல் நத்தம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.
சித்திரை திருவிழா பற்றி கேட்கும் போது ... ஆறாம் நாள் கழுவேற்றம் இப்போது இல்லை. அது கோவிலிலேயே நடக்கிறது என்கிறார். இக்கிராமம் செங்குந்த முதலியாருக்கு பாத்தியப்பட்டது என்றும் கதை கூறுகிறார்.
இந்த கிராமம் மீனாட்சி கிராமம் என்றும் அழைக்கப்பட்டது . இது சீர் வாதக் கட்டளையை சார்ந்தது. அறுபத்தி நான்கு பேர் மீனாச்சி கல்யாணத்தின் போது சுவாமி சிலையை சுமப்போம் . முன்னர் சுவாமி சிலையை சுமப்பவர்கள் எழுகடல் தெருவில் தான் இருந்தோம் , பின்பு ராணியால் எங்களுக்கு இந்த கிராமம் வழங்கப்பட்டது என்கிறார்
மீனாட்சிக்கு பங்குனி சீர் மீனாட்சி திருக்கோவிலில் இருந்து திருப்புவனம் கொண்டு செல்லப்படும் மீண்டும் அங்கிருத்து கோவிலுக்கு ஒரே நாளில் கொண்டு சேர்க்கப்படும் . அதன் பாதை சாமநத்தம் , பனையூர், கீலடி , சிலைமான், மணலூர், திருப்புவனம் ஆகும். இப்படி ஒருநாள் சீர் எடுத்து செல்லும் போது திருப்புவனம் அருகில் ஆற்றில் வெள்ளம் வந்தது , அப்போது கழுத்தளவு வெள்ளத்தில் நீந்தி சீர் தூக்கி வந்ததால் அவர்களுக்கு வீர செங்குந்த முதலியார் என பெயர் வந்தது என்கிறார்.
பங்குனி மாதம் பொன்னடியார் நாடகம் நடத்த கோவிலில் இருந்து சீர் சுமப்பது எங்கள் வழக்கம் . சொக்கரை சுமக்க இருபத்தி நான்கு நபர்கள். அதாவது நான்கு புறமும் ஆறு நபர் என்று இருப்பத்தி நான்கு நபர்கள். அது போல மீனாட்சி அம்மனை சுமக்க இருபது நபர் . நான்கு காலுக்கு ஐந்து நபர்கள் வீதம் இருபது ஆட்கள். பிள்ளையாருக்கு எட்டுபேர். தண்டீஸ்வரருக்கு நன்கு பேர் . முருகனுக்கு நான்கு பேர். அகுதாங்கு அதாவது சப்ஸ்டிடுட் நான்கு பேர். மொத்தம் அறுபத்தி நான்கு நபர்கள். என கணக்கு கூறினார். எட்டு எட்டு விதமாக அறுபத்தி நான்கு பங்காளிகள்.
கற்பூர சொக்கு , ரவி சந்திரன் மற்றும் madurai saravanan
பேசிக் கொண்டிருந்த எங்கள் மீது சம்பல் புழுதி வீசி பெரியார் பேருந்து நிலையம் போர்டு மாட்டிய பேருந்து பறந்து சென்றது. வாங்க அந்த மேட்டுப் பகுதியை காட்டுகிறேன் என முற்காடுகள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றார்.
சாமபல் பறக்கும்.....
16 comments:
worth the sweat, Sara! Keep up the good spirit :) - thanks for sharing.
pudhiya thagavalgal.. nandri
இந்த பதிவுகளுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கும் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
இதுவரை படிக்காததற்கு வருந்துகிறேன். பகிர்தலுக்கு நன்றி.
சிரத்தை எடுத்து எழுதியதற்கு நன்றி..
அன்பின் சரவணன்
அருமை அருமை - மதுரை வரலாற்றினைத் தொகுக்கும் முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள். கடுமையான உழைப்பு தெரிகிறது. விடாமுயற்சி வாழ்க. நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா
சரவணன் நல்ல பதிவு. வாழ்த்துகள். மேலும் இதுபோன்ற வரலாற்று கிராமங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள். இந்தப் பதிவு ஒரு பொக்கிஷம்
//சிவா said...
இந்த பதிவுகளுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கும் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ரிப்பீட்டே .......!
மிக்க நன்றி! மிகுந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!
மிக நல்ல முயற்சி. தொடருங்கள். வாழ்த்துக்கள் சரவணன்!
சரவணன் ! தொடர்க!
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
தொடருங்கள். வாழ்த்துக்கள் சரவணன்
பகிர்தலுக்கு நன்றி.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA coaching
ACCA Exam Coaching Classes
ACCA Training in Chennai
ACCA Training institutes Chennai
ACCA courses Chennai
ACCA Training institutes Chennai
ACCA Qualifications and Courses
Diploma in International Financial Reporting
Best ACCA training institutes
CBE Centres in Chennai
DIPIFR exam coaching center
ACCA Approved Learning Partners
Diploma in IFRS Chennai
ACCA Diploma in IFRS
ACCA Approved Learning Providers
ACCA Approved Learning Partner Programme
ACCA Coaching India
Post a Comment