Sunday, October 17, 2010

உங்கள் குழந்தைகள் டி.வி பார்க்கிறதா ..?

தொடர்ந்து இரண்டு மணி நேரம் உங்கள் குழந்தைகள் டி.வி  பார்க்கிறதா ? உடனே நிறுத்துங்கள். இல்லையென்றால் அது உங்கள் குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம்.  

  ஹிந்துவில் அக்டோபர் பதிமூன்றில் ஒன்பதாம் பக்கம் டி.வி பார்க்கும் நேரம் மனநலம் சார்ந்த பிரச்னையுடன் தொடர்புடையது என்ற தலைப்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 

தொடர்ந்து இரண்டுமணி நேரம் டி. வி. அல்லது கணினி பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் மனநலம் தொடர்பான பிரச்சனைக்கு ஆளாகி இருக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். 
   
     தொடர்ந்து டி.வி பார்க்கும் பதினோரு வயது குழந்தைக்கு மனநலம் சார்ந்த கேள்வி கொடுக்கப்பட்டு , சரி பர்ர்க்கபட்ட போது , மனநலம் பின் தங்கி இருந்தது அதாவது பாதிக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

  
   ஆயிரத்து பதிமூன்று குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு , தொடர்ந்து டி.வி.மற்றும் கணினி  திரை முன்னால் இருக்கும் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது .நல்ல ஆரோக்கியமான உடல் நலம் உள்ள குழந்தைகள் தொடர்ந்து டி.வி பார்க்கும் நேரத்தை அதிகரிக்கும் என்றாள் அவர்களின் மன நலமும் பதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

     இரண்டு மணி நேரங்களுக்கு  தொடர்ந்து டி.வி பார்க்கும் குழந்தகைள் அறுபது சதவீதம் மன நோயிக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 


ஆகவே குழந்தைகளுக்கு டி.வி முன்னால் இருப்பதை விட நல்ல உடல் பயிற்சி வளர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் நல்லது என்றும் ஆய்வு கருத்து தெரிவிக்கிறது. 


        இந்த ஆய்வி ஒரு எச்சரிக்கையே தமிழகப் பெற்றோர்களே எனக்கு தெரிந்து மாலை நாடகம் பார்க்க தொடங்கும் நீங்கள் பத்து மனைக்கு தான் டி.வியை அணைப்பதாக தெரிகிறது. டெலிவிஷன் தொடர்களின் ரேட்டிங் அதையே வலியுறுத்துகிறது.  தாங்க்கள் டி.வி பார்த்தால் நிச்சயம் தங்கள் குழந்தைகளும் பார்க்கும் மாலை ஐந்து மணி , இரவு பத்து மணி ....இதன் நேரம் ஐந்து மணி நேரம் .நிச்சயம் குழந்தைகள் மன நோயிக்கு ஆளாக நேரிடும். 

       சமீபத்தில் பள்ளி மாணவன் சக மாணவனை நகைக்காக கொலை செய்துள்ளான் என்ற செய்திகள் இதன் விளைவாக இருக்குமோ என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது . பள்ளிகளில் பல மாணவாகள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் தனித்து இருக்கவே விரும்புகின்றனர். இது அந்த ஆய்வல் உறுதி படுத்தப் பட்டுள்ளது. 


    பள்ளிகளில் ஆசிரியர் ஏதாவது சொன்னால் , மிகவும் தேம்பி அழுகின்றனர். சக மாணவன் ஏதாவது அவர்களின் புத்தகத்தை எடுத்து விட்டால் , உடனே வன்முறையில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அழைத்து பேசினால் அதிகம் டி.வி பார்பதாகவே சொல்லுகின்றனர்.  இந்த என் அனுபவம் அந்த ஆய்வுடன் பொருந்துவதாகவே உள்ளது. 


      தயவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை வேலையில் கோவில் அல்லது பார்க் அழைத்து செல்லுங்கள். மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்.பாரதி சொன்னபடி மாலை முழுவது விளையாட்டாக இருக்கட்டும். நீங்களே அவர்களுக்கு பாட புத்தகத்தை வைத்து சொல்லி கொடுங்கள். முடிந்த மட்டும் தனி படிப்பு (டியுசன் ) வைப்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் தங்கள் கவனிப்பிலே வளர்வது நல்லது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் டி.வி. பார்க்க அனுமதியுங்கள். 
   
  

8 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

தொலைக்காட்சியை சற்று நேரம் தொடர்ந்து பார்த்தாலே சோர்வு மேலிடும் என்று எங்கோ படித்திருக்கிறேன். அதை நாமெ சமயங்கலில் உணர முடியும். நமக்கே அப்படி இருக்க, குழந்தைகள் பார்ப்பது ? யோசிக்க வேண்டிய விஷயம் தான்!

நல்ல பகிர்வு சரவணன்..

சிவராம்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு சரவணன்... நன்றி!

மோகன்ஜி said...

உபயோகமான கட்டுரை நண்பரே!

erodethangadurai said...

அருமையான பதிவு.. எல்லோருக்கும் அவசியமான பதிவும் கூட.. !

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

Muruganandan M.K. said...

சிறப்பான பதிவு. மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விடயம்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு, தொலைக்காட்சி பார்ப்பதை குறைச்சுக்கோங்கன்னு சொல்றதை மொதல்ல பெற்றோர்கள் கேட்கணுமே.. அவங்க பார்க்கிறதாலதான், வேறவழி இல்லாம குழந்தைகளும் வயசுக்கு மீறின சீரியல்களை பார்க்கிறாங்க.

எஸ்.கே said...

சிறப்பான பதிவு!

geethappriyan said...

நல்ல அவசியமான பதிவு நண்பரே
இன்றைய குடும்ப உறுப்பினர்களை டிவி தான் பிரித்துவிடுகிறது,

Post a Comment