Saturday, October 16, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -5

                படிகளில்  இறங்கும்  போது காற்று நம்மை கீழ் நோக்கி தள்ளி , குளத்தில் வீழ்த்திவிடுவது போல் இருந்தது. உடலை இறுக்கி கொண்டு , உயிரை கெட்டியாக பிடித்துக் கொண்டு கீழே இறங்கினோம். ஆம்., மலை மீது இருக்கும் போது உயிர் எங்களிடம்  இல்லை. அது சுதந்திரமாக மலை மீது அலைந்து திரிந்தது. எதவித பற்றுதலும் இல்லை. ஆனால் அங்கு இருந்து கீழே இறங்க இறங்க, எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றுதல் மீண்டும் தொற்றிக் கொண்டது.  மலை மீது இருந்து அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் பார்க்க அழகாக தெரிந்தது
    


   கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டதற்கு அதிகமான சான்றுகள் வைக்கப்படுகின்றன. இருப்பினும் அங்குள்ள மீன் சின்னம் அதை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. கோவிலை அழுகுற பெயிண்டிங் செய்துள்ளனர்.இது கல்லில் செதுக்கப்படுள்ளதா அல்லது வரையப்பட்டுள்ளதா  என்ற ஐயப்பாட்டை தோற்றுவிக்கிறது.




கோவிலுக்கு நுழைவதற்கு முன்னாள் ஒரு சின்ன கோவில் உள்ளது . அதன் சுற்று சுவரில் ஒரு கல் பதிக்கப் பட்டுள்ளது . அதில் , முசுறுப்படைகளை விரட்டிய வீரத்தேவன் குறித்த செய்தி நம்மை இந்த மண்ணின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தி இதன் வரலாற்றை  ஆவலுடன் அறிய உதவுகிறது.




மலை மீது இருந்த பேச்சியம்மன் கோவில் கீழே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. குதிரைகள் நம்மை குலை நடுங்கச் செய்கின்றன.காவல் தெய்வங்கள் பலம் பொருந்தி , நம்மை கை எடுத்துக் கும்பிடச் செய்கின்றன. 'காவல் கோட்டம்' படித்தவர்களுக்கு இந்த காவல் வீரரின் கடமைகள் அதன் இரண்டு பக்கங்களிலே அருமையாக விளக்கப்பட்டுள்ளது. அந்த நாவலில் உள்ள சடச்சி இந்த மலையில் தான் தங்கிய உணர்வு  படிக்கும் போது ஏற்படுத்துகிறது. படித்து சொல்லுங்களேன். 



அய்யனார் கோவிலின் புதுமைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. கூன் பாண்டியனின் உடல் இரண்டாக பிரிக்கப்பட்டது போன்று இந்த கோவிலும் இரண்டாக பிரிக்கப்பட்டு , ஒருபுறம் சைவ சாமிகளும், மறுபுறம் அசைவ சாமிகளும் உள்ளன. ஒருபுறம் மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட உக்கிரமா பாண்டியன் , பாண்டிய ராஜன், சொக்கேஷ்வரர், பைரவர் என்று உள்ளன. மறுபுறம் வீர பத்திரர்,முனியாண்டி, சோனை சாமி, முத்துக் கருப்பான சாமி ,இருளாயியம்மன் என்ற எல்லா காவல் அசைவ தெய்வங்களும் வைக்கப்பட்டு வணக்கப்படுகின்றன.  
  இந்த கிராம  மக்களின் வாழ்வில் சமணர்கள் தங்கள் கருத்துக்களை பரப்பியுள்ளனர் என்பது இவர்களின் வழிப்பாட்டு முறைகளில் வெளிபடுகிறது. கிராம மக்கள் சமணர்களுக்கு மரியாதை கொடுத்தனர் என்பதும் நம்மை அதிசியக்கச்  செய்கின்றன. காவல் தெய்வங்களுக்கு பலிக் கொடுக்கும் போது , சுவாமி சன்னதிக்கு திரையிடப்படுகிறது. இது உயிர்களை கொல்லாதே என்று சொல்லும் சமணர்களுக்கு மரியாதை என்கின்றனர். 

   கோவில் ஆகம விதிக்களின் படி கட்டப்பட்டுள்ளது , கோவில் இராவதம் என்ற பெண்யானையை உதன்மையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ரேகை மண்டபம், பாவாடை மண்டவம், பூஜை   மண்டபம் ,அதற்கடுத்து சுவாமி சன்னதி என வடிவமைக்கப்பட்டுள்ளது. 
   
   இது பாண்டியர் காலத்தை சார்ந்தது என்பதற்கு சான்றுகள்....

1. மீனாச்சியம்மன் கோவில் போல் மண்டபம் சிறியதாக உள்ளது. ஆம் மீன்ச்சி யம்மன் கோவில் பழைய  மண்டபம் மிகவும் சிறியதே.     

2. பாவாடை மண்டவத்தில் மீன் சின்னம் பொறிக்கப் பட்டுள்ளது.  நவ கிரகங்கள் உள்ளன. 

3. பாவாடை பூஜை மீனாச்சி அம்மன் கோவிலில் மட்டுமே பாண்டியனின் காலத்திலிருந்து அய்யானாருக்கு நடத்தப்படுகிறது. அதே போல இங்கும் , மார்கழி மாதத்தில் நடத்தப்படுகிறது. இது பிற எல்லை தெய்வங்களுக்கு நடத்தப்படாது என்பது குறிப்பிடத் தக்கது. 

4. மண்டப தூண்களில் சிவன் சிலை , மற்றும் அஷ்ட லச்சுமியின் சிலை இவை பாண்டிய காலத்து கோவில் வடிவமைப்பாகும் . 

5.இந்த கோவில் பாம்பாட்டி சித்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது . இவர் கார முனிவர்  என அழைக்கப்படுகிறார். மலை மேலேவுள்ள கார் சுனை இவர் பெயாரால் அழைக்கப்படுகிறது. இவர் பாண்டிய காலத்தவர் என்பதாலும் இக் கோவில் பாண்டியர் காலத்தது ஆகும் 

      நம் கண் முன் பல வரலாற்று காட்சிகளை கொண்டு வந்தாலும் சாதிய அமைப்புகளில் இன்னும் மாற்றம் இல்லை என்பதை அங்கே அருகில் உள்ள ஒரு கல் மண்டபம் சாட்சியாக உள்ளது.  
                                   சாதி அது ஒரு தீ ... பொறுக்கவும் . தீ எப்படி என்னை பற்றியது என்பதை அடுத்த முடிவு பகுதி சொல்லும் .  

10 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பகிர்வு.. நன்றி சரவணன்..

Balakumar Vijayaraman said...

நன்கு விவரித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

எஸ்.கே said...

நல்ல விவரங்கள்! நன்றியும் வாழ்த்துக்களும்!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் நல்லதொரு ஆராய்ச்சிக் கட்டுரை - நேரில் கண்டு களித்து - ஆய்ந்து எழுதப்பட்ட தொடர் இடுகை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் சரவணன் நட்புடன் சீனா

Jerry Eshananda said...

தொடர்கிறேன்....சரவ்...

மோகன்ஜி said...

ஸ்வாரச்யமாய்ப் போகிறது சரவணன் ஜி!

நேசமித்ரன் said...

ம்ம் முயற்சியின் திருவினை மிளிர்கிறது

மாதேவி said...

தொடர்கின்றோம்.

விரிவான சரித்திரங்கள்.காட்சிப்படுத்தல்கள்.

Unknown said...

அருமை நண்பரே

மதுரை சிவா.. said...

என் குல தெய்வம் புஷ்கலை பூரணகலை சமேத மலையடி அய்யனார் கருப்பணசாமி போற்றி...

Post a Comment