Saturday, October 9, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -4




           சமணர்கள் படுக்கை பற்றி கதைகள் என்னை மேலும் ஆச்சரியப் படுத்தின. அங்கு உள்ள தீர்தங்கர்கள் சிலை மற்றும் அதிலுள்ள பிராமி கல்வெட்டுகள் எனக்கு அதன்மீது தனிப்பட்ட காதலை உருவாக்கியது. மலையில் உருவங்கள் செதுக்கப்பட்டு இருந்தாலும் , அவை என் இதயத்தை செதுக்கி கொண்டிருந்தன.  ஒரு முதல் வகுப்பு மாணவனைப் போல் ஆர்வமுடன் அந்த எழுத்துக்களை கற்றுக் கொள்வதற்கு என்னை தாயார் படுத்திக் கொண்டேன். அதன் விளைவு எனக்குள் ஒரு தேடுதலை உண்டாக்கியது. மறுநாள் மதுரையின் தொல்லியல் துறை அலுவலகம் சென்று மதுரையின் தொன்மை சம்பந்தமாக  ஆராய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.  பிராமி எழுத்துக்கள் மட்டுமின்றி , நம் தமிழ் எழுத்து வடிவத்தின் பரிமாணத்தை பற்றி அறிந்து அது சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி வந்தேன். 

         மலையின் முகப்பிலிருந்து புகைப்படம் எடுக்க நினைத்து , காசியையும் அழைத்து மலையின் ஓரத்தில் நின்று போஸ் கொடுக்க முயலும் போது தெரியாமல் , பின்னே திரும்பி பார்த்தேன், தலை சுற்ற ஆரம்பித்தது. நாம் எவ்வளவு உச்சியில் இருக்கிறோம் , இப்படியே கிழே விழுந்தால் எலும்புக் கூட மிஞ்சாது என்ற கற்பனையே , என்னை பயமுறுத்தி , அங்கிருந்து நகரச் செய்தது. அதன் மீது நின்று பார்க்கும் போது வெள்ளைச் சாமி கல்லூரியின் கட்டிட அமைப்பு அழகாக இருந்தது. இம் மலை எட்டு மலைகளின் தலைமை இடமாக இருந்திருக்கலாம் என்பது உறுதியாகிறது. நான்கு பக்கமும் அந்த எட்டு மலைகளும் இங்கிருந்து அழகாகத் தெரிகிறது. 

இந்த மலையில் ஆறு சமணப் படுக்கைகள் உள்ளன. அவை பஞ்ச பாண்டவர் கதைகளை இங்கே தொடர்பு படுத்து கின்றன. பாண்டவர்கள் ஐவரும் இந்த மலையில் தங்கியதாகவும் , பாஞ்சாலிக்கு ஒரு படுக்கையும் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படும் கதைகள் இம் மலைமீது கொண்டுள்ள காதலை அதிகப்படுத்துவதாக உள்ளது.


                                                                                                                                            
கார் ஊற்றை நோக்கிய எங்கள் பயணம் மிகவும் கடினமானதாகவே இருந்தது. ரவி பறைகளில் தாவித் தாவி வந்தார். இருப்பினும் மலை ஏறும் போது  எளிதாக இருந்தது. கார் ஊற்றுக்கு  செல்லும் போது பாதை மீண்டும் சரிந்தது , அது மிகவும் கடினமானதாகவே இருந்தது . என்னுள் மலையின் மீது இறக்குவது என்பது அதிக பயத்தை உண்டாக்கியது. இம்  முனிவர்கள் எதற்கு பயந்து மலைகளை  தேர்ந்தெடுத்தார்கள் அல்லது யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காவா  ? என்பது மிகவும் யூகிக்க கடினமானதாகவே இருந்தது. அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் அவர்களின் மகிமையை உறுதி செய்தது.    பாறைகளில் தவழ்ந்து , ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கினோம். பயணம் ஆபத்தானதாக இருந்தாலும் , ஆனந்தமானதாகவே இருந்தது. இமய  மலை ஏறிய டென்சிங் பயணம் எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும் என்று என்னை தொடர்பு படுத்தி பார்க்கச் செய்தது. 

பாறைகளில் இறங்குவது மிகவும் கடினமான செயலாகவே பட்டது. ஏறும்போது எளிமையாகவே இருந்தது. ரவி என்னை அன்புடன் கனிவான சொற்களால் அழைத்து சென்றார். மலையில் காலடி எடுத்து வைத்தவுடன் தானாக மனம் அன்பு வயப்பட்டு , கனிவான சொற்களால் எங்களை வழிநடத்தியது. நான் பயந்த போதெல்லாம் காசியும் ரவியும் என்னை தேற்றினார்கள்.ஒரு வழியாக இறங்கி விட்டோம் என்று நினைத்தபோது , புல் புதர்கள் சில இடங்களில் மண்டிக் கிடந்தன. சாம்பு ராணி அதிகமாக திரிந்தது  . எனக்கு பாம்பு இருக்குமோ என்று பயம் . "காசி இங்கு பாம்பு எதுவும் இருக்குமா...?"என்றேன். இருக்கலாம். பாறை இடுக்குகளில் தேள்  இருக்க வாய்ப்பு உண்டு என்று என்னை பயமுறுத்தினான். 

      சமணர்கள் மூலிகை வைத்தியம் நன்கு அறிந்தவர்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு மூலிகைகள் பற்றி நன்கு பரிச்சயம் உண்டு என்றான். மேலும் பாம்பு வராமலிருக்க பொங்கலுக்கு நம் வீடுகளில் வைக்கப்படும் கூரைப்பூவையும் , துளசியும் சேர்த்து வைத்தால் , நம்மை பாம்பு அண்டாது என்றான். பாம்பு பிடிப்பவர்கள் இதை இரண்டையும் வைத்திருப்பார்கள் என்றான். 
   
    மலையில் உள்ள செடிகளில் நறுமணம் எங்களை உற்ச்சாகத்துடன் வைத்து இருந்தது. காற்று எங்களுக்கு உறக்கத்தை அளிப்பதை விட்டு , ஒரு வித சந்தோசத்தையும் , அதன் மீது ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தியது. ஒருவழியாக கார் சுனையை அடைந்தோம். அதில் உள்ள தண்ணீர் மிகவும் தூய்மையானதாக இருந்தது . குடித்தோம். தாகம் தணிந்தது. பயத்தால் உறைந்திருந்த நாக்கு தற்போது உற்சாகம் எடுத்து பேசத்தொடங்கியது. கார் ஊத்திற்க்கு அருகில் சிறிய பாறை ஒரு ஆள் படுத்து உறங்குவதற்கு ஏற்றாற்போல் இருந்தது. அதன் அருகில் நம்மவர்கள் பாறைகளை வைத்து தீ மூட்டி கோழி வாட்டி இருந்ததற்கான தடங்கள் இருந்தன. அருகில் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்தன. சைவம் போதித்த சமண மலையில் அசைவம் குடிகொண்டு விட்டது. 

        மலையை ரசித்தவாறு , மீண்டும் ஏறத் தொடங்கினோம். இப்போது வானம் இருட்டியது. திருப்பரம் குன்றம் மலை அருகில் மழை பெய்திருக்கும் என் நினைக்கிறேன். வானவில் தெரிந்தது.     ரவி மலையில் மழை நேரத்தில் இருப்பது ஆபத்து. மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே நாம் விரைவில் கிழே இறங்குவோம் என்று எச்சரித்தார்.காசி  அங்கிருந்த விநாயகர் மூஞ்சி போல உள்ள மலையை காட்டினான். புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனியாக ஒற்றை பாறை மட்டும் நிற்பது போல் உள்ள பாறை எங்கு உள்ளது என்று கேட்டேன். அது மேலக் குயில் குடி பகுதியில் இருக்கும் என்றான் .

      மலையின் மீது உள்ள பேச்சியம்மன் கோவில் கீழே குடிப்  பெயர்ந்ததற்கான காரணம் ஆச்சரியப் படுத்துகிறது . இந்த கோவில் சொல்லும் கதை என்னை வியக்க வைக்கிறது. இங்குள்ள பேட்சியம்மன் மதுரை மீனச்சியம்மன் கோவில் வரை ஆட்சி நடத்தியதாகவும், தவறு செய்தவர்களை கட்டுப்படுத்தியதாகவும் சொல்லுகின்றனர். அதனால் இக்கோவில் அங்கிருந்து கீழே இறக்கப்பட்டதாக ஒரு வரலாற்றை சிறுவர்களும், விவரமறிந்த பலர் இது பாண்டியன் காலத்தில் சைவ சமய பிரச்சனையில்   அழிக்கப்பட்டது, அதில் இருந்த சிலைகள் இன்றுவரை கீழே காக்கப்படுகின்றன என்று சொல்கின்றனர். . மேலும் உக்கிரமப் பாண்டியனால் இக்கோவில் எழுப்பப்பட்டு தற்போது  கீழே உள்ளது என்கிறார். இது பாண்டிய மன்னனால் தான் உருவாக்கப்பட்டது என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்.        

                                                                                 மலை  பேசுவது தொடரும். 

7 comments:

சிவமணியன்/Sivamaniyan said...

இந்த மலைக்கு நேரெதிரே, தேனி மெயின் சாலையில் உள்ள ஜெயராஜ் நாடார் பள்ளியிலே படித்த மாணவன் நான். எங்கள் பள்ளிக்கு பின்னால் நாகமலையும் முன்னால் சமண மலையும் இருக்கும். பள்ளியில் படிக்கும் போது ஒரே ஒரு முறை இந்த மலைக்கு சென்றுள்ளேன். ஆனால் அந்த சிற்பங்களின் அழகை ரசிக்கும் பொறுமை அப்போது இருந்ததில்லை. தங்கள் பதிவுக்கு நன்றி.

நேசமித்ரன் said...

தொடரட்டும் பயணம் .நிறைய நல்ல மாற்றங்கள் மொழியில்.. நடையில்.

தட்டச்சுப் பிழைகள் சரி பாருங்க:)

Anonymous said...

படிக்கும் போதே வந்து பாக்கனும்கிற ஆசை வந்துடுச்சி நண்பரே..அருமை..நல்ல பயணம்..நானும் வருகிறேன்..எமக்கும் சுற்றிக் காட்டுங்கள்...

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

நல்லதொரு இடுகை - கண்னில் கண்ட காட்சிகள் அனைத்தும் அருமையாக விளக்கப் பட்டிருக்கின்றன. நேசமித்ரன் சொன்னதையும் கவனிக்கவும்.

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Jeyamaran said...

My college also nears this place..........

தருமி said...

தொல்பொருள் ஆராய்ச்சியைத் தொடர வாழ்த்துகள். நன்றாக இருக்கும் போலும் ..

கபிலன் அருணாசலம் said...

தங்களின் பதிவு அருமை. சமயம் கிடைக்கும் பொது தாங்கள் சித்தன்ன வாசல், திருநெல்வேலி, மதுரை, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீ ரங்கம், சித்தர்களின் வரலாறு, பழயக்கோட்டைகள், கோவில்கள், கோவிலின் உள்ளே சிற்பங்கள் விளக்கும் கதைகள், ஓவியங்கள், ஓவியங்களை வரைய பயன்படுத்திய இயற்கை மூலிகைகள் அவற்றின் சாறுகள், மண்டபங்கள், போரிட்ட விதங்கள், கருவிகள், பழங்கால இசைக்கருவிகள் இவற்றை எல்லாம் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். அவசியம் தாங்கள் எழுதி அனைவருக்கும் தெரியபடுத்துமாறு வேண்டுகிறேன்..... நட்புடன் கபிலன் அருணாசலம், புதுவை.

Post a Comment