Tuesday, October 26, 2010

மதுரை சாம நத்தம் -3

  பெரியவர் வேகவேகமாக நடக்க , மதியம் வெயில் உச்சியில் அதுவும் செருப்பில்லாமல் நடக்கிறீர்களே என கேட்க நாற்பது வருடமாக செருப்பில்லாமல் பழகியாயிற்று .... பள்ளி வயதில் போட்டது ... ஒண்ணும் செய்யாது என சொல்லிக்கொண்டே தன் நடையுடன் பழைய நினைவுகளையும் வேகமாகவே பகிர்ந்துக் கொண்டார்.
                                          வேகமாகச் செல்லும் பெரியவர் சொக்கர்.

   திருஞானசம்பந்தர் தம் மூன்றாவது பதிகத்தில் சமணரை கீழ்க்கண்டவாறு சாடுகிறார்.

   தம்மை வணங்குபவருக்கு நிரம்ப ஆசிகளைச் சொல்லும் பண்பற்றவர்கள் சமணரும் சாக்கியரும் , சிவ நெறியில் சேராதவர்கள் , சிவநெறியில் செல்பவரை இகழ்ந்து அன்பில்லாது பேசுபவர். அவர் சொற்களை பொருட்படுத்த வேண்டா.

”ஆசியா ரமொழி யாரமண் சாக்கிய ரல்லா தவர் கூடி
எசியி ராமில ராய்மொழி செய்தவர் சொல்லைப் பொருளென் னேய்”

     இப்படி தம் சமயமே பெரியது என வாழ்ந்த  திருஞான சம்பந்தரின் சமயப் போரில் சமணர்களை கழுவேற்றம் செய்த  சாமநத்தம் கிராமம் இன்று அவரின் சிலையுடன் அவரை தெய்வமாகக் கருதி ஒரு கோவிலை கொண்டுள்ளது. இக் கோவில் கோபுரங்களில் சிவபுராணக் காட்சிகளும் , சிவனும் பார்வதியும் உள்ள சிலையும், முருகன் , விநாயகர் சிலையும் உள்ளன. அக்கோவிலை பராமரிக்க மன்னர் காலத்து இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு , அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இரண்டு வேளை பூசை நடைப்பெறுகிறது என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.


                    அருள்மிகு திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆலயக் கோபுரம்  


அய்யனார் கோவில் எல்லையில் இருக்க , அதை கீழ்தட்டு மக்கள் பராமரிக்கிறார்கள். கோவில பூட்டப்பட்டு இருக்கிறது. அக்காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் வரவே பயப்படுவார்கள் என சொல்லிக்கொண்டே .... இருளப்பன் கோவிலுக்கு காலனி குடியிருப்புகளுக்கு ஊடே நடந்துக்கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார்.

    கிராமத்துக் கதைகள் என்றாலே அதில் சாமிக் கலப்படம் உண்டு. அதுவும் காத்துக் கருப்பு கதைகள் மிகவும் சுவரசியமாக இருக்கும். அதுவும் பெரியவர்கள் வாயால் அவர்கள் பாணியில் கேட்பது நாமே அதில் பாதிக்கப்பட்ட விதமாக இருக்கும். இக் காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்த நிலையில் , சக்கரத்தைக் காலில் கட்டிக் கொண்டு இயங்கும் தனிக் குடும்பச் சூழலில் கதைகள் அவர்களின் தாத்தா பாட்டிப் போன்றே காணாமல் போயிற்று என்பதுடன் மறுக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை. இன்று பள்ளிகளிலும் கதைச் சொல்லும் ஆசிரியர்கள் அதிகமில்லை , மலிந்து வருகின்றனர்.

                                                         இருளப்பர் படுக்கை      

அந்தக் காலத்தில பெண்கள் இந்த பக்கமே வரப் பயப்படுவாங்க... அதுவும் தீட்டான சமயம் இங்கு தெரியாத்தனமாக வந்தா அவ்வளவு தான் முனி அடிச்சுடும் என்றார். இப்படி தான்தெரியாத்தனமாக வந்த பெண் (ஏதோ பெயர் கூறினார்) முனி அடித்து, அப்படியே ஸ்பாட்டிலேயே அவுட் என்றார். சிறுவனாக இருக்கும் போது இங்கு வரவே பயப்படுவோம் என்றார். இருளப்பன் வேட்டைக்குச் சென்று திரும்பிய பின் படுக்க , இது தான் அவனின் படுக்கை என பட்டியக் கல் மேடையை காட்டினார். மிகவும் பயப்பக்தியுடன் செருப்பைக் கழட்டி போட்டோ எடுத்துக் கொண்டேன்.

  இருளப்பன் கோவிலுக்கு அவர் விறு விறு என்று நடந்தார். நாங்களும் அவருக்கு ஈடாக நநக்க முடியவில்லை. கோவிலுக்கு உள்ளே உள்ள மரம் நீண்டுக் கொண்டு வள்ர்ந்து சென்றது. அதில் மணி கட்டப்பட்டு இருந்தது. அது உடை மரம் என்று சொன்னார்கள். அம்மரம் வானைப் பார்த்து உயரமாக வளராமல், நெடுக்காக நீண்டு வளரும் அதை வெட்டி வெட்டி உடைத்து விடுவதால், அதற்கு உடைமரம் என்று பெயர் வந்துள்ளது என்றார்கள்.

   அய்யனார் கோவில் எதிர்புறம் கண்மாய் இருந்தது. அதில் இக்கிராமத்தில் பயன்படும் அத்தனை அசுத்த தண்ணீரும் கலப்பதைப் பார்க்கும் போது வருத்தமளித்தது.
மேலும் முறையாக பயன்படுத்தாமல் பாசி ஏறி , தண்ணீர் பச்சை பசேல் என்று இருந்தது. இதை சமநத்தம் கிராம நிர்வாகம் கவனிக்காமல் , நவின முறையில் குளத்தை கழுவேற்றம் செய்கிறது. அப்பெரியவர் பார்வைக்கு எடுத்து சென்று , குடி நீர் அவசியத்தை கூறி விடைப்பெற்றேன்.

    கிராமம் ஒரு வரலாற்று சம்பவத்தை மறந்து , முட்களுடன் , ஒரு பிற்போக்கான கிராமமாக உள்ளதை பார்க்க அதிசயமாக இருக்கிறது. நாமே தேடி பிடித்து விசயத்தை சேகரிக்க வேண்டியுள்ளது,அப்படி இருக்க இன்றைய குழந்தைகள் பழைமையை மறந்து , அஞ்சா செஞ்சுடன் வாழ்வதால் எதுவும் பயனுண்டா?   (அய்யா சாமி....இதில் எந்த அரசியல் உள் குத்தும் இல்ல...நான் மதுரையில பிழைப்பு நடத்தனும் ...ஒரு ஆதங்கத்தில் வந்தா வார்த்தை ... நான் சொக்கு வீட்டில் கதை கேட்கும் போது அவர் பேரன் பய்மின்றி... எங்களை இடையூறு விளைவிக்கும் வண்ணம் பிளாஸ்டிக் குடத்தில் தாளமிட்டான் என்பதை தான் அஞ்சா நெஞ்சு என்றேன்)       

சாமநத்தத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. நிறைய சிறுசிறு கோவில்கள் உள்ளன. அவை சாதி ரீதியாக உள்ளதை பார்க்க முடிகிறது. சாயப்பட்டறை தொழில்கள் உள்ளன். ரைஸ் மில் கண்மாய்க்கு மறுபுறம் மெயின் ரோட்டில் உள்ளது. அனைவரும் மதுரை சார்ந்த தொழிலையே கொண்டுள்ளனர். சாலைகள் முறைப்படி பாராமரிக்க வில்லை என்றே படுகிறது. கிராம மக்கள் அன்பாக பழகுகிறார்கள் . மதம் சார்ந்த கிராமம் ஆதலால்  அன்பு சிறந்தரமாக  உள்ளது. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு மட்டுமே என்று அன்புடன் அடுத்த பயணம் ...  திருப்புவனம் சிவன் கோவில்...

                                                                               அடுத்து திருப்புவனம் சிவன் கோவில்....



 

7 comments:

ம.தி.சுதா said...

அருமையான தகவல் நன்றி சகோதரா..

அன்பரசன் said...

நல்லா போயிட்டிருக்கு உங்க பயணம்

எஸ்.கே said...

பயணங்கள் இனிமை! தொடரட்டும்!

pichaikaaran said...

நல்ல தொடர்..

இது முழுமையான தொடர் ஆனால்தான் , இந்த உழைப்புக்கு பயன் இருக்கும்..

அது என்ன முழுமை ?

வெகு நாள் முன்பு நடந்தவற்றை சொல்லும்போது, நம் கற்பனை , சொந்த விருப்பு வெறுப்பு கலந்து விடும்.
எனவே ஒருவர் ஒரு குறிப்பிட்ட கருத்தை சொல்லும்போது, அதற்கு எதிர் கருத்து என்ன என்பதையும் தெரிந்து கொள்ள முடியுமா என முயன்றால் நல்லது..

அதற்கு நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. வேறு யாராவது எதிர் கருத்தை ஆராய ஊக்கப்படுதுவதே உங்கள் எழுத்தின் வெற்றிதான்

G.M Balasubramaniam said...

உமது பனி தொடரட்டும் .வாழ்த்துகல்
i am not able to continue in Tamil, as I am not able to avoid spelling miatakes. all the best ,sir

சாமக்கோடங்கி said...

கிராம மணம் கமழ்கிறது..

மாதேவி said...

சாமநத்தம் கண்டுகொண்டோம்.

Post a Comment