Tuesday, October 19, 2010

மதுரை இராணுவ கண்காட்சி 2010

வழக்கம் போல இராணுவ கண்காட்சி 2010 காண என் பள்ளி செயலர்  திரு'பி. சௌந்தர பாண்டியனிடம் காலை பள்ளி வந்தவுடன் அனுமதி கோரினேன். என்ன திடீர்ன்னு என்று விளக்கம் கேட்டார். சார், இன்று கடைசி நாள் ஆகவே மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நூறு நபர்களை பார்க்க அழைத்து செல்ல அனுமதி வேண்டும் , படிப்பு மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது அதை தவிர பிற விசயங்களையும் நாம் அறிந்து கொள்ள உதவ வேண்டும் என்றேன். சரி , பள்ளி பேருந்தை எடுத்து பத்திராமாக அழைத்துச் செல்லுங்கள் என அனுமதிக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியாக காலைப்  பொழுது நன்றாகவே விடிந்தது. எங்கள் முலந்தைகள் பாக்கியம் செய்தவர்கள் எங்கள் பள்ளி நாடார் உறவின் முறையால் நடத்தப் படுகிறது . இதுவரை வந்த அனைத்து பள்ளி செயலரும் மிகவும் அருமையானவர்கள். அவர்களில் சௌந்தர பாண்டியன் எளிமையானவர் , இனிமையானவர்.  மாணவர்களுக்கு என்றால்   உடனே எதையும் செய்ய துடிப்பவர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்துவார்.
எந்த தமிழ் மீடியம் பள்ளிகளும் வராத இந்த ராணுவ கண்காட்சிக்கு எம்பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி கொடுத்த அவருக்கு இதன் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

                     மைதானத்தை நோக்கி விரையும் எம் பள்ளி மாணவர்கள்
 


                                                    இராணுவ வீரர்களின் சகாசங்கள் 

  
                           இராணுவ வீரர்களின் உடைகள் அன்றிலுருந்து இன்று வரை

                                     அந்தரங்கத்தில் சாகசம் செய்யும் இராணுவ வீரர்.
                                                         2023 mm  2 பி கன்

 மேலே படத்தில்  காட்டியுள்ள கன் ரஷ்ய தயாரிப்பாகும். இது முப்பது மி,மீ.கனமான இரும்பு தகட்டையும் துளைக்கும் சக்தி படைத்தது. ஒரு மணிக்கு 1080 மணி வேகத்தில் செல்லும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சக்தி படைத்தது. ஒரு வினாடியில் இருப்பத்தாறு முதல் முப்பத்தி மூன்று ரவைகள் வெளி வரும் . ஒரே சமயத்தில் இரண்டு குழலிலும் இருந்தது நாண்ணூறு ரவைகள் வெறியேறி எதிரிகளை தாக்க வல்லது .இதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முப்பத்தைந்து  முதல் நாற்பது வினாடிகள் மட்டும் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

                                                   இராணுவ ஆண் அழகர்கள்
        இது போல பாலங்கள் அமைப்பது சார்பாக விளக்கப் படங்களும் , சில பாலங்களும் மாடலுக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஜாமர் கருவிகள். பாம் எடுக்க உதவும் உடை , பாம் ஆபத்தில்லாமல் இயந்திரத்தின் உதவியுடன் எப்படி எடுப்பது என செயல் வடிவில் காட்டினர். துப்பாக்கிகளின் வகைகள் அவற்றை எப்படி இயக்குவது என்பதும் செய்து காட்டப்பட்டது. இராணுவ வீரர்களின் ஸ்டம்ப் கலைக்சன் மிகவும் அருமையான சேமிப்பு ஆகும்.  மாணவர்களை எளிதில் கவர்ந்தது. மதியம் உணவு பத்து ரூபாய்க்கு அற்புதமாக  பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டு வழங்கப் பட்டது. டி இரண்டு ருபாய்  ஐம்பது காசுக்கு வழங்கப் பட்டது .      
             இராணுவ வீரர்களின் கலரி சண்டை மிகவும் ஆக்ரோசமாக இருந்தது

          அங்குள்ள  பார செயிலிங் என் கல்லூரி கால நினைவுகளை தூண்டி விட்டன. இரண்டாம் ஆண்டு நேவியில் இருக்கும் பொது சரஸ்வதி நாராயன் கல்லூரில் பார செய்லிங் கேம்ப் அட்டன்ட் செய்ததும் அதில் முதல் முதலில் தைரியமாக நானே ஆர்வமாக பயணித்ததும் . ஜீப் முன்னே நாகர நான் பார சூட்டில் மேலே பறக்க கயிறு ஜீப்பிலிருந்து விடுவிக்க , மேலிருந்து கீழே இறங்க , கால்கள் சாய்த்து முட்டியில் அடிபடாது பக்கவாட்டில் லேண்ட்டாண அனுபவங்கள் என் கண் முன்னால் வந்து சென்றன.  
      இராணுவத்தில் காயமடைந்த முன்னால் படி வீரர்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்ட போது எடுத்தப் படம்


    மாணவர்களையும், பொது மக்களையும் இராணுவத்தில் இணைக்க இக் கண்காட்சி உதவியாக இருந்தது.இராணுவத்தின் நவீன தொழில் நுட்பத்தாலும் , இராணுவ வீரர்களின்  சாகசத்த்தாலும் பொது மக்கள் தங்கள் குழந்தைகளையும் பயமின்றி  இராணுவத்தில் பணிபுரிய தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.  
                        தாமரை பூ உருவாகும் முயற்சியில் இராணுவ வீரர்கள்.

   .
     ராணுவ வீரர்களின் மராட்டிய நடனம் . இது போரில் வெற்றி பெற்ற பின்பு நடைபெறும் களிப்பில் ஆடும் நடனம் இன்று கூறினர். மிகவும் அற்புதமாக பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.
  
                                              இராணுவ வீர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம்
       கண்காட்சி முடித்து வந்த ஒரு மாணவனுடன் பேசினேன். இதனை பற்றி கேட்டேன். அவன் சார் நானும் ஒரு ராணுவ வீரனாகி இந்திய நாட்டை காப்பாற்றுவேன் என்றான். இந்த கண்காட்சி ஏதோ ஒரு விதத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் இராணுவ பணியில் சேர்வது குறித்த மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை பார்க்க முடிகிறது
         ஆர்வமுடன் இராணுவ கண்காட்சியை காணச் செல்லும் எம் பள்ளி மாணவிகள்.

                          இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியதில்  நானும் என் மாணவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பது என் அதிர்ஷ்டம் ஆகும்.

                                                             ஜெய் ஹிந்த் .

10 comments:

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

பள்ளி மாணவர்களுக்காக - பல பயனுள்ள செயல்களை செய்யும் செயலர் மர்றும் தலைமை ஆசிரியர் ஆகியவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்ப்டன் சீனா

தருமி said...

//மாணவர்களிடம் இராணுவ பணியில் சேர்வது குறித்த மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை பார்க்க முடிகிறது//

அது மயக்கமில்லை, சரவணன். ஊக்கம்.

ஊக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியமைக்கு நன்றியும் பாராட்டுகளும்...

குமரன் (Kumaran) said...

திரு.சௌந்திரபாண்டியன் ஐயாவின் எளிமையையும் இனிமையான பழகுதலையும் மாணவர்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பையும் உங்கள் பள்ளிக்கு வந்த போது நேரில் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் சரவணன். உங்கள் பள்ளியும் மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த வகையில் கொடுத்து வைத்தவர்கள்.

எழுத்துப்பிழை: இராணுவ வீரர் அந்தரத்தில் சாகசம் செய்கிறார்; அந்தரங்கத்தில் இல்லை; பொருள் மாறுபாடு ஏற்பட்டுவிட்டது.

இராணுவக் கண்காட்சிப் படங்களும் விவரிப்புகளும் அருமை. நன்றி.

சிவசங்கர். said...

Ungal pani thodardhida vaazhthukkal!

'பரிவை' சே.குமார் said...

Photos arumai.

Nallathoru nikazvai azhakaai pakirnthirukkireergal.

vazhththukkal.

Jeyamaran said...

sir nalla muyarchi vaalthugal

அன்புடன் மலிக்கா said...

படங்களும் தகவல்களும் அருமை.

சுவாமிநாதன் said...

நேரில் பார்க்க முடியாததை தங்கள் மூலம் பார்த்த அனுபவம் ஏற்ப்படுகிறது. நன்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

இன்றைய மாணவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது.
புகைப்படங்கள் மிகவும் அருமை.

அதிரை தும்பி said...

நல்லதொரு பகிர்வு..

Post a Comment