ஓசோன் உடைத்து
புற, அக ஊதா கதிர் தாங்கி
அக்னி கக்கி
நேரடியாக விழுந்தால்
அலறும் பூமிப் போலத்தான் இருக்கும்
படிச்சவனின் சூதும் பாவமும்...!
தடம் புரண்டு உயிர் குடிக்கும் இரயில் போல
சாலை மறந்து சாவு வாங்கும் பேருந்து போல
ஓடுப்பாதை தவறி தரையிறங்கி
உயிர்களை தீக்கிரையாக்கும் விமானம் போல
விதிமறந்த செயலாகத்தான் இருக்கும்
படிச்சவனின் சூதும் பாவமும்...!
கனிக்குள் வண்டு இயற்கை
கனியும் இனிக்கும்
கனியே வண்டானால்
எப்படி இருக்கும்...
அப்படித்தான்
படிச்சவனின் சூதும் பாவமும்...!
படிச்சவனின் காதலிலும் சூது...
கற்பத்துடன் ...
அவனின்
வீடுகளின் முன்னால்
கண்ணீரும் கதறல்களுடனும்...
நீதி மன்ற வாசலில்
தர்ணா போராட்டத்தில்
பாவமாய் பாவம் சுமந்து
நித்தம் தொடருகிறது...!
சின்ன பிஞ்சுகள் கூட
சில்லரை கேட்கிறது
சின்ன முத்தம் கொடுக்க....
உறவுகள் கூட
உண்மையாய் உறவாட
உத்திரவாதம் கேட்க்கிறது
பருத்த பர்சுகளுக்காக...
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
குடும்பமும் விரோதமாய் தான் இருக்கும்..!
படிச்சவன் சூதும் பாவமும்
காலில் கடிக்கும் எறும்பை
நசுக்கி விட்டு
உயிர்களிடத்து அன்பு கொள்
என சித்தாந்தம் பேசும்...!
வெற்றுக் காகிதங்கள்
படிச்சவனின் கைகளில்
உயிர் பெறுவதைத் தவிர்த்து
கரண்சி காகிதங்களுக்காக
இரத்தக் கரையைச் சுமக்கின்றன...
இறந்தவனின் குடும்பம்
இவனின் சூதாலும் பாவத்தாலும்
தெருக்களில் அனாதைகளாய்
காகிதம் பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறது..!
படிச்சவனின் சூதும் பாவமும்
கல்விக் கூடங்களிலும்
ஆகவே தான் ...
சரஸ்வதியும்
நீதிதேவதைப் போன்று
கண்கள் மூடி
கரண்சிகளுக்கு அடிமையாய்...!
படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
அய்யோ வென்றுப்போவான்...
என பாரதி போல சொல்லி
அல்பாயுசில் சாக ஆசைப்படாததால்....
கைகள் கட்டி
வாய்கள் பொத்தி
கண்கள் மூடி
காதுகள் மறைத்து
வெகுஜனமாகவே
வாழ்கிறேன்...!
மன்னிக்கவும்
வாழ்கிறாம்..!
8 comments:
கனிக்குள் வண்டு இயற்கை
கனியும் இனிக்கும்
கனியே வண்டானால்
எப்படி இருக்கும்...
அப்படித்தான்
படிச்சவனின் சூதும் பாவமும்...!
......படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
அய்யோ வென்றுப்போவான்...
என பாரதி போல சொல்லி
அல்பாயுசில் சாக ஆசைப்படாததால்....
கைகள் கட்டி
வாய்கள் பொத்தி
கண்கள் மூடி
காதுகள் மறைத்து
வெகுஜனமாகவே
வாழ்கிறேன்...!
மன்னிக்கவும்
வாழ்கிறாம்..!
....... எனது மனசாட்சி சுட்டாலும், அதுதான் உண்மை.
நெஞ்சை சுடும் வரிகள் அசத்தல் ...
ஒவ்வொரு வரிகளிலும் கோபம் பட்டுத் தெறிக்கிறது.
அருமையான வரிகள்..
நல்லாயிருக்கு...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வரிகள் ஓவொன்றும் சுடுகின்றன .....
மன்னிக்கவும்
வாழ்கிறாம்..!
தவறு
மன்னிக்கவும்
வாழ்து கொண்டுதான் இருப்போம் .....
அருமையான கவிதை..வாழ்த்துக்கள் !!
உங்களுடைய கோபத்தை விட , வருத்தம்தான் அதிகம் என்பது புரிகிறது
அழகான படைப்பு
Post a Comment